பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன தெரியுமா !! அதை நிவர்த்தி செய்ய இதைவிட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது !!

சில பேரது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு தடையும் இருக்காது. ஆனால், சில பேரது வாழ்க்கையை, பார்த்தால் முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. தொடர் தோல்விகள், மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, எவ்வளவு பணம் வருமானம் வந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கை, இப்படி வாழ்க்கை பிரச்சனைகுள் ஒளிந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் அவரவர் குடும்ப ஜோசியரிடம், உங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய் காண்பித்தால் ஏதாவது தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்த்து சொல்லுவார்கள். அந்த வரிசையில், உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய, அந்த தோஷத்தினால் ஏற்படும் கூடிய தாக்குதல்களை குறைக்க, சுலபமான முறையில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் இந்த பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நிறைய பேருக்கு பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது என்பது தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. நம்முடைய அம்மாவை சரியாகப் பார்த்துக் கொள்ளாமல், உணவு அளிக்காமல் அவமானப்படுத்துவது, குருவுக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் இருப்பதும், கோவில் சொத்தை அபகரிப்பது, பசுவை வதைப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, அதர்ம பாதையைத் தேர்ந்தெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். பிராமணரை கொன்றாலும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது, ராவணனைக் கொன்றதால் ராமருக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி இருக்க, மனிதனாகப் பிறந்த நாம் இந்த தோஷத்திலிருந்து கட்டாயம் தப்பிக்க முடியாது. சரி உங்களுக்கு ஜாதகத்தில் இந்த பிரம்மஹத்தி தோஷம் இருந்தால், சுலபமான முறையில் என்ன பரிகாரம் செய்யலாம்.

வயதான ஏழைத் தம்பதிகளுக்கு வயிறார உணவு பரிமாறி, புதிய வஸ்திரங்களை எடுத்து கொடுத்து, அவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும். தினம் தோறும் ஒரு பசுமாட்டிற்கு பசுமையான அருகம் புல்லையும், சுத்தமான தண்ணீரையும் வைக்க வேண்டும். ஒரே ஒரு முறையாவது, சிவன் கோயிலுக்கு சென்று மனதார வேண்டிக்கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்தீர்கள் என்றால், பிரம்ம தோஷத்தினால் இருக்கக்கூடிய தாக்கம் கட்டாயம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகள் இருக்கக்கூடிய திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வது தோஷத்திற்கான தாக்கத்தை குறைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் கோவிலில், பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யப்படுகிறது. இது அனேகமாக நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்த கோவிலில் பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, இந்த கோவிலின் முன் வாசல் வழியாக நுழைந்து, பின் வாசல் வழியாக வெளியே வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே இருக்கும் தேவிபட்டினத்தில் கடலுக்குள் இருக்கும் நவக்கிரகங்களை வழிபாடு செய்து, கடலில் மூழ்கி நீராடி, அங்குள்ள பெருமாளை வழிபாடு செய்தாலும் மிகவும் கடுமையாக இருக்கக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், எல்லோராலும் அவ்வளவு தூரம் சென்று இந்த பரிகாரத்தை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்! அம்மாவாசை தினங்களில், மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று, சிவபெருமானை 5 முறை வலம் வர வேண்டும். இதேபோல் தொடர்ந்து 9 அமாவாசைக்கு செய்தால், பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக, தீராத பிரச்சனை இருந்து வருகிறது. நிம்மதியே இல்லாத வாழ்க்கை, என்ற சூழ்நிலை இருந்தாலும் கூட, மேற்குறிப்பிட்ட பரிகாரங்களை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம், உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.