பைரவ வாகனமான நாயை வைத்து சகுன சாஸ்திரம் மனிதர்களுக்கு கூறுவது என்ன தெரியுமா ?? சுவாரஸ்யமான தோதிட பலன்கள் !!

பொதுவாக பூனையை சகுன சாஸ்திரத்தில் அபசகுணமாக கூறப்படுகிறது. ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் போகிற செயலில் தடை ஏற்படும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது. அதே போல் பைரவரின் வாகனமாக விளங்கக் கூடிய நாய், சகுன சாஸ்திரம் படி, சுபசகுணமாக கூறப்படுகிறது. இவ்வகையில் நாய், மனிதர்களுக்கு எந்த மாதிரியான ஆருடத்தை பலனாக கூறும் என்ற ஸ்வாரஸ்ய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது ஜாதகப்படி நீங்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்களை நாய் கடித்துவிட்டால் அந்த தோஷம் நீங்கி விடுமாம். பைரவரின் அருள் கிடைக்கப் பெற்று அந்த கண்டத்தில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்வீர்கள். இந்த காலத்தில் நாய் கடித்தால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.

ரேபிஸ் போன்ற கொடிய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அக்கால ஆருடத்தில் இது நல்ல பலன் சொல்கிறது. நீங்கள் நல்ல காரியத்திற்காக சென்று கொண்டிருக்கும் போது மனதில் ஒரு எண்ணம் தோன்றும். செல்லும் காரியம் வெற்றி பெறுமா? இல்லை தோல்வியுறுமா? என்று. அப்போது கட்டப்படாத நாய் உங்கள் கண்களில் பட்டால் அந்த நாயை பாருங்கள். அது உங்களை பார்த்து 7 முறை குறைத்தால் நீங்கள் செல்லும் காரியம் அமோக வெற்றி தான். 7 க்கு மேலே குறைத்தால் தோல்வி அடையும் என்கிறது சகுன சாஸ்திரம். 7 க்கு கீழே குறைத்தால் ஆருடம் பலிக்காது. அதுவே நீங்கள் பார்க்கும் நாய் கட்டப்பட்டு குறைத்தால் இந்த கணக்கு எல்லாம் பொருந்தாதாம். இந்த நாய் வால் ஆட்டினால் நடக்கும் செயல் நன்மையில் முடியுமாம். நாயின் உருவப்படம் கூட ஆருடம் சொல்லுமாம். ஒரு காரியம் நடக்குமா? நடக்காதா? என்று குழப்பமான மன நிலையில் இருக்கும் போது நாய் உருவ படம் எங்கேனும், ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பார்க்க நேர்ந்தால் கட்டாயம் வெற்றி தானாம்.

தொலைகாட்சி, தொலைபேசி, கணினி, புத்தகம் என்று எந்த ரூபத்திலும் நாயை நீங்கள் பார்த்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தது போல தான். நீங்கள் பெண் பார்க்க செல்கிறீர்கள் என்றால் போகிற வழியில் நாய்கள் கூட்டமாக குறைத்து கொள்ளாமல் விளையாடி கொண்டு இருப்பதை பார்க்க நேர்ந்தால் பெண் அமைந்து விடும் என்கிறது ஆருடம். அதே போல் கொடுத்த கடன் வசூலிக்க செல்லும் போது இரு நாய்கள் காதல் கொண்டிருந்தால் வாராக் கடனும் எளிதில் வசூலாகிவிடும் என்கிறது சகுன சாஸ்திரம். நாய் தன் குட்டியுடன் எதிரில் வருகிறது என்றால் நீங்கள் புதியதாக வாங்க நினைத்திருக்கும் பொருள் கட்டாயம் வாங்கி விடுவீர்கள் என்று அர்த்தமாம். வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் நாய் நன்றாக இருந்தால் உங்கள் வீடு வறுமையின் பிடியில் என்றும் சிக்காதாம். வளமுடன் எப்போதும் இருக்க முடியும்.

அந்த நாய் சில நேரத்தில் திடீரென வித்யாசமாக செயல்பட்டால் அதாவது குரலில் மாற்றம் காணுதல், சரியாக சாப்பிடாமல் இருப்பது, மேலே உத்திரத்தை அடிக்கடி பார்ப்பது போன்றவற்றை செய்தால் வீட்டில் யாருக்காவது நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கேட்கும் செல்ல நாய் திடீரென கேட்காமல் அடம் பிடித்தால் உங்களுக்கு சோதனை வரும் காலம் நெருங்குவதை உணர்த்துகிறது. அதே போல உங்கள் நாய் வீட்டை விட்டு சென்று விட்டால் கடன் தொல்லையில் சிக்க போகிறீர்கள் என்று அர்த்தம். வழக்கு, பஞ்சாயத்து என்று எதிரிகளை பார்க்க செல்லும் போது நாய்கள் கூட்டமாக சண்டை இட்டு கொண்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் எதிரிகள் தொல்லை ஓயும். நாய் என்பது பைரவருக்கு உரிய அம்சமாகும். பாதுகாப்பிற்கு மனிதனை நம்புவதை விட நாயை நம்புவது மேல். அந்த அளவிற்கு நன்றி மறவா தெய்வீக அம்சம் பொருந்திய நாய் ஆருடத்திலும் பங்கு கொள்கிறது என்பது வியக்கத் தக்க விஷயம் தான். நாயை வைத்து ஆருடம் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் பார்க்கும் நாய்க்கு 3 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குட்டி நாய் ஆருடதிற்கு பொருந்தாது என்கிறது சகுன சாஸ்திரம்.