வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் !! இந்த 3 வார்த்தையை நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்தால் !!

சில விஷயங்கள் நமக்கு நன்மை தரும் என்று தெரிந்தாலும் கூட, சில பேர் அந்த நல்ல விஷயங்களை செய்யவே மாட்டார்கள். உங்களுடைய மனசுக்கு எது நல்லதுன்னு படுதோ, அதை மட்டும் உங்க மூளைக்கு கொண்டு போங்க! உங்க மூளைக்கு எது நல்லதுன்னு படுத்தோ, அதெல்லாம் உங்க மனசுக்கு கொண்டுவரவே கூடாது. நம்முடைய மனசு, மனசாட்சியோடு நல்லதை மட்டுமே பார்க்கும். மூளை அப்படி கிடையாது. கஷ்டம், நஷ்டம் லாப நஷ்ட, மானம் அவமானம் இவைகளை பார்த்து கணக்குப் போடத் தொடங்கி விடும். அந்த சூழ்நிலையில் மூளை நம்மை சில சமயங்களில் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வைத்துவிடும். நம்முடைய மனது எப்போதும் நம்மை காப்பாற்றத்தான் பாடுபடும். நிறைய பேர் இன்னைக்கு மூளை சொல்லும் வழியில் தான் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.

அது தவறு என்று சொல்ல வரவில்லை, இருப்பினும் சில விஷயங்களில் நம்முடைய மனசு சொல்வதையும் நாம் கேட்க வேண்டும். அந்த வரிசையில் நாம் எல்லோருக்கும் தெரிந்த, நாம் எல்லோரும் அறிந்த, இந்த 3 வார்த்தைகளை நாம் பயன்படுத்தினால், நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை, சில சமயங்களில் இந்த மூன்று வார்த்தைகளை சொல்வதற்கு நம்முடைய மூளையானது தடுக்கும். நம்முடைய மனசு அதை சொல் என்று தூண்டும். அது என்ன 3 வார்த்தை? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. பிரச்சினை என்பது ஒரு நெருப்பு மாதிரி, அது உங்களை மட்டும் பாதிக்காது. உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் கட்டாயம் பாதிக்கும். பிரச்சினை என்ற சூட்டில், நீங்கள் மட்டும் பொசுங்குவது அல்லாமல், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து பொசுக்கி விடுவீர்கள். எப்போதுமே அந்த நெருப்பை ஊதி ஊதி பெரிதாக்காமல் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை கேட்டு உடனடியாக அணைத்துவிட வேண்டும்.

மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனது சொல்லும். ஆனால், நம்முடைய கௌரவம் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தை நமது மூளை சொல்லும். அந்த சமயத்தில் கௌரவம் பார்க்காமல் நாம் கேட்கக்கூடிய மன்னிப்பு நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமே கிடையாது. அடுத்தபடியாக, யாரும் தனித்துவமாக இந்த பூலோகத்தில் அவதரித்து, தானாக சுயம்புவாக வளரப்போவது இல்லை. யாராக இருந்தாலும் ஒருவரை, சார்ந்து தான் வாழ வேண்டும். எவராலும் தனியாக இருந்து வாழ்ந்துவிட முடியாது. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் அடுத்தவர்களிடம் நாம் எதை கேட்கும்போதும், பணிவாக கேட்கவேண்டும். ‘ப்ளீஸ்’ அப்படி என்ற வார்த்தையை கொஞ்சம் உங்க வாழ்க்கையில யூஸ் பண்ணி தான் பாருங்களேன்! அதிகாரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரிடமும் தன்மையாக பேசி பழகுங்கள் உங்களுடைய வாழ்க்கை இனிமையாகும்.

‘நன்றி’ என்ற வார்த்தையை காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. யார், யாருக்காக உதவி செய்தாலும் உடனடியாக உங்களது அன்பை, அன்பு கலந்த வணக்கத்தை, நன்றியை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். உங்களுடைய உற்றார் உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய நண்பருக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இப்படியாக நீங்கள் நன்றி என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருக்க, உங்களது வாழ்க்கையில் நிச்சயம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு உங்களுக்கான மதிப்பு கூடிக்கொண்டே செல்லும். நிச்சயமா இந்த 3 வார்த்தையும் நமக்கு தெரிஞ்சிருக்கும். உங்களுடைய மனசாட்சியை தொட்டு நீங்களே கேட்டுப் பாருங்கள்! இந்த வார்த்தைகளை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அந்தந்த இடத்தில் பயன்படுத்துகிறார்களா? இனியாவது பயன்படுத்திப் பாருங்கள்! உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் கஷ்டப்படவே தேவையில்லை. ஈஸியா வாழ்ந்துட்டு போயிடலாம். ஒரு 10 நாள், கஷ்டப்பட்டு ட்ரை பண்ணுங்க! ‘ப்ளீஸ்’ அதுக்கப்புறம் அதுவே உங்களுக்கு நிச்சயம் பழகிடும்.