முருகக் கடவுளை இப்படி வழிபாடு செய்து பாருங்கள் !! பல வருடங்களாக உங்கள் குடும்பத்திற்கு இருந்து வரும் தீராத பிரச்சனைகள் ஆறு வாரங்களில் தீரும் !!

எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு தரும் வழிபாடு என்றால், அது முருகப்பெருமானின் வழிபாடு என்றே சொல்லலாம். தீராத துயரை உடனே தீர்த்து வைக்கும் கடவுள்தான் முருகப்பெருமான். உங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக, ஒரு சில பிரச்சனைகள் தீராமல் வளர்ந்து வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு கணவன்-மனைவிக்குள் பேச்சுவார்த்தை இல்லாமலிருப்பது, மகன் தந்தையிடம் பேசாமல் இருப்பது, நீண்ட நாட்களாக வரன் பார்த்தும், தன்னுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது, தீராத நோயால் அவதிப்பட்டு வருவது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, இப்படியாக பல வருடங்களாக உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய, வெளியே சொல்ல முடியாத, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர, முருகப்பெருமானை இந்த முறையில் பூஜை செய்து, வழிபாடு செய்யுங்கள்.

கட்டாயமாக 6 வாரங்களே போதும்! உங்களது கஷ்டம் தீர்வதற்கு வழி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் முருகப் பெருமானின் திரு உருவ படத்தை நன்றாக துடைத்து, சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். சிகப்பு அரளி பூ கிடைத்தால், அதை சூட்டலாம். கிடைக்காத பட்சத்தில், வேறு ஏதும் வாசனை பூவை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு ஒரு கண்ணாடி டம்ளரில், முழுமையாக தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு வெட்டிவேர் போட்டு, ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு முருகன் படத்திற்கு முன்னால் வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு அடுத்ததாக மாயிலை தீபம் ஏற்ற வேண்டும்.

மாமரத்தில் இருந்து எடுத்து வந்த மாயையை சுத்தமான தண்ணீரில் கழுவி, முருகப் பெருமானின் திரு உருவ படத்திற்கு முன்பு வைக்கவேண்டும். ஒரு மாஇலை போதும். காம்புப் பகுதி முருகப் பெருமானை பார்த்தவாறு வைத்துவிடுங்கள். ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொண்டு, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த தீபத்தை, மலையின் மேல் வைத்து, தீபச்சுடர் முருகப்பெருமானை பார்த்தவாறு ஏற்ற வேண்டும். அவ்வளவுதான். தீபத்தை ஏற்றி வைத்து விட்டு 5 நிமிடம் கண்களை மூடி முருகப் பெருமானை நினைத்து உங்கள் வேண்டுதல்களை வையுங்கள். இந்த பரிகாரத்தை இதே முறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று செய்யுங்கள்.

ஒவ்வொரு வாரமும் பூஜை முடிந்தவுடன், அடுத்த நாள் டம்ளரில் உள்ள எலுமிச்சை பழத்தை எடுத்து உங்கள் வீட்டை சுற்றி திருஷ்டி கழுத்து போட்டுவிடலாம். அதே வெட்டிவேரை 6 வாரமும் பயன்படுத்திக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் முருகப்பெருமானுக்கு இந்த முறையில் பூஜை செய்து உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டத்திற்கு தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு வழிபாடும் செய்யக்கூடாது. நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் எந்த ஒரு பரிகாரத்திற்கு கைமேல் பலன் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவு செய்து கொள்ளலாம்.