ரொம்ப காலமாக வாடகை வீட்டில் வாழ்கிறிர்களா !! சொந்த வீடு கட்ட 5 ரூபாய் போதுமே !!

எல்லாருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இப்போதெல்லாம் மனை வாங்கி வீடு கட்ட வேண்டும் என்கிறதை விட கட்டிய வீடே வாங்க வேண்டும் என்கிற ஆசை தான் அதிகமாக இருக்கிறது. இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவதை விட ஃப்ளாட்டாக வாங்கி விடுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். சொந்த வீடு அமைய நாம் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. உங்களிடம் 5 ரூபாய் நாணயம் மட்டுமிருந்தால் விரைவாக சொந்தமாக வீடு கட்டி குடியேறி போகலாம். 5 ரூபாயை என்ன செய்ய வேண்டும்? 5 ரூபாயில் எப்படி வீடு கட்டுவது? என்பதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். 5 ரூபாய்க்கு ஒரு ஓடு கூட வாங்க முடியாது! பின்ன வீடு எப்படிங்க கட்ட முடியும்?

என்று யோசிப்பவர்கள் உங்களில் நிச்சயம் இருக்கத் தான் செய்வீர்கள். வீடு கட்டும் எண்ணம் நிறைவேற எவ்வளவு வழிமுறைகள் இருந்தாலும் மிக சாதாரண இந்த வழிமுறையை பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் நீங்கள் வாடகை வீட்டு பிரச்சினை பிரச்சனையில் இருந்து நீங்கி சொந்தமாக உங்களுக்கு என்று ஒரு வீட்டை கட்டிக் கொள்வீர்கள். வீடு கட்ட நினைப்பவர்கள் தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றும் பொழுது இதை செய்ய வேண்டும். ஏற்கனவே வீடுகட்டி இருப்பவர்கள் அடுத்த வீடு கட்டுவதற்கு இதை செய்தால் சிறப்பான பலனை பெற முடியும். உங்கள் வீட்டில் தினமும் விளக்கேற்றி முதலில் பழகிக் கொள்ளுங்கள். எவ்வளவு வேலைகள் நமக்கு இருந்தாலும் ஒரு இரண்டு நிமிடம் விளக்கேற்றி வழிபடுவதில் நாம் குறைந்து விடப் போவதில்லை. அதனால் தினமும் விளக்கு ஏற்றும் பழக்கத்தை முதலில் வரவழைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி விளக்கேற்றும் பொழுது நீங்கள் ஏற்றும் விளக்கானது கஜலக்ஷ்மி அல்லது காமாட்சி அம்மன் விளக்காக இருப்பது சிறப்பை தரும். விளக்கை சுற்றி பூவால் அலங்கரித்து, விளக்கிற்கு பூ சாற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து, எண்ணெயில் போட வேண்டும். அதன்பின் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விளக்கிற்கு கீழே வைக்க வேண்டும். அதாவது அடிப்பாகத்தில் வைக்க வேண்டும். அந்த நாணயத்தின் மீது விளக்கு வைக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இது போல் செய்ய வேண்டும். சொந்த வீடு இருக்கிறது மேலும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பவர்கள், ஐந்து ரூபாய் நாணயத்தை அடிப்பாகத்தில் வைக்கத் தேவையில்லை. விளக்கு ஏற்ற இருக்கும் அந்த எண்ணெயில் போட வேண்டும். அதன் பின் விளக்கு ஏற்றி, வீடு கட்ட வேண்டும் என்கிற வேண்டுதலை வையுங்கள்.

இது போல் தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். வெறும் ஐந்து ரூபாய் நாணயத்தில் நம்முடைய மிகப்பெரிய வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்றால் அதை ஏன் நாம் செய்யக்கூடாது? இந்த நாணயத்தை எப்போதும் மாற்ற தேவையில்லை. உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை எப்பொழுதெல்லாம் விளக்கேற்றுகிறீர்களோ! அப்போதெல்லாம் இது போல் நாணயத்தை விளக்கில் தொடர்ந்து வைத்து கொண்டே வாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் பிரார்த்தனை கூடிய விரைவில் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேற ஒரு ரூபாயை முடிந்து வைத்தாலும் அதை மனதார தெய்வங்கள் ஏற்றுக் கொள்கின்றன. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் உண்மையான பக்திக்கு எல்லா தெய்வங்களும் துணை நிற்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீடு கட்டும் எண்ணம் ஈடேற, தினமும் இது போல் நம்பிக்கையுடன் விளக்கேற்றும் பொழுது செய்து வாருங்கள். விரைவில் வீடு கட்டி விடுவீர்கள்.