ரம்யா பாண்டியனுக்கு இந்த சினிமா பிரபலத்துடன் திருமணமா …? அதிர்ச்சியில் ரசிகர்கள் அவர் தம்பி கூறிய புதிய தகவல் இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியைப் பெற்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் இதை கமலஹாசன் தொகுத்து வழங்கினார் விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி 2020 வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது கடந்த சீசனில் போட்டியிட்ட போட்டியாளர்களில் ஆரி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை படங்களில் நடித்தவர்.

அதிலெல்லாம் கிடைக்காத பெயர் அவர் புகைப்படம் மூலம் சமூக வலைத்தலங்களில் பெரிதாக பேசப்பட்டது பிறகு குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பிரபலமடைந்து அதன்மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வரவேற்கப்பட்டார். பிக்பாஸில் கலந்து கொண்டு பல ரசிகர்களை ரசிக்க வைத்து இறுதிப் போட்டி வரை தாக்குப்பிடித்து நான்காம் இடத்தை வென்றார் இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான சோம் சேகர் ரம்யாவிடம் காதல் வயப்பட்டார்.

இதை வெளிப்படையாக நிகழ்ச்சியிலேயே தெரிவித்த சோம் சேகர் ரம்யாவின் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பொழுது கூட அதைப் பற்றி கேட்டறிந்தார் போட்டி முடிந்ததும் வெளியே வந்த நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பியிடம் ரசிகர்கள் கேட்ட கேள்வி சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஒன்றாக இணைவார்களா என்று அதற்கு பதில் அளித்த நடிகை ரம்யாவின் தம்பி அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் இதில் என் முடிவு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.