மற்றவர்களுக்கு இந்த சாமி படங்களை எல்லாம் நீங்கள் பரிசாக கொடுப்பதால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா ??

பொதுவாக ஒரு விசேஷம் அல்லது விழா என்று வரும் பொழுது மனதிற்குப் பிடித்த பொருட்களை நாம் பரிசாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம் தான். அதில் குறிப்பாக திருமண வைபவங்களுக்கும், பிறந்தநாள் விழாவிற்கு அல்லது புதுமனை கட்டி குடியேறுபவர்களுக்கும் பெரும்பாலும் பரிசுப் பொருட்களாக அழகிய தெய்வ படங்களை கொடுப்பது வழக்கம். இது போன்ற தெய்வ படங்களை கொடுப்பதற்கு சில விதி விலக்குகளும் உண்டு. அதைப் பற்றிய விரிவான அலசலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் எந்த படத்தை வாங்கி கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் மகாலட்சுமி தேவி உருவம் பதித்த படங்களை நாம் மற்றவர்களுக்கு பரிசாக அல்லது தானமாகவும் கொடுக்கக்கூடாது.

மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதியாக விளங்குவதால் மகாலட்சுமி படத்தை எப்பொழுதும் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடாது. குபேரன், ஸ்ரீ லட்சுமி குபேரன், மகாலட்சுமி இது போன்ற படங்களை எல்லாம் எந்த வகையிலும் நம் கையிலிருந்து மற்றவர்களுக்கு செல்லக் கூடாது. இதனால் நமக்கு வர இருக்கும் அதிர்ஷ்டங்கள் அவர்களுக்கு சென்று விடுமாம். அந்த வகையில் இந்த மாதிரி ஒரு படத்தை நாம் தாராளமாக மற்றவர்களுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவும் கொடுக்கலாம். அப்படி நாம் இந்த படத்தை கொடுப்பதன் மூலம் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெறும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது என்ன அப்படி ஒரு படம் என்று கேட்பது புரிகிறது. எந்த சாமியாக இருந்தாலும் அதில் தம்பதியராக இருக்கும் படத்தை நாம் பரிசாக தாராளமாக அளிக்கலாம்.

ஸ்ரீ ராதையும் கிருஷ்ணனும் இருப்பது போல் இருக்கும் படத்தை, சிவனுடன் பார்வதி சேர்ந்து இருக்கும் படத்தை, தாயாருடன் பெருமாள் இருக்கும் படத்தை இது போல் தம்பதியராக இருக்கும் படத்தை நாம் மற்றவர்களுக்கு தானமாகவும், பரிசாகவும் கொடுப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல விதமான மாறுதல்கள் உண்டாகும். நாம் கொடுத்த அந்த படத்தை அவர்கள் வணங்கி வருவதன் மூலம் அவர்களுக்கும், நமக்கும் நிறைய நன்மைகள் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். அதுபோல் கோவில்களுக்கு நாம் தானமாக தெய்வ விக்கிரகங்களை அளிக்கலாம். இதுபோல் தெய்வ விக்கிரகங்களை நாம் கொடையாக கோவில்களுக்கு கொடுக்கும் பொழுது அதில் முழுவதுமாக நம்முடைய பங்கு மட்டும் நிச்சயம் இருக்கக் கூடாது.

ஒரு சிறு தொகையாவது மற்றவர்களுடைய பணமும் அதில் சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆலயங்களுக்கு தெய்வ விக்கிரகங்கள் நாம் அளிப்பதன் மூலம் தீராத பிரச்சனைகள் நம் வாழ்க்கையை விட்டு தீர்ந்து ஒழியும் என்பது நம்பிக்கை. கோவில்களுக்கு உங்களால் என்ன முடியுமோ அதை நீங்கள் தாராளமாக கொடுத்து உதவலாம். கோவில்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய சிறிய பல்புகள் முதல் விக்ரகங்களுக்கு சாற்றப்படும் ஆபரணங்கள் வரை நம்மால் என்ன முடியுமோ நம்முடைய தகுதிக்கேற்ப நாம் தானம் கொடுப்பதன் மூலம் நம்முடைய கர்மவினைகள் தீரும் என்பது சாஸ்திர குறிப்புகள் கூறும் உண்மையாகும். நாம் செய்த பாவங்களை எல்லாம் இதுபோல சிறுசிறு தானங்கள் செய்து புண்ணியமாக மாற்றிக் கொள்வது நம்முடைய பிறவி பயனாக அமையும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாமல் மற்றவர்களுக்கு அல்லது ஆலயங்களுக்கு நீங்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு உதவி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும்.