விநாயகப் பெருமானை ஒருமுறை இப்படி வழிபாடு செய்தால் போதும் !! தடைகள் என்ற வார்த்தையே உங்கள் வாழ்க்கையில் இருக்காது !!

ஒரு மனிதனால் தடைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து விட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினால், ‘நிச்சயம் தடைகள் இல்லாத வாழ்க்கையை மனித பிறவியில் வாழவே முடியாது’ தான். ஆனால், தடைகளை தகர்த்தெறிந்து, மன உறுதியோடு, விடா முயற்சியின் மூலம் வெற்றிக் கொடியை நிச்சயம் நம்மால் நட முடியும். அதே சமயம் இறைவனின் அருளாசியும் பெற்றிருக்க வேண்டும். தடைகளை தகர்த்தெறியும் கடவுள் என்றால், நிச்சயம் விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு தான் அதில் முதலிடம். விநாயகப் பெருமானை எப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் தடையற்ற முன்னேற்றத்தை பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்தப் பதிவின் இறுதியில், விநாயகப் பெருமானுக்கு எந்த இலையை வைத்து வழிபாடு செய்யும் பட்சத்தில், தீராத கடனில் இருந்து தப்பிக்க முடியும் என்ற சின்ன சூட்சம ரகசியத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சரிங்க, இப்போ விநாயகப்பெருமானை எப்படி வழிபாடு செய்தால் தடைகள் உடனடியாக தகர்க்கப்படும். பார்த்து விடலாமா? காலை வேளையில் விநாயகப் பெருமானின் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு வெற்றிலை, பாக்கு, பூ பழம் சேர்ந்த தாம்பூலத்தை வைத்து, ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லையும் வைத்து, 11 மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்த பின்பு, மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை விநாயகரிடம் சொல்லி, அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நேர்மறையாக வேண்டிக் கொள்ள வேண்டும்.

நேர்மறையாக என்றால், எதிர்மறை வார்த்தைகளை உச்சரித்து ‘இந்த கஷ்டம் எனக்கு வந்துவிடுமோ, இதனால் பிரச்சனை வந்துவிடுமோ’! என்று பயந்து வேண்டி கொள்ளாமல், நான் அடியெடுத்து வைக்கக் கூடிய குறிப்பிட்ட இந்த விஷயம் ஜெயமாக முடியவேண்டும். தடைகள் வந்தால், அதை தகற்த்தெரியக் கூடிய சக்தியும், மனப்பக்குவம் எனக்கு வர வேண்டும், என்றவாறு நேர்மறை யோடு வேண்டுதலை வையுங்கள். அதன் பின்பு விநாயகரது கோவிலை 11 முறை வலம் வந்து, விநாயகருக்கு பிடித்த தோப்புக் கரணத்தை 11 முறை போட்டு, அதன் பின்பு உங்களது காரியத்தை தொடங்குங்கள். நிச்சயம் அதில் தடை வருவதற்கு வாய்ப்பே இல்லை. தடைகள் வந்தாலும் கூட, அதை அப்படி தூக்கி போட்டுவிட்டு உங்கள் வேலையை, நீங்கள் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள்.

புதுசா ஒரு வேலையை தொடங்குகிறீர்கள், இன்டர்வியூக்கு போறீங்க, வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடக்க, இப்படி எந்த ஒரு நல்ல காரியத்திற்கும், இந்த வழிபாட்டை செய்யலாம். தொடர்ந்து 11 நாட்கள் தாழம்பூவின் இலையை கொண்டு போய் விநாயகரின் பாதங்களில் வைத்து வேண்டுதலை வைக்கும் பட்சத்தில் உங்களுக்கு செல்வவளம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று சில சாஸ்திர குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் அகத்திக் கீரையின் இலைகளை சிறிதளவு எடுத்து வந்து வினாயகரின் பாதத்தில் வைத்து தொடர்ந்து 11 நாட்கள் வழிபடும் பட்சத்தில் தீராத கடனுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கோவிலில் கொண்டுபோய் விநாயகரின் பாதங்களில் இந்த இலைகளை வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய வீட்டு பூஜை அறையில் விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பு, இந்த இலைகளை வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள் கட்டாயம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.