வரவே வராது என்று, முடிவு செய்த கடனை கூட வசூலித்து தரும் சூப்பர் பரிகாரம் !! மூன்று நாட்களில் கண்கூடாக பலன் கிடைக்கும் !!

நிறைய பேர் தங்களுடைய பணத்தை கடனாக கொடுத்து விட்டு, வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். எவ்வளவோ போராடிப் பார்த்தும், அசலும் வரவில்லை, வட்டியும் வரவில்லை, என்று தெரிந்தது, அந்த தொகையை வரவே வராது என்று முடிவுசெய்து, அந்த கணக்கை வாராக் கடனில் சேர்த்து விடுவார்கள். நீங்கள் வராது என்று ஒதுக்கிய அந்த பணம் கூட, உங்கள் கைகளுக்கு வந்து சேர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு வித்தியாசமான பரிகாரம். சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்தால் மூன்றிலிருந்து, ஐந்து நாட்களுக்குள் நல்ல பலனை நம்மால் பெற முடியும்.

இந்த பரிகாரத்தை கட்டாயம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய தேவையான பொருட்கள். எலுமிச்சை பழம் ஒன்று, மஞ்சள் சிறிதளவு, குங்குமம் சிறிதளவு, மா மரத்தினால் செய்யப்பட்ட பலகை கட்டாயம் தேவை. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு, ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். மா மரபலகையை துடைத்து வைத்துக்கொள்ளுங்கள். (கடைகளில் மா மரத்தினால் செய்யப்பட்ட மரப்பலகை வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.) எலுமிச்சை பழத்தை உங்களது உள்ளங்கைகளில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, யார் உங்களுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமோ, அவரது பெயரை உச்சரித்து, அந்த நபர் தானாகவே வந்து பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அந்த எலுமிச்சை பழத்தை, உங்கள் முன்பு இருக்கும் மா மரப் பலகையின் மீது வைத்துவிட்டு, எடுத்து வைத்திருக்கும் மஞ்சளில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அந்த மஞ்சளை தொட்டு அந்தப் பலகையின் மேல் உங்களுக்கு கடன் தொகையை கொடுக்க வேண்டிய, அந்த நபரின் பெயரை மட்டும் எழுதி வைத்தால் போதும். மரப்பலகையில் வைத்திருக்கும் எலுமிச்சைப் பழத்தில், மஞ்சளையும் குங்குமத்தையும் பொட்டாக வைத்து விடுங்கள், பரிகாரம் முடிந்தது. இப்படியாக மூன்று நாட்கள், பரிகாரத்தை செய்யும் பட்சத்திலேயே, உங்களிடம் கடனை வாங்கிய அந்த நபரே முன்வந்து உங்களுக்கான கடன் தொகையையும், அதற்கான வட்டி தொகையையும் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் தொகையானது வசூலான பின்பு, ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு வருவதாகவும் வேண்டிக்கொள்ளுங்கள். கடன் வாங்கியவர், கண் காணாமல் ஓடியே போய்விட்டார் என்றாலும்கூட, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு பதில் சொல்லுவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வருவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றால், அதை முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை, என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.