மண் இல்லை என்றால் கூட பரவா இல்லை உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை வளர்க்கலாம் !! பூச்சி மருந்து தெளிக்காத ஆரோக்கியமான, வெந்தயக்கீரை வேண்டும் என்றால் இப்படி பண்ணுங்க !!

வெந்தயக்கீரையை சமையலில் சேர்த்துக் கொள்வது, நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பத்து ரூபாய் கொடுத்தால், கடையிலிருந்து வெந்தயக்கீரையை நம்மால் வாங்க முடியும். ஆனால், ஆர்கானிக் வெந்தயக் கீரையை, நம் வீட்டிலேயே வளரச் செய்து, அதை சமைத்துச் சாப்பிடுவதில் இருக்கக்கூடிய மனத்திருப்தி, எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கிய, கீரையிலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் மண் இல்லை என்றாலும் பரவாயில்லை, தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை. 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் மட்டும் போதும். வெந்தயக்கீரையை நம் வீட்டிலேயே, 8 நாட்களில் வளரச் செய்து விடலாம், அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் காலியான ஸ்வீட் டப்பா அல்லது பேரிச்சபழம் டப்பா இருந்தால், கூட அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூடி தேவையில்லை.

அந்த டப்பாவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அகலமாக இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில், நான்கிலிருந்து ஐந்து டிஷ்யூ பேப்பரை, விரித்து வைத்து விடுங்கள். மண்ணிற்கு பதிலாக பயன்படுத்தபோவது டிஷ்யூ பேப்பரை தான்! டிஷ்யூ பேப்பர் இல்லாதவர்கள், மெல்லிய காட்டன் துணியை கூட பயன்படுத்தலாம். சரி, அகலமான பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மேல் 5 டிஷ்யூ பேப்பரை விரித்துக் கொள்ள வேண்டும். அந்த டிஷ்யூ பேப்பர் நனையும் அளவிற்கு மேலே தண்ணீரை தெளித்து விட வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை எல்லாம் நன்றாக வடிகட்டி விட்டு, வெறும் வெந்தயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அகலமான பிளாஸ்டிக் டப்பாவின் மேல், விரித்து வைத்திருக்கும் ஈரமான டிஷ்யூ பேப்பரின் மேல், ஊறிய வெந்தயத்தை பரவலாக தூவி விட வேண்டும். அதன்பின்பு, தூவிய வெந்தயத்தின் மேல் பக்கத்திலும், டிஷ்யூ பேப்பரை வைத்து லேசாக மூடி விடுங்கள். மேலே மூடப்பட்ட டிஷ்யூ பேப்பரிலும், லேசாக தண்ணீர் தெளித்து விட வேண்டும்.

மேலே போட்ட, டிஷ்யூ பேப்பரை ரொம்பவும் அழுத்தி விடாதீர்கள். செடி முளைத்து மேலே எழும்ப கஷ்டப்படும். செடியை விதைத்த இரண்டாவது நாள், மூன்றாவது நாள், நான்காவது நாள், இப்படி தொடர்ந்து, மேலே உள்ள டிஷ்யூ பேப்பரை எடுத்து உள்ளே வெந்தய விதையில், லேசாக தண்ணீர் தெளித்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். தண்ணீர் தெளித்த பின்பு, மீண்டும் மேலே டிஷ்யூ பேப்பரை போட்டு மூடிவிட வேண்டும். டிஷ்யூ பேப்பரை போட்டு மூடிய பின்பு, டிஷ்யூ வின் மேல் பகுதியிலும் லேசாக தண்ணீர் ஸ்ப்ரே செய்யுங்கள். தண்ணீரை, நிறைய ஊற்றி விடக்கூடாது. ஸ்ப்ரே செய்து விட்டால் மட்டும் போதும். வெந்தயத்தை, விதைத்த நான்காம் நாளில் இருந்து, மேலே டிஷ்யூ பேப்பரை மூட வேண்டாம். மீதமுள்ள நான்கிலிருந்து ஐந்து நாட்களும், வெந்தய விதையின் மேலே தண்ணீரை மட்டும் தெளித்து வந்தாலே போதும். செடி, மொத்தமாக 8 நாட்களுக்குள் நன்றாக வளர்ந்திருக்கும்.

8 நாட்களுக்கு மேல், செடியை பிளாஸ்டிக் டப்பாவில் விட்டு வைக்கக்கூடாது. டப்பாவின் அடியில் இருக்கும் டிஷ்யூ பேப்பரை, ஒரு கரண்டி வைத்து தூக்கி விட்டீர்கள், என்றால், அப்படியே செடி மொத்தமாக வெளியே வந்துவிடும். கத்தரிக்கோலால் அறுவடை செய்து, தண்ணீரில் போட்டு, நன்றாக கழுவி சமையலுக்கு பயன்படுத்தி விடலாம். இந்த செடியை வெய்யிலில் கூட வைக்க வேண்டாம் வீட்டிற்குள் வளர்த்தாலே நன்றாக வளரும். இந்த வெந்தயக்கீரையை சப்பாத்தி மாவில் போட்டு பிசைந்து சப்பாத்தியும் செய்யலாம். புளி குழம்பு வைக்கலாம். பருப்பு போட்டு கடைந்தும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வெந்தய கீரையை மண்ணில்லாமல் உங்கள் வீட்டில் ஒரு முறை விதைத்து தான் பாருங்களேன்!