வாழ்வில் வளம் பெற, வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, குறிப்பாக யாரிடமும் ஏமாறாமல் வெற்றி பெற என்ன செய்வது ??

ஒருவருடைய வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், அவருடைய குடும்ப சூழ்நிலை சந்தோஷமாக இருக்கவேண்டும். வீடு சுபிட்சம் அடைய வேண்டும் என்றால், வெறும் காசு பணம் இருந்தால் மட்டும் போதாது. நிம்மதியும் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் செல்லும்போது, சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. மனநிறைவான சூழ்நிலையில் சந்தோஷமாக வீட்டிலிருந்து வெளியே கிளம்பி விட்டால், வெளியில் செல்லக் கூடிய காரியங்களும் நிச்சயம் வெற்றியடையும். வீட்டிலிருந்து கிளம்பும்போதே சண்டை சச்சரவு என்றால் கட்டாயம் வெளியில் சென்று, நம்முடைய முன்னேற்றத்திற்கு எந்த ஒரு வேலையிலும் கவனத்தைச் செலுத்த முடியாது. முதல் விஷயம் வீடு நிம்மதியாக, சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக நாம் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அடுத்தவர்களிடம் ஏமாந்து கொண்டே இருந்தால், நம்முடைய வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால், வீட்டில் சந்தோஷம், இருக்கவேண்டும். இரண்டாவதாக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்த இரண்டிற்கும், இரண்டு பரிகாரங்கள் உள்ளது. ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரம் தான் இது. அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.முதலில் உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், ஒரு பாத்திரத்தில் முடிந்தால் செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் நல்ல தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு, ஒரு எலுமிச்சைப் பழச்சாறு முழுதையும் பிழிந்து விடுங்கள்.

2 பிரியாணி இலை, 2 பட்டை, 2 லவங்கம், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு இவை அனைத்தையும் மொத்தமாக போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடும் போது அதிலிருந்து வாசனை கலந்த ஆவி வரும். இந்த வாசம் நிறைந்த பாத்திரத்தை, ஒரு தட்டின் மீது எடுத்து வைத்து, உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். அல்லது அந்த வாசம் வீடு முழுவதும் பரவுவதற்கு வீட்டின் நடுப்பகுதியில் கூட வைத்து விடலாம். இந்த சுவாசத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுவாசித்தால் மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை உங்களுக்கு எந்த கிழமையில், எந்த நேரத்தில் முடியுமோ இப்படி செய்து வந்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்ததாக யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால், தினந்தோறும் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, இறை வழிபாட்டை செய்து விட்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வாசனைப் நிறைந்த பொருள் கோரசனம் அல்லது கோரஜனம் என்று சொல்லுவார்கள்.

இந்த பொருளை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த கோரோசனையை உங்களது வலது கை மோதிர விரலால் தொட்டு ஒரு நிமிடம் உங்களது குலதெய்வத்தை நினைத்து, உங்களது குலதெய்வத்தின் பாதத்தை தொட்டு உங்கள் நெற்றியில் ஒற்றிக் கொள்வது போல, மனதிற்குள் நினைத்துக் கொண்டே, உங்கள் மோதிர விரலில் இருக்கும் கோரோசனையை கொஞ்சமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். அந்த கோரோசனைக்கு மேல் விபூதி குங்குமம் என்ன திலகம் வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நாளில் உங்களுக்கு இதன் மூலம் விழிப்புணர்வு, ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இதை உங்களது வாழ்நாள் பழக்கமாக, தினம்தோறும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டே வந்ததிருந்தால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களுக்கு தோல்வி இருக்காது. வாழ்க்கையில் அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டே போவதை அனுபவபூர்வமாக நிச்சயமாக உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.