புற்றுக்கு பால் ஊற்றும் பொழுது இனி இந்த விஷயத்தை மட்டும் செய்து விடாதீர்கள் !! ஒரு பலனும் இல்லை !!

புற்றுக்கு பால் ஊற்றும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. காலம் காலமாக பின்பற்றி வரும் இந்த ஆன்மீக பரிகாரம் எந்த அளவிற்கு சரியானது? என்பதை நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்! புற்றுக்கு பால் ஊற்றினால் பாம்பு அதை குடிக்குமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். பாம்பு பால், முட்டை எல்லாம் குடிக்காது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. பின்பு ஏன் புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள்? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதை அறிய இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உண்மையில் புற்றுக்குள் பாம்பு இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள். ஆம், புற்றுக்குள் நாகம் இருப்பது உண்மை தான். ஆனால் நீங்கள் புற்றினுள் பாலை ஊற்றினால் அதனால் எப்படி குடிக்க முடியும்? அது என்ன வாயை பிளந்து கொண்டு காத்து கொண்டிருக்குமா? சுற்றியிருக்கும் புற்று மண்ணானது அதனை உறிஞ்சிக் கொள்ளும் அல்லவா?

இதனால் ஒருவித துர்நாற்றம் வீசக்கூடும். உண்மையில் இதுவும் ஒரு பாவம் தான். ஆனால் இதில் சில நன்மைகள் கருதி தான் நம் முன்னோர்கள் இதை செய்து வந்தார்கள்.அந்த காலத்தில் எல்லாம் வீடுகள் அருகருகே இருப்பதில்லை. வீட்டை சுற்றிலும் கழனி காடாக இருந்ததால் ஆங்காங்கே பாம்புகள் புற்றுகள் கட்டி வைத்து விடும். இதனால் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமானது. பாம்பை பற்றிய பயமும் கிராம மக்களிடையே அதிகரித்தது. பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புற்றுக்குள் பால், முட்டை ஊற்றும் பழக்கத்தை கொண்டு வந்தனர். பெண் பாம்பின் மேல் ஒருவித வாசம் வருமாம். அது தான் ஆண் பாம்பை கவருமாம். பாலும், முட்டையும் அந்த வாசத்தை நீக்குவதால் பெருமளவு பாம்புகளின் இனப்பெருக்கம் கட்டுப்பட்டன. அறிவியல் கூறுவது போல் நீங்கள் புற்றுக்குள் பாலை ஊற்றினால் பாம்பு குடிக்கப் போவதில்லை. இப்போது பாம்புகளின் இனப்பெருக்க பிரச்சனையும் நமக்கு இல்லை. பின்பு ஏன் நாம் அதனை செய்ய வேண்டும்? என்று பலரும் கேட்கலாம். ஆன்மிக ரீதியாக பலவற்றிற்கு நம்மிடம் பதில் இல்லை. தெய்வ விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்கிறோம்.

அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் வீணாக போகிறது என்று நாம் கூறுவதில்லை. உண்மையில் அதை தெய்வங்கள் ஏற்றுக் கொள்கின்றன என்று நாம் ஆழமாக நம்புகிறோம். அதே போல் ஒரு விஷயம் தான் இந்த புற்றுக்கு பால் ஊற்றுவது என்பதும். புற்றுக்கு பால் ஊற்றுவது, முட்டை ஊற்றுவதால் சர்ப்ப தோஷங்கள் நீங்குவதாக ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் சர்ப்ப தோஷம் நீங்க நாகராஜாவிற்கு பால், முட்டை போன்றவற்றை கொண்டு போய் ஊற்றுகிறோம். இதனால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அது போல் இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருப்பது போன்ற சிலைக்கு மஞ்சள் தடவுவதால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த பாம்புகள் பின்னி கொண்டிருப்பது போல் கடைசி வரை ஒன்றாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. நீங்கள் வைக்கும் பாலினை நேரடியாக புற்றுக்குள் ஊற்றாமல் அப்படியே வெளியில் கொட்டாங்குச்சி போன்ற ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு வருவது மிகவும் நல்லது. இதனால் நாகராஜாவிற்கு செய்ய வேண்டிய பரிகாரமும் செய்தது போல் ஆகிவிடும். அந்தப் பாலை புற்றுக்குள் ஊற்றுவதால் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கும். புற்றுக்குள் இருக்கும் பாம்புகள், நாம் இது போல பாலும், முட்டையும் ஊற்றுவதால் சில இன்னல்களுக்கு ஆளாகும். இந்த பாவத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்? என்று ஆழமாக சிந்தியுங்கள்.