மருதாணியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்தால் என்னவெல்லாம் அதிசயம் நடக்கும் உங்களுக்கு தெரியுமா ??

மருதாணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மருதாணி இலைச்சாறை கொண்டு நம் முன்னோர்கள் செய்து வந்த அற்புதமான விஷயங்களை சொல்லலாம். இயற்கையாகவே மருதாணிக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒவ்வொருவர் வீட்டிலும் மருதாணி செடி வளர்ப்பது எந்த அளவிற்கு நன்மைகளை அளிக்கும் என்பதை இந்த பதிவே உங்களுக்கு உணர்த்தும் படியாக இருக்கும். மருதாணியின் அற்புத ரகசியங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். மருதாணிக்கு சீதாதேவி வரம் அளித்ததாக புராணங்கள் உள்ளன. மறுபுறம் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக மருதாணி பார்க்கப்படுகிறது.

மருதாணியின் பூக்களில் ஸ்ரீதேவியின் சகோதரியும், காய்களில் ஸ்ரீதேவியும் இருப்பதாக ஐதீகம் ஒன்று உள்ளது. அத்தகைய மருதாணி இலையை அரைத்து மகாலட்சுமிக்கு தீபம் செய்து வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றினால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும் என்பார்கள். அது போல் அதன் இலைச்சாறை கொண்டு ‘ஸ்வஸ்திக் சின்னம்’ வரைந்து வைத்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மருதாணி இலையை அரைத்து பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் வலம்புரி பக்கமாக ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் வரைந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். அது போல் ஒரு பேப்பரில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து வைத்து அதை ஒரு டப்பாவில் போட்டு கொள்ள வேண்டும். லாபம் என்று அதன் மேல் எழுதிக் கொள்ள வேண்டும். அந்த டப்பாவில் தினமும் சிறிதளவு சில்லரை நோட்டுகளை போட்டு வர வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகை தினமும் போட்டு வர வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு இதில் நீங்கள் சேமித்து வரும் பணமானது அந்த குறிக்கோளை நிச்சயம் அடைய வைக்கும் என்பது நம்பிக்கை.

உதாரணத்திற்கு நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்கிற நினைப்போடு அதில் பணம் சேர்த்துக் கொண்டே வந்தால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விரைவாக அதில் பணம் சேர்ந்து விடும். இப்படி எதுவாக வேண்டுமானாலும் நீங்கள் வேண்டிக் கொள்ளலாம். கடன் தீர வேண்டும், ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும், பிடித்த பொருள் வாங்க வேண்டும் என்று எப்படி ஆக வேண்டுமானாலும் உங்களது ஆசைகளை மனதில் வைத்து இந்த சின்னத்தின் மேல் நீங்கள் சேமித்து வரும் பணம் வெகு விரைவாக சேரும் என்பது நம்பிக்கை. ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இதன் அற்புதத்தை நீங்களே வியந்து பார்ப்பீர்கள். இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி செடியின் பூக்கள் நல்ல பலன் தரும். மருதாணி பூக்களை சிறிதளவு எடுத்துக் கொண்டு நீங்கள் தூங்க செல்லும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். அதன் வாசம், மற்றும் அதீத சக்தி உங்களை தூக்க நிலைக்கு உடனடியாக அழைத்துச் செல்லும். இதனால் நிம்மதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

கண்திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்கள் உங்களை பாதித்திருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு மருதாணி விதைகளை நெருப்பில் போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க வையுங்கள். மேற்கூறிய அத்தனை பாதிப்புகளும் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். எகிப்தில் இருக்கும் மம்மிகளுக்கு சுற்றப்பட்டிருக்கும் துணிகள் மருதாணி இலை சாறை கொண்டு நனைக்கப்பட்டவை என்கிற ஆராய்ச்சி முடிவுகளும் மருதாணியின் வியக்க வைக்கும் அதிசயங்களை உலகிற்கு எடுத்துரைக்கிறது. தினமும் மருதாணி வைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிட்டும் என்பதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் உஷ்ணம் குறைந்து அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் நீங்கி உடல் குளிர்ச்சியடையும். மன அழுத்தம் இருப்பவர்கள் நிச்சயம் மருதாணியை வைத்துக் கொள்ளலாம். இது மிகச் சிறந்த தீர்வாக உங்களுக்கு இருக்கும். இப்படியாக மருதாணியில் இருக்கும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. மருதாணி இலையை கெட்டியாக அரைத்து அதில் தீபம் போல் செய்து நெய் ஊற்றி வெற்றிலையில் வைத்து இரண்டு மருதாணி இலை தீபங்கள் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஏற்றி வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் குடும்பத்தின் சுபிட்சத்திற்கு மருதாணி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.