போதும் போதும் என்கிற அளவிற்கு பணத்தை சம்பாதிக்க இந்த 7 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று நீங்களும் தெரிஞ்சிக்கோங்க ??

பொதுவாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று வாஸ்து ஜோதிடத்தில் சில ரகசிய குறிப்புகள் உள்ளன. இந்தந்த பொருட்களை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பார்கள். அதே போல் சில பொருட்களை சில இடத்தில் வைப்பதும், நாம் அடிக்கடி பார்க்கும் வண்ணம் வைப்பதும், பணம் வைக்கும் இடத்தில் சிலவற்றை போட்டு வைப்பதும் இன்னும் அதிகமான பணத்தை நமக்கு ஈட்டித் தரும் அல்லது ஈர்த்து தரும் என்பது நம்பிக்கை. அந்த வரிசையில் இந்த 7 பொருட்களுக்கு பணம் ஈர்க்கும் தன்மை இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. அது என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலாவதாக பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி மிளகிற்கு உண்டு. மிளகு உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வீக, ஆன்மீக காரியங்களுக்கும் பயன்படும் அற்புதமான ஒரு மூலிகை என்று சொல்லலாம்.

ஆனால் அதற்கு பணத்தை ஈர்க்கும் தன்மையும் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முதலில் பணத்தை ஈர்ப்பது என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். பணத்தை ஈர்த்தல் என்பதற்கு காந்தம் போல் பணத்தை எங்கிருந்தோ ஈர்த்து கொண்டு வருவது அல்ல. இந்த பொருட்களை நீங்கள் பார்க்கும் பொழுதோ அல்லது உடன் வைத்துக் கொள்வதாலோ வரவேண்டிய பணம் வசூலாகும். நீங்கள் நியாயமாக சம்பாதித்த பணம் கிடைக்க வேண்டிய நேரத்தில் சரியாக கிடைக்கும். அதே போல் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் சம்பாதிக்கும், வாய்ப்பை தக்க சமயத்தில் உங்கள் திறமைக்கேற்ப நிச்சயம் கிடைக்கும். இப்படியாக ஏதோ ஒரு வழியில் உங்களுக்கு வேண்டிய பணம் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கப் பெறும் என்பதையே பணத்தை ஈர்த்தல் என்று கூறுகிறார்கள்.

இந்த மிளகை ஏழு மிளகு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில் மடித்து உங்களுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பெண்கள் தங்களது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவதாக இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய உடல் வலிமை ஆகி மூளை செயல்பாடு அதிகரித்து, ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் பணத்தை ஈர்க்கக் கூடிய வசிய சக்தி உண்டாகுமாம். மூன்றாவதாக கிராம்பு இருக்கிறது. கிராம்பை நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் தெரியும் படி போட்டு வைக்க வேண்டும். அதே போல் பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் பணத்துடன் சேர்த்து 2 அல்லது 3 கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும். நான்காவதாக ஜாதிக்காயை உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது உங்களுடன் ஜாதிக்காயை ஏதாவது ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஜாதிக்காயும் பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்பார்கள் பணம் வசூலிக்க செல்லும் பொழுது ஜாதிக்காயை எடுத்து சென்றால் வெற்றியுடன் திரும்பி வருவீர்கள்.

ஐந்தாவதாக லவங்க பட்டைக்கு அதிக பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்கிற குறிப்புகள் உண்டு. உங்கள் பர்சில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் ஒன்று சேர்த்து எப்போதும் வைத்துக் கொள்ளலாம் அதனுடன் துளசி இலையையும், புதினா இலையையும் ஒவ்வொன்று வைத்துக் கொள்ளலாம். லவங்க பட்டையுடன் பச்சை கற்பூரம் சேர்த்தும் வைத்துக் கொள்ளலாம். ஆறாவதாக ஓமம் உள்ளது. ஓமத்தை தினமும் சிறிதளவேணும் உணவில் சேர்த்து வருவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் உடுத்திய துணிகளை அலசும் பொழுது அதில் சிறிதளவு ஓமத்தை போட்டு அலசினால் பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி உண்டாகும். அந்த வாசத்திற்கு உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் பெருகுமாம். இறுதியாக துளசி இலைகள் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். துஷ்ட சக்திகளையும், கண் திருஷ்டியையும் போக்க வல்ல துளசியிலை உங்கள் வீட்டில் நீங்கள் வளர்ப்பதும், அதை சிறிதளவேனும் உங்கள் பூஜை அறையிலும், வரவேற்பறையில் அனைவரும் பார்க்கும்படி ஒரு கண்ணாடி பௌலில் போட்டு வைப்பது பணத்தை ஈர்க்கும் ஆற்றலை பெருக்குமாம். மேலே கூறிய இந்த ஏழு பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய விசேஷ சக்திகள் இருப்பதாக ரகசிய குறிப்புகள் கூறுகின்றன. இதை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாம்.