வாங்குன கடனுக்கு உங்களாள வட்டியை மட்டும் தான் கட்ட முடிகிறதா ?? அசல் தொகையையும் சேர்த்து முடிக்க இத மட்டும் பண்ணுங்க !!

கடன் பிரச்சினை எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி கடன் பிரச்சனை மட்டும் சமமாகத்தான் இருக்கிறது. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் கடன் பிரச்சினை இருக்கும். அது தான் பணத்தின் மாயை. கடன் பிரச்சினை எல்லோருக்கும் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கும். இரவில் நிம்மதியாக உறங்க கூட விடாது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்கிற வேண்டுதல் அவர்களிடம் இருக்கும். அது போன்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்த்தால் ஒரே மாதத்தில் கடன்கள் அத்தனையும் நுரையாய் கரைந்துவிடும் என்பது நிச்சயம். இதை முழுமனதாக நம்பிக்கையுடன் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை வாரா வாரம் என்று 9 வாரங்கள் வரை செய்து வர வேண்டும்.

இதற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் அதிகம் ஒன்றுமில்லை. வெற்றிலை, கொட்டைபாக்கு, சிகப்பு துணி, கல் உப்பு மட்டுமே போதும். வேறு ஒன்றும் தேவையில்லை. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். வெற்றிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்போம். கடன் பிரச்சனைகளுக்கு நாம் வேண்ட வேண்டிய தெய்வம் கால பைரவர் ஒருவரே! காலபைரவரிடம் நீங்கள் வேண்டினால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் மலை போல் இருந்தாலும் பனிபோல் நீங்கும் என்பது ஐதீகம். கால பைரவர் சந்நிதிக்கு செல்லுங்கள். உங்கள் குறைகளை வேண்டுதலாக வையுங்கள். அவருக்கு இஷ்டமான செவ்வரளி மலர்களை அர்ச்சனை செய்யுங்கள். இப்படி செய்தாலே போதும்! உங்கள் பிரச்சனைகள் தீரும். இந்த சிவப்புத் துணியில் வெற்றிலையை வைத்து, இரண்டு கொட்டைப்பாக்குகளையும் வையுங்கள்.

வேறு பாக்கு பயன்படுத்தக்கூடாது. அதனுடன் சிறிதளவு கல்லுப்பு வையுங்கள். இந்தத் துணியை முடிந்து, உங்கள் வீட்டில் பூஜை அறையில் பைரவர் படத்திற்கு முன்பு வையுங்கள். பொதுவாக வீடுகளில் உக்ர தெய்வங்கள் படத்தை வைக்கக்கூடாது என்பார்கள். அதுபோல் காலபைரவர் என்பவர் உக்கிர தெய்வமாக பார்க்கப்படுவதால், அந்த படத்தை யாரும் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை, வைத்துக் கொள்ளவும் கூடாது. அதனால் அதற்கு பதிலாக சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வாங்கி வையுங்கள். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் செல்வங்களை வாரி வழங்குபவர். எப்படி மகாலட்சுமி, லக்ஷ்மி குபேரர், குபேரர் செல்வங்களுக்கு அதிபதியோ! அதே போல தான் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்வர்ணங்களுக்கு, செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கின்றார். பைரவருக்கு எத்தனை முகங்கள் இருந்தாலும் அவர் பைரவர் தான். எனவே பைரவர் படத்தின் முன்பு இந்த முடிப்பை வைத்துவிட்டு கடன் பிரச்சனை தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

வியாழன் கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பியுங்கள். மறுவாரம் அதே வியாழக்கிழமை அன்று முடிந்து வைத்த முடிப்பை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் புதிதாக மாற்றங்கள். அதிலிருக்கும் பழையவற்றை நம்முடைய கடன்கள் கரைய அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால் அவற்றை யாருடைய கால்களிலும் படாத வண்ணம், நீர் நிலைகளில் விட்டுவிடலாம். நீர்நிலைகளில் விட முடியாத நிலையில், ஏதாவது ஒரு மரம் அல்லது செடிகளின் அடியில் மண் தோண்டி புதைத்து வைத்து விடுங்கள். இது போல் ஒன்பது வாரங்கள் மட்டும் செய்யுங்கள். இதை ஒவ்வொரு வாரமும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் செய்து வரும் பொழுதே உங்களுடைய கடன்கள் சட்டென கரைந்து வருவதை உங்களால் உணர முடியும். உங்களுடைய வருமானம் பெருகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும் பொழுது, இதை செய்தால் தொழில் விருத்தி அடையும். அதன் மூலம் உங்களது கடன்கள் தீரும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.