மூன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்தால் உங்கள் பண கஷ்டத்திற்கும் மன கஷ்டத்திற்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் !!

நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வந்து விட்டால், கூடவே மன கஷ்டமும், வீட்டிலுள்ளவர்களிடத்தில் மனஸ்தாபமும் ஏற்பட ஆரம்பிக்கும். அதிகப்படியான பணவரவு இல்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப பணவரவு ஒரு வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு வீட்டில் சுலபமான முறையில் பெண்கள் என்ன பூஜையை, வெள்ளிக்கிழமை அன்று எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீட்டில், வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் இந்த பூஜையை செய்ய தொடங்க வேண்டும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு வாழை இலையை போட்டு, அதன் மேல் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அதன்மேல் ஒரு மண் அகல் விளக்கில் கல்லுப்பைக் முழுமையாக நிரப்பிக்கொள்ள வேண்டும். கல் உப்பின் மேல் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான வாசனை மிகுந்த ஏலக்காய் 3, கிராம்பு 3, பச்சைகற்பூரம் 3, இவை அனைத்தையும் வைத்து விட வேண்டும். 108 மல்லிகைப்பூக்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 108 அம்மன் போற்றிகள் வரிகளையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, வாசனையான தூக்கத்தையும் ஏற்றிவைத்துவிட்டு, தயாராக வைத்திருக்கும் ஒவ்வொரு மல்லிகைப்பூவை எடுத்து, பச்சரிசியின் மேலிருக்கும் உப்பிற்கு 108 முறை, 108 அம்மனின் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

கட்டாயம், பால் ஏலக்காய் சேர்த்த வெள்ளை நிற பால் பாயாசம் செய்து மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜையை முடித்துவிட்டு மனதார உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை பூஜை முடிந்ததும் பூஜை அறையில் எல்லா பொருட்களும் அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜைஅறையில் பூஜைக்கு வைத்த பச்சரிசியை பொங்கல் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

உப்பின் மேல் வைத்த ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் மூன்றையும் எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். இதே பூஜையை மூன்று வாரம் தொடர்ந்து செய்து, மூன்று வாரம் பூஜை செய்யப்பட்ட வாசனையுள்ள இந்த மூன்று பொருட்களையும் உங்களது பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பாவை திறந்தபடி உங்கள் பீரோவில் வைக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். இப்படி நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனைகளுக்கும், மற்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வழி கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.