முகூர்த்த நேரத்தில் தம்பதிகளாக நீங்கள் உடுத்திருந்த ஆடையை, பீரோவில் இப்படி வைக்கவே கூடாது !! பிரச்சனைகளுக்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் !!

நம்முடைய சாத்திரப்படி, நாம் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது பரிகாரம் செய்வதிலிருந்து, பாதிப்பு ஏற்படுத்தும் வரை, நாம் அணிந்திருக்கும் ஆடைகளால், நமக்கு நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். தோஷம் தீர ஒருவரால் கோவிலுக்கு சென்று பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும், அந்த நபருடைய தோஷம் தீர வேண்டும் என்று, அவர் அணிந்திருந்த துணியை எடுத்துக் கொண்டுபோய், வேறு ஒருவர், அதாவது, உறவினர்கள் கூட அந்த பரிகாரத்தை செய்வார்கள். இதேபோல்தான் ஒருவருக்கு கெட்டது செய்ய வேண்டும் என்றாலும், அவர்கள் அணிந்திருந்த உடையை எடுத்துக்கொண்டு போய், தவறான செயல்களை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே, நாம் அணிந்திருக்கும் ஆடை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நம்முடைய வாழ்க்கையில் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைப்பது என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான். அந்த திருமணத்தின் போது மணமகன், மணமகள் இவர்கள் இருவரது ஆடையை முடிச்சுப் போட்டு, அக்கினியை வலம் வர வைப்பார்கள்.

இந்த இடத்திலும், நம்முடைய ஆடைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தம்பதிகள் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை முடிச்சுப் போடுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படும் அந்த முகூர்த்த ஆடைகளை, உங்கள் வீட்டு பீரோவில் எப்படி வைத்திருக்கிறீர்கள்? உங்கள் கணவரின் முகூர்த்த வேட்டி சட்டை தனியாக இருக்கும். மனைவி அணிந்திருந்த கூரை புடவையாக இருந்தாலும் சரி, பட்டுப்புடவையாக இருந்தாலும் சரி, அதுவும் கட்டாயம் தனியாகத்தான் இருக்கும். நீங்கள் அணிந்திருந்த ஆடைகள் இப்படி தனித்தனியாக இருப்பதைவிட, அந்த இரண்டு ஆடைகளையும், அதாவது வேட்டி, புடவை இவை இரண்டையும் எடித்து, ஒரு மஞ்சள் பையில் போட்டு, ஒன்றாக வைப்பது மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது திருமணக்கோலத்தில் மணமகன், மணமகள் இவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடை, எப்போதுமே நம் வீட்டில் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதனால், கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரித்து, பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் குறையும். பிரச்சனைகளை சுத்தமாக வராது என்று கூறமுடியாது. பிரச்சனைகள் இருந்தால் தான் அது வாழ்க்கை! ஆக, பிரிந்திருக்கும் கணவன் மனைவியின் முகூர்த்த ஆடையை, ஒன்றாக வைக்கும் பட்சத்தில்கூட அவர்கள், மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. முயற்சி செய்து பாருங்கள்! உங்கள் வீட்டிலும் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், பிரித்து வைத்திருக்கும் முகூர்த்த ஆடைகளை இன்றே, ஒன்றாக சேர்த்து, ஒரு மஞ்சள் துணி பையில் போட்டு வைத்து விடுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் திருமண நாள் அன்றாவது அந்த ஆடைகளை அணிவது, மனமகிழ்ச்சியை தரும். அதுவே மன நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஒரு சில பேரது வீட்டில், தம்பதியினருக்கு குழந்தை பிறந்ததும், அந்த வேட்டியிலோ அல்லது கூறைப்புடவை இருந்தால் அந்தப் புடவையிலோ, தூளி கட்டி போடும் வழக்கத்தை கூட வைத்திருப்பார்கள்!

இப்படி செய்யும் பட்சத்தில், இதுவும் மிக நல்லதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தூளி கட்டிய புடவையை, மீண்டும் துவைத்து, பத்திரப்படுத்தி, வேட்டியோடு சேர்த்து வைப்பதுதான் நல்லது. இறுதியாக ஒரு கருத்து. அந்த காலத்தில் கணவன் சாப்பிட்ட தட்டில், மனைவி சாப்பிட்டது போக, இந்த காலகட்டத்தில் கணவன் துணியோடு சேர்த்து, மனைவி துணிகளை ஒன்றாகப் போட்டு துவைக்க கூட யோசிக்கிறார்கள்! கணவன் உபயோகப்படுத்திய துண்டை, மனைவி உபயோகப்படுத்தகூட யோசிக்கிறார்கள். எப்படி கிடைக்கும் நிறைவான வாழ்க்கை! மனைவிக்கு வயிறு வலி என்றால் கூட, அது கணவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதுதான் நிறைவான வாழ்க்கையாக இருக்கும். திருமணமான பின்பு கணவன் வேறு இல்லை. மனைவி வேறு இல்லை. இருவரும் ஒன்றுதான் என்ற காலம் மாறி, கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை இன்று உருவாகிவிட்டது.