வயிறு எரிந்து பிறர் விட்ட சாபத்தினால், உங்கள் குடும்பம் பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கின்றதா? உங்களுக்கான உடனடி தீர்வைத் தரும் ஒரு பரிகாரம் !!

பல குடும்பங்கள் இன்று, பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருவதற்கு, அடுத்தவர்கள் விட்ட சாபமும் ஒரு காரணமாக இருக்கலாம். தீர்க்கமுடியாத துன்பங்கள் வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்கள் ‘யார் விட்ட சாபமோ! என் குடும்பம் இவ்வளவு கஷ்டப் படுகின்றது!’ இதற்கான சாப விமோசனத்தை எப்படித்தான் பெறப் போகின்றோமோ? என்று புலம்புகிறார்கள். இப்படியாக அடுத்தவர்கள் விட்ட சாபத்திலிருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, ஒரு முத்திரையையும், முத்திரையோடு சேர்த்த பரிகாரத்தையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிவபெருமானின் அம்சமாக சொல்லப்படும் பைரவர் பைரவியை வைத்த தான் இந்த பரிகாரம். இதற்கான முத்திரை என்பது பைரவர் பைரவி முத்திரை.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். காலையில் எழுந்து பல் துலக்கி, முகம் கழுவி, தலையை சீவிக்கொண்டு, கிழக்குமுகமாக பார்த்து, முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் உங்களது வலது கையை, இடது கையின் மேல் வைத்துக்கொண்டு, உங்களது உள்ளங்கைகள் தொப்புளுக்கு நேரே இருக்கவேண்டும். மேலே படத்தில் கொடுத்து இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். இது பைரவ முத்திரை. இந்த முத்திரையை வைத்துக் கொண்டு, உங்களது வலது உள்ளங்கையின் மேல், எலுமிச்சை பழம் ஒன்றை வைத்து விட்டு, பைரவ மூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டு, உங்களுக்கு இருக்கக் கூடிய சாப்பிடுங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று, வேண்டுதல் வைக்க வேண்டும். ‘பைரவாய நம’ 21 முறை உச்சரித்து, உங்களது பிரச்சினைகளை வைரவர் கால் பாதங்களில் வைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக, உங்களது முத்திரையை அப்படியே மாற்றிக் கொள்ளுங்கள். இடது கையை வலது கையின் மேல் வைத்துக்கொண்டு, எலுமிச்சை பழத்தையும் மேலே உள்ள உள்ளங்கையில் மாற்றி வைத்துக் கொண்டு, பைரவியில் நினைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை பைரவியின் பாதங்களில் போட்டு விடுங்கள். ‘ஓம் பைரவியே நம’ என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்கவும். இப்போது உங்களுடைய உள்ள கைகளில் இருக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து, உங்களது தலையை மூன்று முறை சுற்றி விட்டு, அந்தப் பழத்தை இரண்டாக நறுக்கி, கால் படாத இடங்களில் நசுக்கி தூரப் போட்டு விடுங்கள். அந்த பழத்தை யாரும் மிதிக்கக் கூடாது. யாரும் தாண்டக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டுத்தான் நீங்கள் குளிப்பதற்கு செல்லவேண்டும். குளித்த உடனேயே நீங்கள் அணிந்திருந்த துணிகளை துவைத்து, தலை ஸ்னானம் கட்டாயம் செய்ய வேண்டும். அதன் பின் குளிர்ச்சியான சாப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். தயிர்சாதம், எலுமிச்சை பழ சாதம் போன்ற சாதங்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடுவதற்கு முன்பு, நீங்கள் சாப்பிடக்கூடிய சாதத்தை காக்கைக்கு வைத்து விட்டு அதன் பின்பு சாப்பிடுங்கள். தொடர்ந்து 21 நாட்கள், இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறைவதையும், சாபத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதையும், நிச்சயம் உங்களால் உணர முடியும் என்பதில் சந்தேகமே கிடையாது.