யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் இன்னும் 5 வருடங்களுக்கு ஓய்வு என்ற பேச்சிக்கே இடமில்லை என கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் தான் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் ரசிக்கப்படுபவர் என்றால் அது மிகை ஆகாது அவர் ஓய்வு பெறுவது குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்து வருகிறது அதற்கு பதில் அளிக்கும் விதமாக பவுலர்களின் பந்துக்களை வெளியே அனுப்புவேன தவிற நான் போக மாட்டேன் என்பதை போல் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஓய்வே கிடையாது என தெரிவிதிதுள்ளார்.

41 வயதாகும் கிறிஸ் கெய்ல் 2021 டி20 உலக கோப்பை முடிந்த பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது துபாயில் நடைப்பெற்று கொண்டிருக்கும் யுகேசி என்கிற (அல்டிமேட் கிரிக்கெட் சேலஞ்ச்) கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் போட்டிக்கு இடையே வர்ணனையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கிறிஸ் கெய்ல் இன்னும் 5 வருடம் விளையாட இருப்பதாக கூறினார் அப்படி என்றால் அவர் இன்னும் இரண்டு உலக கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்கப்படகிறது.

துபாயில் நடைபெறும் யுகேசி போட்டியில் இந்திய ஆல்ரவுன்டரான யுவராஜ்சிங் மற்றும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆன்ட்ரே ரசல் கெவின் பீட்டர்சன் ரஷித் கான் ஆகியோருடன் கிறிஸ் கெய்லும் விளையாடுகிறார் இப்போட்டி 2 இன்னிங்ஸாக பிரித்து ஒருவருக்கு ஒரு இன்னிங்ஸில் 15 பந்துகள் வீசப்படும் அதில் பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டால் 5 ரன்கள் குறைக்கப்படும் இரு இன்னிங்ஸையும் சோ்த்து யார் அதிக ரன்கள் எடுக்கின்றாறோ அவரே வெற்றி பெறுவார்.

இப்போட்டி குறித்து கிறிஸ் கெய்லிடம் கேட்ட போது கிரிக்கெட்டில் வித்தியாசமான முயற்ச்சி என்னை எப்போதும் கவரும் என்றும் ஆனாலும் இது மிகவும் மாறுப்பட்டு உள்ளரங்கில் விளையாடுகிற போட்டி இதுவும் தனக்கு பிடித்திருப்பதாக கூறினார். முன்னதாக நடைப்பெற்ற ஐபிஎல் 2020ல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் ஆரம்ப போட்டிகளில் களமிறக்க படாமல் இருந்தாலும் களமிறங்கிய பின் சூராவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடிய கிறிஸ் கெய்ல் 288 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.