ரிஷாப் பண்ட் கேப்டனாக நன்றாக செயல் படுவாரா ?? IPL கோப்பையை வெல்வாரா ?? கபில்தேவ் அதிரடி பதில் …

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் போது பில்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரரும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை தடுக்க கீழே விழுந்து தோள்பட்டை காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார் மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது ஆறு மாத காலம் தேவைப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அனைவரும் டெல்லி அணியின் மூத்த வீரரான ரஹானே அஸ்வின் ஸ்மித் தவான் ஆகிய நால்வரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் சமீப காலமாகவே ரிசாப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து என அடுத்தடுத்த தொடர்களில் ரிஷபன் சிறப்பாக விளையாடி வருகிறார் ஆனால் இளம் வீரரான இவரிடம் ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு ஆற்றல் இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கோப்பை வெல்ல முடியுமா என விவாதம் நடந்து வருகிறது இவர் 2016 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணியை வழிநடத்தி இருந்தாலும் ஐபிஎல் வேறு தளம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் ஐபிஎல் தொடரில் திறமைமிக்க அனுபவம் வாய்ந்த பல நாட்டு வீரர்களும் விளையாடுபவர்கள் அவர்களை சரியாக வழி நடத்த வேண்டும் இரண்டு போட்டிகளில் தோற்றால் கூட கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவே இதுபோன்ற அழுத்தங்களை சமாளிக்க ரிஷாப் பண்ட் தயாராக இருக்க வேண்டும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.