வாடகை வீடோ !! சொந்த வீடோ !! நீங்கள் முதல் முறையாக வசிக்க செல்லும் போது இதை மட்டும் கவனிக்க மறக்காதீர்கள் !!

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மேலும் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விடும் பொழுது ஒவ்வொரு முறையும் நிச்சயம் புதிதாக வெள்ளையடித்து தர வேண்டும். அப்படியே வெள்ளை அடிக்காமல் அவர்களுக்கு கொடுக்கும் பொழுது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உருவாக்கும் என்பார்கள். இதனால் அந்த வீட்டில் புதிதாக வாசிக்க வருபவர்களுக்கு சில பிரச்சினைகளை உண்டு பண்ணும் வாய்ப்புகள் உண்டாகும். நாம் வாடகை வீட்டிற்கு செல்லும் பொழுது இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். வீடு என்பது சாதாரண விஷயமல்ல. நாம் அங்கு நன்றாக வாழ்வதற்கும், நம் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதற்கும் வீடும் ஒரு பிரதான காரணம் தான். இதையே வாஸ்து சாஸ்திரம் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் முதல் முறையாக ஒரு வீட்டிற்கு செல்லும் பொழுது ஏன் இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அந்த காலத்தில் எல்லாம் வருடா வருடம் வெள்ளை அடிப்பார்கள்.

பொங்கல் வந்து விட்டால் போதும். வீட்டை தூய்மைப்படுத்தும் பணி, வெள்ளையடிக்கும் பணி நடைபெறும். புதியதொரு வாழ்க்கை துவங்க இருப்பதாக ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் இந்த காலத்தில் எல்லாம் வெள்ளையடிக்க ஆகும் செலவை கணக்கு பார்த்து யாரும் அடிக்கடி வெள்ளை அடிப்பது கிடையாது. ஒரு வீட்டில் ஒருவர் மாற்றி இன்னொருவர் குடியேற இருக்கிறார் என்றால் நிச்சயம் அவர்களுக்கு வெள்ளை அடிக்காத வீடு, சில தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது பலரும் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. அதுவரை நன்றாக இருந்தவர்கள் கூட வெள்ளை அடிக்காத அந்த வீட்டிற்கு சென்ற பின்னால் அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். சிலர் உத்தியோக ரீதியாக வேலையை இழக்கலாம், வேறு வேலையை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் உண்டாகும். இதற்கு அந்த வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் உருவாவதற்கான ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பது தான் காரணமாக அமைந்து விடும்.

எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் வீட்டில் நிச்சயம் மன உளைச்சல், மன கஷ்டம் இருக்கும். அதற்காக தான் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போகும் பொழுது அது பழைய வீடாக இருந்தாலும் வெள்ளையடித்து பால் காய்ச்சி, பூஜைகள் செய்த பின் குடியேற சொல்கிறார்கள்.இதை இப்போது இருக்கும் நபர்கள் பலரும் சரியாக பின்பற்றுவது கிடையாது. சிலர் வாடகைக்கு குடியேறி விட்டு அதன் பின் பால் காய்ச்சுவார்கள். அது போலெல்லாம் செய்யவே கூடாது. பால் காய்ச்சி விட்டு தான் அந்த வீட்டிற்குள் மற்ற பொருட்களை நீங்கள் கொண்டு போக வேண்டும். இதை வழி வழியாக நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இன்று வரை நாம் பின்பற்றி வரும் வழக்கமாகும். ஒரு வீட்டை நீங்கள் தேடும் பொழுது அந்த வீட்டை பற்றி நன்கு விசாரித்து விட்டு தானே செல்கிறீர்கள்? அந்த வீட்டில் யாராவது ஏற்கனவே இறந்து போயிருக்கிறார்கள் என்றால், அந்த வீட்டில் குடியேற எவ்வளவு பயப்படுகிறோம்? அதே போன்ற ஒரு விஷயம் தான் இவைகள். சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி ஒரு வீட்டிற்கு புதிதாக நாம் குடியேறி செல்கிறோம் என்றால் அந்த வீட்டில் வெள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

அதன் பின் அந்த வீட்டை பற்றி நன்கு விசாரித்து விட்டு, பால் காய்ச்சி முறையாக எந்த பொருட்களை முதலில் கொண்டு வர வேண்டுமோ! அந்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்து, அதன் பின் நாம் மற்ற பொருட்களை இறக்கி குடியேற வேண்டும். அவசரத்திற்கு ஏதோ ஒரு வீடு கிடைத்து விட்டது என்று போய்விடக்கூடாது. ஒரு சிலர் நான் அப்பறம் உங்களுக்கு வெள்ளை அடித்து தருகிறேன் என்று கூறி விடுவார்கள். அது போல் இருக்கும் பொழுது ஒரு முறை யோசித்து விட்டு செல்வது நல்லது. சரி இப்போது பால் காய்ச்சாமல், வெள்ளை அடிக்காமல் தெரியாமல் சென்றுவிட்டோம், என்ன செய்வது? என்று கேட்டால் உடனே அந்த வீட்டிற்கு வெள்ளை அடிக்க ஏற்பாடு செய்யுங்கள். பொருட்களை ஒதுக்கி விட்டு ஒவ்வொரு அறையாக கூட வெள்ளை அடித்து விடலாம். அந்த வீட்டில் உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் அந்த வீட்டை மாற்றி விடுவது நல்லது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் வீட்டை சுற்றி பசுமையான மரம், செடிகளை உங்களால் முடிந்த வரை வளர்க்கலாம். நேர்மறை ஆற்றல்களை அதிகம் பெறச் செய்யும் சில பரிகாரங்களை அந்த வீட்டில் நீங்களே செய்யலாம். இதனால் அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி உங்களுக்கு நேர்மறை சிந்தனைகளை உண்டுபண்ணும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.