பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா ?? தவறா ?? ஸ்டிக்கர் பொட்டு ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது ??

இப்போது இருக்கும் நவீன காலத்தில் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதே மிகப்பெரிய விஷயமாக தான் இருக்கிறது. அதில் இந்த பொட்டை வைத்துக் கொள்ளாதே! அந்தப் பொட்டை வைத்துக் கொள்ளாதே! என்று கூறினால் நிச்சயம் அதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஸ்டிக்கர் பொட்டாவது வைத்துக் கொள்கிறார்களே என்று பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியது தான். வேறு வழி இல்லை. ஆனால் பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா? தவறா? அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்றால் அது ஏன்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.. ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது அல்லது குங்கும பொட்டு வைத்துக் கொள்வது இரண்டில் எது சிறந்தது? என்று கேட்டால், ஆண்கள் பெண்கள் என்று எல்லோருமே குங்குமப்பொட்டு தான் சிறந்தது என்று எளிதாக கூறி விடுவீர்கள். ஏனெனில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வதில் நிறைய நன்மைகள் ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இல்லை. எந்த பெண் நெற்றியில் குங்குமத்தால் பொட்டு வைத்துக் கொள்கிறாளோ, அவளிடம் எத்தகைய தீய சக்திகளும் நெருங்குவதற்கு கூட பயப்படும் என்பது உண்மை. இரு புருவங்களுக்கு இடையில் பெண்களுக்கு மாபெரும் வசிய சக்தியை உண்டாக்கக் கூடிய வர்மப் புள்ளி இருக்கிறது. அந்த இடத்தில் பொட்டு வைப்பதால் அந்த வசிய சக்தி செயலிழந்து போகிறது. பெண்களுக்கு இயல்பாகவே துணிச்சலும் தைரியமும் இதனால் உண்டாகிறது என்பது அறிவியல் உண்மை. மேலும் இதனால் பெண்களை வசியப்படுத்தும் எந்த விதமான துஷ்ட கண்களும் தன் பலத்தை இழந்து பஸ்பமாகி விடுகிறது. எனவே பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கலாம். குங்குமம் என்பது சுண்ணாம்பு, மஞ்சள், படிகாரம் ஆகிய கிருமி நாசினியாக விளங்கும் பொருட்களைக் கொண்டு சுத்தமான முறையில் தயார் செய்ததாக இருக்க வேண்டும். அத்தகைய குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லும் பொழுது அதன் மேல் படும் சூரிய ஒளிக்கதிர்களினால் மூலிகை சக்தி ஏற்பட்டு உடலுக்கு நன்மைகள் பல செய்யப்படுமாம்.

புருவங்களுக்கு மத்திம பகுதியில் வைத்துக் கொள்வதால் அங்கிருக்கும் வர்ம புள்ளி தூண்டப்பட்டு, மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளுக்கு உண்டாகும் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியூட்டும் ஆற்றல் கொண்டதாம். அதனால் சாதாரண ஸ்டிக்கர் பொட்டை விட குங்குமத்தால் ஒரு பெண் பொட்டு வைத்துக் கொள்வதால் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நிறைய நன்மைகள் உண்டாகும். அந்தக் காலத்தில் எல்லாம் யாரும் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டதே கிடையாது. உங்களுடைய தாய்மாராக இருந்தாலும் சரி, பாட்டிமாராக இருந்தாலும் சரி, அதற்கு முந்தைய தலைமுறையினரையும் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும். ஆனால் தற்போதைய காலத்தில் ஒரு சிலரை தவிர வயதானவர்கள் கூட ஸ்டிக்கர் பொட்டு தான் வைக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதால் அலர்ஜியும், அரிப்பும் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு. பெண்ணானவள் நிறைந்த நெற்றியுடன் குங்குமம் வைத்துக் கொண்டு இருந்தால் பார்ப்பவர் கண்களுக்கு மங்களமான தோற்றம் உண்டாகும். இதனால் உங்களை பார்ப்பவர்களுடைய மனமும் சஞ்சலம் இல்லாமல் தெளிவாக இருக்கும். அமைதி மற்றும் உடல் நல நன்மைக்காகவும் ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமத்தை சூடிக் கொள்ளலாம் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.