விநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு வகை யானை பார்திருக்கீங்களா ?? ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ !!

இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்கிற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. நம்புபவர்களுக்கு கடவுள் இருக்கிறார். நம்பாதவர்களுக்கு கடவுள் இல்லை அவ்வளவு தான் வித்தியாசம். யாரும் கடவுளை பார்த்ததில்லை. இந்து மத கடவுளுக்கு மட்டும் எண்ண முடியாத அளவிற்கு உருவங்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த உருவங்கள் இந்த பிரபஞ்ச சக்திக்கு அப்பாற்பட்ட உருவங்களா? அல்லது யாரோ சிலருடைய கற்பனை திறனா? என்கிற கேள்வி அடிக்கடி நமக்குள் எழும். அவ்வகையில் அப்படியான உருவங்கள் அல்லது புராண கதைகள் சான்றாக அல்லது நம் கண் முன்னே உண்மையில் நிரூபிக்கப்படும் பொழுது நாம் சற்றே மெய்சிலிர்த்து போக வேண்டி தான் இருக்கிறது.

விநாயகரின் முகம் கொண்ட மனித குழந்தை சில ஆண்டுகளுக்கு முன் பிறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்தது. அது இணையத்தில் மிகவும் வைரல் ஆகியது பலரும் அறிந்த ஒன்று தான். இந்த உலகத்தில் விசித்திர ஜீவன்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் நிறைய இருக்கின்றன. அவ்வகையில் விநாயகருக்கு தும்பிக்கை இருப்பது போல் அவருடைய வாகனமாக இருக்கும் எலிக்கும் தும்பிக்கை உள்ளது. அப்படி ஒரு விசித்திரப் பிராணி இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். ‘யானை ஷ்ரூவ்’ என்று அழைக்கப்படும் இதற்கு ஆங்கில பெயர் ‘எலிபண்ட் ஷ்ரூவ்’ அல்லது ‘ஜம்பிங் ஷ்ரூவ்’ என்றும் கூறப்படுகிறது. எலி இனத்தை சேர்ந்த இந்த சிறிய பாலூட்டி இனம் பார்ப்பதற்கு நம் விநாயகரை போலவே இருக்கும்.

குதித்து குதித்து அழகாக செல்லும் இந்த மூஞ்சூறு ஆப்பிரிக்க வனாந்தரத்தில் அதிகம் காணப்படுமாம். ஆண்டுக்கு ஒரு குட்டி ஈனும் இதன் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் தானாம். மண்ணில் வளை தோண்டி வசிப்பிடத்தை உருவாக்கி, ஜோடியாக வாழும் இந்தக் குட்டி மூஞ்சூறு வவ்வால், புழு, பூச்சி போன்றவற்றை வேட்டையாடி உண்ணுமாம். இதற்கு ‘ஷ்ரூவ் மவுஸ்’ என்கிற இன்னொரு பெயரும் உண்டு. அதிகபட்சம் 500 கிராம் எடை வரையும், 30 சென்டி மீட்டர் நீளமும் வரை வளரக்கூடியது. முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீளமாகவும் இருக்கும் இந்த ஷ்ரூவ் வேகமாக ஓடக் கூடிய ஆற்றல் கொண்டிருந்தாலும் பாம்பு, பல்லி, பறவை போன்றவற்றால் வேட்டையாடப்பட்டு விடும் என்பது தான் சோகத்திலும் சோகம். யானை முகம் கொண்ட இந்த குட்டி எலி மட்டுமல்ல..

இன்னும் பல உயிரினங்கள் யானை முகத்துடன் நம் விநாயகரை நினைவுபடுத்தும் விதமாக இந்த உலகத்தில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் வண்டுகள், யானை முகம் கொண்ட பட்டாம்பூச்சி, யானை முகம் கொண்ட காகம், மீன் வகைகள், மான் இனங்கள், பல்லி வகை, தவளை, குரங்கு, கரடி என்று வித்தியாசமான தும்பிக்கையுடன் கூடிய ஜீவராசிகள் இருப்பது மேலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் நமக்கு கடவுள் இருப்பதை அடிக்கடி உணர்த்துகிறது. நம் கண்களுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை ரகசியங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் உடனே புல்லரிக்க தான் செய்கிறது. பிள்ளையார் தான் யானைமுகம் வைத்திருப்பார் என்று பார்த்தால் அதன் வாகனமான எலியும் யானை முகம் வைத்திருப்பதை கண்டு ரசியுங்கள் என்று கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.