விக்ரம் படத்தை தொடர்ந்து AK 61 பெரிய அளவில் பேசப்படும்..! அடித்து சொல்லும் சினிமாவாசிகள்..!

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார். ஹச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஏகே 61 படத்தில் அஜித்துடன் கை கோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, கன்னட நடிகர் அஜய், ஜான் கொக்கின், யோகி பாபு, மகாநதி சங்கர், சமுத்திரகனி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அண்மையில் கூட பேங்க் மாதிரியான செட் போட்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட படபிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக உருவாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் அல்லது படத்தில் பயணித்தவர்கள் கூறுகின்றனர். கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அதுபோல அஜித்திற்கு இந்த திரைப்படம் இருக்கும் என கூறுகின்றனர் அந்த அளவிற்கு கடுமையாக உழைத்து வருகிறார் என பேசப்படுகிறது. கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் கல்லாகட்ட காரணம் கமல் அனைத்து இடங்களுக்கும் சென்று ப்ரோமோஷன் செய்து அசத்தினார் ஆனால் அஜித் ப்ரோமோஷன் என்றாலே அந்த பக்கம் திசை திரும்ப மாட்டார். படம் நன்றாக இருந்தாலும் மிகப் பெரிய ஒரு வெற்றியை ருசிக்க ப்ரமோஷன் என்பது தேவை அதற்கு நடிகர்கள் போக வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் ஏகே 61 படத்தின் ப்ரோமோஷன் எப்படி பெரிய அளவில் இருக்குமா என்று…

By admin