மனதில் எப்போதும் தீராத கஷ்டங்கள் இருந்து கொண்டே உள்ளதா !! உங்கள் வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள் கஷ்டங்கள் பறந்தோடும் !!

மனக்குறை தீர எவ்வளவு கோவில், குளம் என்று சுற்றினாலும் மனதில் அமைதி பிறக்கவில்லையா? அப்படினா வீட்டில் வாரம் ஒருமுறை இதுபோல் செய்து வாருங்கள். எவ்வளவு கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் அது விரைவில் தீரும். நம்முடைய வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வீட்டுப் பிரச்சினை வெளியில் சென்றால் அது இன்னும் பெரிதாக மாறுமே தவிர கட்டாயம் குறையப் போவதில்லை. மற்றவர்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும். அது ஒன்று தான் மிச்சம் என்பது போல் ஆகிவிடும். அதனால் தான் பெரியவர்கள் குடும்ப பிரச்சினைகளை குடும்பத்திற்குள் வைத்து முடிக்க சொல்லுவார்கள். குடும்பத்தில் இருக்கும் எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, வாரம் ஒரு முறை இது போல் செய்யுங்கள்.

அது எந்த கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை. இந்தக் கிழமையில் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். வீட்டு வாசலில் பலரும் உருளி வைப்பது வழக்கமாக நாம் பார்த்திருப்போம் அல்லவா? அதே போல தாங்க! உருளி என்பது வாஸ்துபடி பணத்தை, செல்வத்தை அதிகரிக்க செய்யும் ஒரு சூட்சும பரிகாரம். அது போல் இதுவும் மனக்குறைகளை, மன கஷ்டங்களை, வீட்டுப் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் பரிகாரமாக அமைய இருக்கிறது. பித்தளை அல்லது செம்பினால் ஆன பாத்திரம், தட்டு போன்ற ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். அந்த நீரின் மேல் வேப்ப இலைகளை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு சுற்றிலும் மிதக்க விடுங்கள். நடுவில் செவ்வரளி மலர்களை வையுங்கள். செவ்வரளி மலர்கள் தோஷங்களை போக்க வல்லது.

பைரவர், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் தோஷம் நீங்க செவ்வரளி மலர் சிறந்த பரிகாரமாக இருக்கும். அதனால் இந்தப் பூவை வேப்பிலையை சுற்றிலும் வைத்து விட்டு நடுவில் இதை வையுங்கள். இப்போது உங்களுக்கு உருளி போன்ற அம்சம் கிடைக்கும். இதை வீட்டு வாசலில் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் படி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு வாரம் வரை இதை அப்படியே வைத்து மறுவாரம் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி வாரா வாரம் செய்து வர உங்களுடைய குடும்ப கஷ்டங்கள், பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இடையே சதா பிரச்சனைகள் இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் பிரச்சனை பெரிதாகி கொண்டே இருக்கும்.

சிலரது வீட்டில் என்ன தான் நல்லது செய்தாலும் மாமியார் மருமகள் பிரச்சனை குடும்பத்தை இரண்டாக்கி கொண்டிருக்கும். இவர்களால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மன நிம்மதி கெடும். பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அது போன்ற சமயத்தில் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் வரும். இப்படியாக எந்த பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் மன நிம்மதியை மீட்டு தர இந்த பரிகாரம் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். உங்கள் மேல் இருக்கும் துஷ்ட ஆற்றல்கள் முழுவதையும் நீக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க கூடிய தன்மை இந்த பரிகாரம் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம். வாரம் ஒரு முறை இதை செய்து மன நிம்மதியை தேடிக் கொள்ளுங்கள்.