வியாபாரத்தில் பெருத்த நஷ்டமா ?? தொழிலில ஏற்பட்ட நஷ்டத்தை, சரிசெய்து லாபமாக மாற்ற முடியும் !! இந்த ஒரே ஒரு பொருளை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால் போதம் …

இன்றைக்கு இருக்கக் கூடிய கால சூழ்நிலையில் நிறைய பேர் வியாபாரத்தில் முதலீடு செய்துவிட்டு, அந்த முதலீட்டை மீட்டு எடுக்க முடியாமல், தவித்து வருகிறார்கள். நீங்களும் உங்களுடைய பணத்தை ஏதாவது ஒரு பொருளில் முதலீடு செய்துவிட்டு அந்தப் பொருளை விற்க முடியாமல் தவித்து வருகிறீர்களா? நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட பொருளை, ஏற்றுமதி செய்ய முடியாமல், விற்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கட்டாயம் கடன் சுமையும், அதற்கு கட்டக்கூடிய வட்டி பிரச்சனையும் அதிகரிக்கத்தான் செய்யும். யாருமே கையில் வைத்திருக்கும் பணத்தை வியாபாரத்தில் போடுவதில்லை.

கடன் தொகையை வாங்கி தான் வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள். எதிர்பாராமல் உலகிற்கே வந்த சோதனையில், நாமும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மன தைரியத்தோடு என்ன செய்ய வேண்டுமென்று, குழப்பமான மனநிலைக்கு செல்லாமல், தெளிவாக சிந்திக்க வேண்டியது அவசியம். அதேசமயம் இந்த பிரச்சினையிலிருந்து, வியாபாரத்தில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு ஆன்மீகரீதியாக ஏதேனும் வழி உண்டா என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்காக, கொடுக்கப்பட்டுள்ள பதிவு தான் இது. நீங்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இதற்கு அதிகப்படியான செலவு எதுவும் இல்லை. நம்பிக்கை மட்டுமே முதலீடு.

உங்களுடைய வீட்டின் அருகில் ஆலமரம் இருந்தால், அந்த ஆலமர விழுதிலிருந்து கொஞ்சமாக உடைத்து, சிறு துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஆலமரத்தில், ஆல மரக் கொட்டை இருக்கும். அதிலிருந்து மூன்று கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக ஜவ்வாது பொடி. வாசனை மிகுந்த இந்த பொடிக்கு, எந்த நல்லதையும், தன்வசப்படுத்த கூடிய சக்தி உள்ளது. அதாவது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை உள்ளது. எதிர்மறை ஆற்றலை தகர் தெரிந்துவிடும். நாம் தொழில் செய்யும் இடத்தில், கெட்ட சக்திகளை நெருங்க விடாது. இதனால் இதையும் ஒரு துளி எடுத்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு 3 பொருள் மட்டுமே போதுமானது.ஆல மரக் கொட்டை, உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதை நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு சிறிய மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த ஆலமர விழுதையும், ஆலமர கொட்டையையும் வைத்து, முடிச்சு போல கட்டி, அந்த முடிச்சின் மேல் கொஞ்சம் ஜவ்வாது பவுடரை தடவி, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம். நீங்கள் முதலீடு செய்து வைத்து ஏற்றுமதி செய்ய முடியாமல் விற்க முடியாமல் பெரிய அளவில் ஏதாவது பொருட்கள் தேக்கம் அடைந்து இருந்தாலும் கூட, அந்த பொருட்களின் மேல் இந்த மஞ்சள் நிற முடிச்சு வைக்கும் பட்சத்தில் அந்த பொருள் சீக்கிரமே விற்பனை ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆலமர விழுது போல் உங்களுடைய வியாபாரம் விருத்தி அடைய வேண்டும் என்றால் இப்படி ஒரு முறை செய்து தான் பாருங்களேன். நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு, சுலபமான ஆன்மீக ரீதியான முறைதான் இது. பரிகாரத்தை செய்வதன் மூலம், உங்களுக்கு நஷ்டம் என்று சொல்லிக்கொள்ள எதுவும் வரப்போவது இல்லை. லாபம் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.