யோசிக்காமல் இந்த 3 தெய்வங்களையும் நினைத்து, இந்த விளக்கை இன்னைக்கே ஏத்திருங்க !! நீங்க என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும் !!

நம் வேண்டிய வரங்களை, உடனே பெறுவதற்கு, சில அற்புத நாள்கள், சில சமயங்களில் மட்டுமே வரும். அப்படிப்பட்ட ஒரு அற்புத நாள் இன்று! என்று கூட வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர இறைவனிடம் இன்றையதினம் மனதார வேண்டுதலை, இந்த முறையில் வைத்து பாருங்கள். நீங்கள் வேண்டிய வரங்களை, இல்லை என்று சொல்லாமல், கட்டாயம் அள்ளி அள்ளி கொடுப்பார். உண்மையான பக்தியும், எளிமையான வழிபாட்டையும் இன்றைய தினத்தில் நாம் எப்படி செய்யப் போகிறோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தற்சமயம் புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்று சங்கட சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரமும், இணைந்து வந்திருக்கின்றது.

முருகர், விநாயகர், பெருமாள் இந்த மூன்று பேரையும் ஒரே தினத்தில் வழிபாடு செய்து, அருளாசியை பெறக் கூடிய அற்புதமான தினம் தான் இன்றைய தினம். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. உங்களால் விநாயகருக்கு மனநிறைவாக எளிமையாக எந்த பூஜையை செய்ய முடியுமோ அதை, கோவிலுக்கு சென்றும் செய்யலாம். வீட்டில் இருந்தபடியேவும் செய்யலாம். உண்மையான பக்திக்கு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் கடவுள்தான் முருகப்பெருமான். உண்மையான பக்தியோடு இரு கைகளை கூப்பி, அவனை வழிபட்டாலும் இன்றைய தினம், கை நிறைய வரங்களை அள்ளித் தருவார் என்பதில் சந்தேகமே கிடையாது.

புரட்டாசி மாதத்தில், எந்த தினத்தில் பெருமாளை வழிபாடு செய்தாலும் அதனுடைய பலன் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் உறுதி தான். உங்களுடைய வாழ்க்கையில் எந்த தடைகளும் இருக்கக்கூடாது என்று நினைத்து, முதலில் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலையை சாத்தி விடுங்கள். முருகப்பெருமானுக்கும் அரளிப்பூ அல்லது முல்லைப் பூவால் அலங்காரம் செய்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்தபடியாக நீங்கள் இதுநாள்வரை பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய குலதெய்வம் பெருமாளாக இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்றைய தினம் சனிக்கிழமை தினம் இல்லை என்றாலும் பரவாயில்லை, இந்த நன்னாளில் பெருமாளையும் நினைத்து உங்களுடைய வீட்டில் மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி, பெருமாளிடமும் உங்களுடைய வேண்டுதலை தாராளமாக வைக்கலாம்.

தவறே கிடையாது. பெருமாளை குல தெய்வமாக வழிபட வில்லை என்றாலும், மாவிளக்குப் போட்டு வீட்டில் பெருமாள் வழிபாடு செய்யலாம். இந்த சிறப்பான நாளில், உங்களால் முடிந்தால் ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து, முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது, மேலும் சிறப்பினை தேடித்தரும். உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறுவதற்கு, உங்கள் கைகளால் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்தால் கூட, அந்தப் பலன் உங்களை தொடரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.