வளர்பிறை சனிக்கிழமையன்று தலைவாசலில் இதை செய்வதால் இவ்வளவு நன்மைகளா ?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !!

வீட்டின் தலைவாசல் என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஒட்டுமொத்த வீட்டையும் பாதுகாப்பு செய்யும் விதமாக அமையும். அதனால் தான் திருஷ்டிக்கு உரிய பொருட்களை தலை வாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இந்த இடத்தில் நாம் செய்யக் கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அலங்கார பொருட்களை வாங்கி மாட்டலாம். ஆனால் தலைவாசல் பகுதியில் இதையெல்லாம் செய்யக்கூடாது. அது போல் வளர்ப்பிறையில் தலைவாசல் பகுதியில் இந்த விஷயத்தை செய்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய நன்மைகள் ஏற்படும். அவை என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். வீட்டின் தலைவாசல் பகுதியில் வண்ணமயமான மற்றும் ஆடம்பர பொருட்களை அலங்காரம் செய்யக்கூடாது. மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கு தெய்வீக விஷயங்களை நாம் இந்த பகுதியில் செய்யலாம். நீங்கள் இவ்வாறு ஆடம்பரத்திற்காக அலங்கார பொருட்களை வாங்கி மாற்றி வைத்தால் கண் திருஷ்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே தலைவாசல் பகுதியில் ஆடம்பரத்தை பார்க்காதீர்கள். குலதெய்வம் முடிச்சுகள், திருஷ்டி கயிறுகள், எலுமிச்சை திருஷ்டி, தோரணங்கள் என்று தெய்வீக மயமான விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும் இதனால் கண் திருஷ்டியும் உங்களுக்கு வராமல் இருக்கும். மாவிலை தோரணம் தினமும் கட்டி தொங்க விடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. மாவிலை கிடைப்பது ஒன்றும் அரிதான காரியம் அல்ல. நிறைய பேர் அவர்களுடைய வீட்டிலேயே வைத்திருக்கலாம். அல்லது அக்கம் பக்கத்தினரரிடம் கேட்டு வாங்கி வைத்து அழகாக கட்டி தொங்க விடலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு வளர்பிறை சனிக்கிழமை அன்று வீட்டின் தலை வாசலில் 11 மா இலைகளை மஞ்சள் நிற கயிற்றில் இடைவெளி விட்டு கட்டி தலைவாசலில் அமைந்திருக்கும் நிலைகட்டையில் இரண்டு புறமும் முடிச்சுப் போட்டு கட்ட வேண்டும். நீங்கள் உள்ளே செல்லும் பொழுதும், வரும் பொழுதும் உங்கள் தலையில் மாவிலை தட்டாதவாறு கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அடுத்து வரும் வளர்பிறை சனிக்கிழமையில் இதை எடுத்து விட்டு புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ஒரு விஷயத்தை நீங்கள் தலைவாசலில் செய்து வந்தால் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும், ஸ்ரீ மகாலட்சுமி தேவியும் தயக்கமின்றி உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் கிருமி நாசினியாகவும் செயல்படும். கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் உள்ளே நுழையாது. அது போல் பிரபஞ்சத்தில் இருக்கும் பிராண வாயுவை அதிகரிக்கும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு. நம்முடைய வீட்டில் நாம் ஏதாவது சில நேரங்களில் வாய் தவறி அபசகுனமாக கூறி விடுவது உண்டு. இப்படி அபசகுனமாக தெரியாமல் கூட நாம் பேசக்கூடாது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் மன அழுத்தம் காரணமாக பலரும் கோபத்தில் இந்த வார்த்தைகளை உதிர்த்து விடுகிறார்கள். பெற்ற தாயே பிள்ளைகளை பார்த்து எப்படியும் போய் தொல, நாசமாகப்போ என்கிற வார்த்தைகளை கூறி விடுகிறார்கள்.

போகிற காரியம் உருப்படாமல் தான் போகுது, விழுந்து வராம வந்தால் சரி என்கின்ற எதிர்மறை வார்த்தைகளை வீட்டில் உபயோகப்படுத்துவது மிகவும் தவறாகும். இதை வேண்டும் என்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் தெரியாமல் சொன்னாலும் இது போன்ற அபசகுணமான வார்த்தைகள் சக்தி பெறுகின்றன. இதனை தடுக்கும் ஆற்றல்களும் மாவிலைகளுக்கு உண்டு. நீங்கள் மாவிலைத் தோரணம் கட்டுவதால் இது போன்ற அபசகுணமான வார்த்தைகள் வெளியில் செல்லாமல் தடுக்கப்படும். மாவிலை தோரணங்கள் கட்டுவது பெரும்பாலும் காந்த சக்தியை ஈர்ப்பதற்கு தான். நல்ல அதிர்வலைகளை இந்த தோரணம் வீடு முழுவதும் பரவ செய்யும். மாவிலைக்கு இருக்கும் சக்தியை சொல்லில் கூட சொல்ல சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு அற்புதமான பலன்களை தரவல்லது. தொடர்ந்து ஒரு வருடம் வரை வளர்பிறை சனிக்கிழமைகளில் மட்டும் மாவிலை தோரணம் கட்டி, மறு வளர்பிறை சனியன்று மாற்றி வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம். நீங்களும் உங்கள் வீட்டில் இதனை செய்து பயனடையுங்கள். தெரியாதவர்களுக்கும் தெரிய வையுங்கள்.