பெண்களே !! இனிமேல் உங்களுக்கு நகை எதற்கு ?? என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள் !! வாயை மூடிக் கொள்வார்கள் !!

பெண்கள் என்றாலே நகைகள் அணிவது என்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். ஆதிகாலம் முதல், மன்னாதி மன்னர்கள் காலத்தை எல்லாம் தாண்டி இன்றைய நவீன காலம் வரை பெண்கள் நகைகள் அணிவது தான் அழகுக்கு அழகு சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் பெண்கள் நகைகள் அணிவது அழகுக்காக மட்டுமல்ல அதில் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. பெண்கள் நகைகள் அணிவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னவென்று நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அதன்பிறகு உங்களுக்கு எதற்கு நகை? இந்தக் கேள்வியே கேட்க மாட்டீர்கள். நகைகளை விரும்பும் பெண்கள் பெரும்பான்மை வகித்தாலும் ஒரு சில பெண்களுக்கு நகைகள் அணிவது பிடிக்காத விஷயமாக இருக்கும்.

அது அவர்களுக்கு ஒரு பாரமாகவே தெரியும். அதனால் அவர்கள் நகைகள் அணிவதை புறக்கணிக்கிறார்கள். ஒரு சிலர் அதிக எடையுள்ள நகைகள் அணிந்தால், சிலர் எடையற்ற நகைகளை தேடித் தேடிப் போய் வாங்கி குவிக்கின்றனர். இப்படி இரு வேறு பெண்கள் இருந்தாலும் நகைகள் அணிவது மட்டும் பொதுவாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் அணியும் தங்க நகைகள் உடல் வெப்பத்தை நீங்க செய்து உடலை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு உதவுகிறது. இதனால் பலதரப்பட்ட நோய்கள் நீங்குவதாக கூறப்படுகிறது. பெண்களின் உடலில் நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்து மாத்திரைகளை விட, இந்த நகைகள் பெரும் பங்கு வகிக்கிறது. தங்க நகை மட்டுமல்லாமல், வெள்ளி நகைகள், முத்து, ரத்தினங்கள் போன்றவையும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயன் தருமாம். தங்கத்திற்கு இணையாக வெள்ளியும் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதத்தில் உதவி செய்யும். வெள்ளி கொலுசு கால்களில் அணிவதால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நாம் கண்காணிப்பதற்கும், அந்த ஓசையால் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு உற்சாகத்தோடு இருப்பதற்கும் தான்.தங்கத்தில் கொலுசு அணியக் கூடாது என்பதற்கு ஆன்மீக காரணங்கள் உண்டு. தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அதை கால்களில் அணியக் கூடாது என்கிறார்கள். வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொள்ளும் பொழுது உடலின் சூட்டை குறைத்து, குளிர்ச்சி ஏற்பட்டு இதனால் ஆயுள் விருத்தி அடையும் என்கிறார்கள். மேலும் வெள்ளிக்கொலுசு பெண்களின் குதிகால்களை தொட்டுக்கொண்டே இருக்கும் ஒரு நகை ஆகும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய தன்மை உண்டு.

ஒரு சிறு விஷயத்திற்கு கூட பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் வெள்ளி கொலுசு அணிவதால் குதிகால்களில் இருக்கும் வர்மபுள்ளி தூண்டப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பு பகுதியை எச்சரிக்கை செய்து உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. இது போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் நகைகள் பயன் தருவதால் பெண்கள் நகைகள் அணிவது நல்லது தான். இதற்கு பிறகும் யாராவது உங்களுக்கு எதற்கு நகை என்ற கேள்வியை கேட்பார்களா? நகைகள் அணிவது அழகு, ஆடம்பரத்தை தாண்டி ஆரோக்கியமும் இருப்பது தான் உண்மை. மற்றவர்களின் பார்வையை உங்கள் திருப்ப அதிக நகை அணிவது ஆபத்தை தரும். ஆடம்பரத்திற்கு நகை அணிவதை தவிர்த்து உங்களின் ஆரோக்கியதிற்கு தேவையான நகைகள் அணிந்து கொண்டு நலம் பெறுங்கள்.