மனபயம் மனக்கவலை எதிர்மறை எண்ணம் நீங்க, ஐந்து நிமிடம் போதும் !! இதோடு சேர்த்து வாழ்நாள் முழுவதும் இளமையான வாழ்க்கையையும் வாழலாம் !!

இன்றைய சூழ்நிலையில் தேவையற்ற மன பயமும், தேவையற்ற கவலைகளும், எதிர்மறை எண்ணங்களும் தான் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இது நடந்து விடுமோ? அது நடந்து விடுமோ? என்ற பயத்தின் மூலமாகவே நம்முடைய மன அழுத்தமானது அதிகரித்து விடுகிறது. இதோடு சேர்த்து, ‘நமக்கு மட்டும் தான் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனை இருக்கின்றது. அடுத்தவர்களை போல் நம்மால் வாழ முடியவில்லையே!’ என்ற ஏக்கம். எந்த நேரமும் ‘அடுத்தவர்களால், மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது? நம்மால் மட்டும் எதையும் செய்ய முடியவில்லையே’ என்ற அனாவசியமான சிந்தனை! நம்முடைய வாழ்க்கை முன்னேறாமல் போவதற்கு இந்த எண்ணங்கள் எல்லாம் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய எண்ண அலைகளானது, நேர்மறையாகவும், சந்தோஷமாகவும், பயம் அற்றதாகவும், இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்மை சுற்றி இருக்கும், நம் கண்ணுக்குத் தெரியாத, வட்டத்தை நாம் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது?

என்பதைப் பற்றியும், அந்த வட்டமானது பலப்படுத்த பிடித்த பின்பு, நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அடுத்தவர்களைப் பற்றிய எந்த எண்ணத்தையும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல், கண்களை மூடிக்கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு, உங்களை சுற்றி உங்களது மனக்கண்ணால் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அந்த வட்டமானது எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பச்சை பசேலென்று இயற்கையாக இருக்க வேண்டும். மலையிலிருந்து அருவி கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இவை அனைத்தும் ஒரு கற்பனைதான்! இந்தக் கற்பனையை எப்படி கொண்டு வருவது? “புளிப்பு சுவைகொண்ட ஊறுகாயை பார்க்கும்போது, நமது நாக்கில் எச்சில் ஊறுவது இயற்கைதான். பக்கத்து வீட்டில் வைக்கும் குழம்பு வாசம் கமகம என்று வீசும் போது நமது வயிறு பசிப்பது இயற்கைதான்!” நம்மை சுற்றி இருக்கக் கூடிய வாசத்தினுடைய பாதிப்பு, நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது அல்லவா?

அதே போல், உங்களை சுற்றி நீங்கள் போடப் போகின்ற, இந்த வட்டத்தின் தாக்கம் கட்டாயம் உங்களிடம் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தரையில் ஒரு துண்டு விரித்து, சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டு, உங்கள் கையில் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் மட்டும் சேர்த்துக் கொண்டு, மற்ற மூன்று விரல்களை விரித்து கொண்டு, இரண்டு கரங்களையும் தொடை மேல் வைத்துக் கொண்டு, தியான நிலையில் அமர்ந்து விடுங்கள். உங்களைப் சுற்றி ஒரு வட்டத்தை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள். அதில் உங்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கப் போகிறது என்பதையும், கெட்ட எண்ணங்கள் என்றைக்கும் உங்கள் மனதில் ஏற்படாது என்பதையும், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது என்பதையும், அந்த வட்டத்திற்குள் நன்றாகப் பதிய வைத்து விடுங்கள். கட்டாயம் அந்த வட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கை சூழலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் கற்பனையே! அதன் பின்பு ஏழுமுறை உங்களது மூச்சை உள் வாங்கி வெளிவிட வேண்டும். (எவ்வளவு தூரம் உள் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

எவ்வளவு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டுமா அவ்வளவு மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.) இவை அனைத்தும் நீங்கள் போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு வட்டத்திற்குள் தான் நடக்க வேண்டும். மொத்தமாக இதை செய்து முடிப்பதற்கு 5 நிமிடங்களே போதும். 5 நிமிடங்கள் கழித்த பின்பு அந்த வட்டத்தை விட்டு நீங்கள் வெளியே வரப்போவதில்லை. அந்த வட்டத்தோடு தான் இனி நீங்கள் உங்களது வாழ்க்கையை தொடர போகிறீர்கள். உங்களை சுற்றி இருக்கும் அந்த நேர்மறை எண்ணமானது, அடுத்தவர்களுடைய எதிர்மறை எண்ணத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்காது. உங்களுடைய மனதிற்கு தேவையற்ற பயம் ஏற்படாது. எந்த ஒரு நோய் நொடியும் உங்களை தாக்காது. மன அமைதி ஏற்படும். இளமையோடு உங்களது வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த வழி. இவை எல்லாவற்றையும் தாண்டி, நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் அந்த வட்டமானது, உங்கள் உடம்பில் இருக்கும் சக்கரத்தை சீராக இயக்க வைக்க ஆரம்பித்து விடும். ஒரு நாள் செய்யும் பட்சத்தில், இந்த பயிற்சியில் பலன் அடைந்து விட முடியுமா? என்பது சந்தேகம்தான். உங்களுடைய வாழ்நாள் பயிற்சியாக இதை மாற்றிக்கொண்டு பாருங்கள்! உங்களை சுற்றி நீங்கள் போட்டிருக்கும் அந்த வட்டம் எவ்வளவு பலப்படுகிறதோ, அந்த அளவுக்கு உங்களது வாழ்க்கை வளமானதாக மாறும். தொடர்ந்து இப்படி செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றமானது, இமயமலையை விட ஒருபடி அதிகமாக உயரத்தைத் தொடும் என்று சொன்னால் கூட, அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.