முடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி அடர்த்தியாக வளர பத்து நிமிட முத்திரை பயிற்சி செய்தால் போதும் !!

முடி உதிர்வது என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒருவருடைய அழகை மேலும் கூட்டிக் காட்டுவது சிகை அலங்காரத்தில் தான் உள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நூற்றில் என்பது பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக இருப்பது உண்ணும் உணவு மற்றும் மன அழுத்தம். பரபரப்பான உலகில் ஒரு மெஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஓய்வு என்பதே குறைந்துவிட்டது. இதனால் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து பிரச்சனையாக உருவெடுக்கிறது. முத்திரைகள் மூலம் பல பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டுவர முடியும். அதில் தலைமுடி உதிர்வது தடுக்கவும், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் செழித்து வளரவும் இந்த பயிற்சியை செய்தால் போதுமானது.

அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இப்பதிவில் காணலாம். நம் கை விரல்களில் பஞ்ச பூத சக்திகள் உண்டு. அவற்றில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் கொண்டுள்ளது. தியானம் மேற்கொள்பவர்கள் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து முத்திரை நிலைக்கு வருவார்கள். இதனால் மூளை தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படும். மனதை அமைதிபடுத்த தினமும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் மேற்கொள்வது சிறந்த பயிற்சியாக இருக்கும். உரசு முத்திரை: தலை முடியை வளரச் செய்யும் செல்களை தூண்ட இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் குறைந்து போவதே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரம்பத்திலேயே முடி உதிர்வதை சாதாரணமாக விட்டுவிடாமல் பிரச்சனையாக எடுத்து கொள்வதே நல்லது.

தீவிரம் அடையும் போது தான் பலர் கவலைபட்டு கண்ட கண்ட எண்ணெயை வாங்கி உபயோகித்து பலன் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இரண்டு விரல்களிலும் இருக்கும் நகங்களை கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் காட்டியவாறு உரச வேண்டும். குறைந்தது 10 நிமிடமாவது தொடர்ந்து இந்த பயிற்சியை செய்வது நல்லது. சீரான வேகத்தில் நகங்களை உரசி கொண்டிருப்பதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி இழந்த முடி வளர்ச்சியை தூண்டிவிட முடியும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு இழந்த முடியை திரும்பவும் முளைக்க செய்யும். இந்த பயிற்சியை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் எதுவும் சாப்பிடக் கூடாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு உரசு முத்திரை என்று பெயர். அக்கு பிரஷர் முறை: தலை முடி உதிர்வுக்கு அக்கு பிரஷர் முறையிலும் தீர்வு காண முடியும்.

அக்கு பிரஷர் முறையில் கை விரல்களில் தலையின் பாகங்களை தூண்டி விடக் கூடிய பாயிண்ட்கள் உள்ளது. பத்து விரல்களிலும் உள்ள நுனிப் பகுதியை கைகளை எடுக்காமல் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். விரலின் நுனிப் பகுதியின் மேல் பாகத்தில் 14 முறையும், பக்கவாட்டில் 14 முறையும் இதே போல் கைகளை எடுக்காமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். பத்து விரல்களிலும் தினமும் 3 முறை இது போல் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை செய்து விட்டு, பின்னர் 2 டம்ளர் தண்ணீர் குடித்து கொள்ளவும். பிறகு உங்களுக்கு நேரம் இருக்கும் போது இரண்டு முறை செய்யவும். இவ்வாறு செய்வதால் தலை முடி வேகமாக வளரும். தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து கொண்டே வந்தால் நிச்சயம் நல்ல பலன் விரவில் கண் கூடாக பார்க்கலாம் என்பது பலரும் பலன் கண்ட உண்மை. பக்க விளைவுகள் ஏதும் இல்லாத சிறந்த பயிற்சிகளை செய்து நன்மை அடையுங்கள்.