பெண்களுக்கு இருக்கக்கூடிய தீராத மன கஷ்டம் மனக் குழப்பம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் !! இந்த வழிபாட்டை 6 வாரங்கள் தொடர்ந்து செய்தால் !!

ஒரு வீட்டின் மகாலட்சுமி சொரூபமாக இருக்கும் பெண், எப்போதும் மன கஷ்டத்தோடு இருக்கக்கூடாது. அதாவது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லை. வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே வருகிறது. அல்லது வீட்டில் உள்ள உறுப்பினர்கள் தவறான பாதைக்கு சென்று விட்டார்கள், அல்லது பணக்கஷ்டம் மனக்கஷ்டம் இப்படி ஏதாவது ஒரு குழப்பத்தை நினைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அப்படி வீட்டுப் பெண்கள் கஷ்டப்பட்டால் அந்த குடும்பத்திற்கு ஆகாது. அவர்களுடைய மன கஷ்டமே அந்த குடும்பத்திற்கு பெரிய சாதகமாக மாறும். முடிந்தவரை, உங்களுடைய மன கவலைகளை இறைவனிடம் கொட்டி விட்டு, உங்களது மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் இறுக்கமான மனதோடு இருக்காதீர்கள். சரி, நீங்கள் உங்களுடைய மனக்கஷ்டத்தை தீர்த்துக் கொள்வதற்கான பரிகாரம் ஒன்றையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், 6 வெள்ளிக் கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இடையில் ஒரு வெள்ளிக்கிழமையில், இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மாதவிலக்கு நாட்கள் வரும் சமயங்களில் அந்த வாரத்தை தவிர்த்து விட்டு, அடுத்த வாரம் தொடர்ந்து செய்து கொள்ளலாம். மொத்தமாக கணக்கை மட்டும் ஆறு வாரங்கள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்தே, இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு மண் அகல் தீபத்தை புதியதாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த அகல் விளக்கில், இலுப்பை எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி, அந்த தீபத்தின் ஒளியில் உங்கள் வீட்டில் சுமங்கலியாக இறந்துபோன பெண்ணை மனதார நினைத்து, அந்த தீப ஒளியின் மூலம் அவர்களை பார்த்து, உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் கஷ்டத்தை சொல்லி, அந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இலுப்பை எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் எண்ணெய் தீபம் ஏற்றலாம். ஆறு வாரங்களும் இந்த பரிகாரம் முடிந்த பின்பு, உங்களால் முடிந்த சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் முடிந்தால் ரவிக்கைத்துணி வஸ்திரத்தை தானமாக வழங்கலாம். மூன்று பங்கு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் கூட போதும். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு, உங்களுக்கு இருக்கக்கூடிய மனக்கஷ்டம் நிச்சயம் குறையும்.

இந்த பரிகாரம் முடிந்த பின்பும் உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் தொடர்ந்து வரக்கூடாது என்று நினைப்பவர்கள், வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை பூஜை அறையில் வைத்து, அதன் பின்பு வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்ய வேண்டும். எப்போதுமே பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை வைக்கும்போது, காம்பு பகுதியை மேல் நோக்கிப் பார்த்தவாறு இருக்கும் படி வையுங்கள். வாரத்திற்கு ஒருமுறை பழைய எலுமிச்சை பழத்தை எடுத்து தூர போட்டுவிட்டு, புதிய எலுமிச்சை பழத்தை வைக்கவேண்டும். முடிந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று அம்பாளின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து, அந்த எலுமிச்சம் பழத்தைக் கொண்டு வந்து நம்முடைய வீட்டில் வைப்பது நமக்கு பல வகையில் நன்மை தரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யும் போது பெண்கள் மஞ்சள் நிற ஆடையை உடுத்திக் கொள்வது நல்லது. நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.