பூச்செடிகள் வளர்ப்பவர்கள் பூக்கள் உதிராமல் இருக்க பெரிய பூக்கள் பூக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா மட்டும் போதும் !!

பூச்செடிகள் வளர்ப்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். நிறைய வகை வகையான பூச்செடிகளை வளர்க்கும் பொழுது அதைப் பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. அதன் நிறமும், பசுமையும் மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கும். அதனால் தான் அதை வீடுகளிலும், தோட்டங்களிலும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ரோஜா, சாமந்தி, செம்பருத்தி, மல்லி, முல்லை போன்றவை அதிக அளவில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூச்செடிகள் செழுமையாக வளர்ந்தாலும் அதிலிருந்து பூக்கள் உதிர்வது சிலருக்கு அதிக அளவில் வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். எவ்வளவு வலிமையான உரமாக நீங்கள் போட்டு வைத்திருந்தாலும் செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்தால் செடிகளும் வாடி விடும் அல்லவா? அதற்காக இந்த சுலபமான வழி முறையை பின்பற்றி வாருங்கள்.

இதனால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு பெரிய பெரிய பூக்களாக மலர ஆரம்பித்து விடும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். பூச்செடிகளை பொறுத்தவரை பூக்கள் உதிராமல் இருப்பதற்கு தேவையான சத்து என்று பார்த்தால் மெக்னீசியம். மெக்னீசியம் குறைபாடு இருந்தால் பூக்கள் உதிர ஆரம்பிக்கும். நாளடைவில் பூச்செடி உலர ஆரம்பித்துவிடும். இந்த மெக்னீசிய குறைபாடு நீக்க நாம் பெரிதாக எதுவும் செலவு செய்யப் போவதில்லை. வீட்டில் இருக்கும் இந்த பொருள் மட்டும் இருந்தால் போதும். அது வேற ஒண்ணும் இல்லைங்க! நாம் தினமும் விரும்பி சாப்பிடுகின்ற வாழைப்பழம் தான். வாழைப்பழம் கூட தேவை இல்லை. அதை நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

அதனுடைய தோல் மட்டும் இருந்தால் உங்கள் வீட்டு பூச்செடிகள் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாழைப்பழத் தோல்களை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டஜன் வாழைப்பழ தோல் இருந்தால் போதும். அவற்றை சிறிது சிறிதாக கத்தரித்து போட்டுக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உங்கள் வீட்டு பூச்செடிகளுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சத்தாக இருக்கிறது. இதனுடன் சர்க்கரை சேர்க்கப்படாத பயன்படுத்திய டீ தூள் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.டீயில் சர்க்கரை போடாமல் வடிகட்டி விட்டு, கிடைக்கும் டீ தூளை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சத்துக்கள் எந்த வகையான செடி வகைகளுக்கும் ஊட்டசத்தாக அமையும். சர்க்கரை சேர்த்து இருந்தால் எறும்புகளும், பூச்சிகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதனால் தான் சர்க்கரை சேர்க்கப்படாத டீ தூள் தேவைப்படுகிறது. டீ தூள் இல்லையென்றால் இன்ஸ்டன்ட் காபி பவுடரை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து வாழைப்பழ தோலுடன் சேர்த்துக் நன்றாக மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் இந்த கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்கள் வீட்டு பூச்செடிகளுக்கு நேரடியாக ஊற்றாமல் வேர் பகுதிக்கு மட்டும் செல்லுமாறு செய்ய வேண்டும். எனவே தொட்டியின் ஓரத்தில் சிறிதளவு பள்ளம் தோண்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு இந்த கலவையை ஊற்றி மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். இது போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் போதும்! பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு பெரிய பெரிய பூக்களாக 10 நாட்களில் சூப்பராக உங்கள் வீட்டு பூச்செடிகள் வளர ஆரம்பித்து விடும். எப்போதும் பூச்செடிக்கு மண்கலவை காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மட்டும் சிறிது கவனித்துக் கொண்டால் எல்லா வகையான பூச்செடிகளையும் சுலபமாக பராமரித்து விடலாம்.