ரோஜா செடியை இனி கடைக்கு போய் காசு கொடுத்து வாங்க வேண்டாம் ?? உங்கள் வீட்டில் இருக்கும் செடியிலிருந்தே குட்டி செடியை தனியாக வளர்கலாம் !!

உங்கள் வீட்டில் ரோஜா பூ செடிகளை நிறைய வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? ஆனால், வீட்டில் ஒரே ஒரு செடிதான் வெச்சிருக்கீங்களா? அந்த ஒரு செடியில் இருக்கும் தண்டுப்பகுதியை வைத்தே நிறைய, குட்டி குட்டியான பேபி செடிகளை நம்மால் வளர்க்க முடியும். கேட்கும்போதே ஆசையாக இருக்கிறதா? உங்கள் வீட்டிலும், நிறைய ரோஜா செடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனி கடைக்கு போய் காசு கொடுத்து ரோஜாச்செடி வாங்க வேண்டிய அவசியமே இல்லை. முதலில் மீடியமான அளவு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். அது பிளாஸ்டிக் தொட்டி ஆக இருந்தாலும் சரி. மண்தொட்டி ஆக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில், செடி வளர தேவையான உரம், கருப்பு மண், செம்மண் கலந்த கலவையை சேர்த்து விடுங்கள்.

கருப்பு மண் 40 %, செம்மண் 40 %, உரம் 20% சேர்த்தால் போதும். மண்புழு உரமாக இருந்தாலும் சரி. கால்நடைகள் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உறவாக இருந்தாலும் சரி. மண் கலவையை சேர்த்துவிட்டு, மண்ணுக்கு தேவையான தண்ணீரை தெளித்து, தொட்டியைத் தயார் செய்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை இருக்கமாக போட்டு அழுத்தக்கூடாது. மண் உதிரி உதிரியாக தான் இருக்க வேண்டும். ஆனால், ஈரத் தன்மையோடு இருக்க வேண்டும். அடுத்ததாக ரோஜா செடியின் தண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு, தண்டுகளில் இருக்கும் இலைகளையும், முட்களையும் வெட்டிக் கொள்ள வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் தண்டுப் பகுதிகளில் கணுப்பகுதி இருக்கும். செடிகளை வைத்திருப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். கணு என்றால் என்ன என்பது, அதாவது கரும்பில், வட்ட வட்டமாக இருக்கும் அல்லவா? அதேபோல் செடிகளின் தண்டிலும் கணு பகுதி இருக்கும்.

அந்தப் கணு பகுதியில் இருந்து தான் செடி துளிர் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எடுக்கப்போகும் தண்டில், மொத்தமாக மூன்று கணு இருக்க வேண்டும். மூன்று கணுவிற்க்கு அதிகமாக இருக்கலாம். மூன்று கனவிற்கு குறைவாக தண்டானது இருக்கக்கூடாது. கீழ் பக்கமாக நடப்போகும் கணுவிற்கு, கீழ்ப்பகுதியில், 45 டிகிரியில் வெட்டிக் கொள்ள வேண்டும். மேல் பக்கமாக துளிர்விடும் பகுதியிலும் 45 டிகிரிக்கு வெட்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அடியில் உள்ள கணு பகுதியில் இருந்து, மண்ணுக்குள் வேர் பிடிக்கும். தயார் செய்து வைத்திருக்கும் தொட்டியில் சின்னசின்ன துளைகளைப் போட்டு, தயார் செய்து வைத்திருக்கும் தண்டுகளை, மண்ணில் செருகி, மண்ணை நகத்தி, இரண்டு விரல்களால், ஊன்றி விட்டாலே போதும். அதன் பின்பு, லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும். அடுத்தபடியாக உங்களது தொட்டியை பிளாஸ்டிக் கவரால் காத்து போகாதபடி மூடிவிட வேண்டும். இல்லையென்றால், ஒரு பிளாஸ்டிக் டப்பாவை செடிக்கு மேல் கவிழ்து விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு. காற்று செடிகளுக்கு உள்ளே புகாத அளவிற்கு. இந்த செடியானது துளிர்விடும் வரையில் நேரடியாக வெயிலில் வைக்க வேண்டாம். இருட்டிலும் வைக்கக்கூடாது. வெயில் படும் இடத்தில், நிழலில் வைக்க வேண்டும். பதினைந்தே நாட்களில் உங்களது செடிகளில் கிளைகள் துளிர்க்க ஆரம்பித்து விடும். நீங்கள் மூடி வைத்திருக்கும் இந்தக் கவரை, அடிக்கடி திறந்து பார்க்க வேண்டாம். நான்கிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, கவரை திறந்து தண்ணீர் தெளித்து விட்டாலே போதும். 15 நாட்களில் செடி நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை ஊற்றி மண்ணை இருக்கமாக வைத்து விடக்கூடாது. செடி, மண்ணில் வேரூன்றுவதற்கு சிரமமாகிவிடும். 15 நாட்கள் கழித்து இலை நன்றாக துளிர் வந்த பிறகு, மேலே இருக்கும் கவரை நீக்கி விடலாம். இந்த சுலபமான முறையை பின்பற்றி உங்கள் வீட்டிலும் பெரிய செடியிலிருந்து குட்டி செடியை தயாரித்து வளர்த்து பாருங்கள். இந்த குட்டி செடியில் பூ பூக்கும் போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.