வறுமையை தொரத்தி அடிக்கும் இந்த 2 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் உபயோகபடுத்தி வாருங்கள் !! வீட்டில் தரித்திரம் குடி இருக்க வாய்ப்பே இல்லை !!

ஒரு வீடு மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் கட்டாயம் மூதேவி குடி கொள்ளாமல் இருக்க வேண்டும். கஷ்டத்தை ஏற்படுத்தும் தரித்திரம் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு வீடு, மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்கின்றதோ, அந்த வீட்டில் கட்டாயம் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. அதாவது, சில வீடுகளில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை சேமிக்க முடியாது. வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாள், ஆனால் நிரந்தரமாக தங்க மாட்டாள். இதற்கு நம்முடைய வீட்டு பூஜை அறையில் எந்த பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அந்த வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு, வறுமையிலிருந்து தப்பித்து, மகாலட்சுமியை நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைக்கலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய வீட்டில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்றும்போது தாமரைத்தண்டு திரியில் விளக்கு ஏற்றும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். தாமரைத் தண்டு திரி என்பது சாதாரண திரியை கணக்கிட்டுப் பார்க்கும்போது விலை கொஞ்சம் அதிகம் தான். இருப்பினும், மகாலட்சுமி வாசம் செய்யும் தாமரைப் பூவில் இருந்து எடுக்கப்படும் தாமரைத் தண்டு திரியில் ஏற்றக்கூடிய தீபத்திற்கு, வறுமையை விரட்டி அழிக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. இந்த தாமரை தண்டு திரியை, காமாட்சியம்மன் தீபத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றியும் ஏற்றலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக சுத்தமான பசு நெய் கிடைக்கும் பட்சத்தில், தாமரைத் தண்டு திரி சேர்த்து, பசு நெய் ஊற்றியும் ஏற்றினால், வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. பணவரவு இருந்து கொண்டே இருக்கும். வீடு என்றைக்கும் செல்வ செழிப்போடு இருக்கும்.

இரண்டாவதாக, நீங்கள் மந்திரத்தை உச்சரித்து தீபம் ஏற்றி மகாலட்சுமி பூஜை செய்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு மந்திரத்தை உச்சரிக்க கூடிய பழக்கம் இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்களுடைய வீட்டில் தாமரை மணிமாலை என்பது அவசியம் இருக்க வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் இந்த தாமரை மணி மாலையில் ஒன்று வாங்கி, உங்களுடைய வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் பாதங்களில் இருக்கும்படி வைப்பது மிகவும் நல்லது. தினம்தோறும் தீபம் ஏற்றிய பின்பு அந்த மகாலட்சுமி தாமரைமணி மாலையை உங்கள் கைகளால் தொட்டு, எடுத்து உருட்டி ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பட்சத்தில் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்.

இந்த இரண்டு பரிகாரத்தையும், இந்த இரண்டு வழிபாட்டையும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் பரவாயில்லை. தினம் தோறும் தாமரை பூ உங்களுக்கு கிடைக்கும் என்றால், அந்தத் தாமரை பூவை வாங்கி மகாலட்சுமிக்கு சூட்ட வேண்டும். தினந்தோறும் மகாலட்சுமிக்கு தாமரைப்பூவை அணிவித்து பூஜை செய்யும் வீட்டில் சகல சௌபாக்கியமும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நம்முடைய வீடு சுபிட்சமாக செல்லவ கடாட்சம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றால், இப்படிப்பட்ட சின்னச்சின்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலே போதும். பெரிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. வீட்டில் எக்காரணத்தை கொண்டும் தரித்திரம் வந்து தங்காமல் இருக்க இந்த குறிப்புகளும் கட்டாயம் கைகொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.