வியாபாரத்தில் வெற்றி கொடிகட்டிப் பறக்க சுலபமான தந்திரம், உங்களுக்காக !! பல மடங்கு லாபத்தை கொட்டிக் கொடுக்கும் சின்ன ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ??

வாழ்நாள் முழுவதும் எத்தனை நாட்கள் தான் அடுத்தவர்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவது? நாமும் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாற வேண்டும் என்பதற்காகவும், சீக்கிரமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், நம்மில் பலபேர் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் ஏதாவது ஒன்றை தொடங்குவோம். நாம் முதலீடு செய்த பணத்திற்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். ஆனால், அந்த வருமானத்தில் செலவு போக லாபம் என்று நம்மால் எதையுமே எடுக்க முடியாது. பலபேர் சொந்தத் தொழிலை ஆரம்பித்து விட்டு, இதே பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். கடனை வாங்கி முதலீடு செய்தாகிவிட்டது. எப்படியாவது வருமானத்தை ஈட்டி, வட்டிகட்டி லாபம் பெற வேண்டும். என்ன செய்வது? இப்படிப்பட்ட குழப்பத்திற்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நிறைய பேருக்கு இந்த சூட்சம ரகசியம் தெரிந்து இருக்கலாம். ஆனால், இதில் என்ன காரணம் மறைந்திருக்கின்றது என்ற ரகசியத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வியாபாரமாக இருந்தாலும் சரி, சொந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, அதில் நல்ல லாபம் கிடைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட ஒரு பங்கை திருப்பதி வெங்கடாஜலபதி கொடுப்பதாக நிறைய பேர் வேண்டுதல் வைத்திருப்பார்கள். அதாவது பெருமாளையே பார்ட்னராக வைத்திருப்பார்கள். ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தால், பத்து ரூபாய் பெருமாளுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்படி பத்து ரூபாயில் இருந்து, கோடி கோடியாக பணம், பெருமாள் உண்டியலில் இன்றளவும் கொட்டி வருகின்றது என்ற உண்மையை நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

பெருமாள், குபேரனிடம் கடன் வாங்கி இன்றளவும் வட்டித் தொகையை மட்டும் தான் கட்டி வருகிறார். இதுவும் நமக்கு தெரியும். வடிகட்டும் கஷ்டம் என்ன என்பது நம்மைவிட, அந்த பெருமாளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.ஆக, எவரொருவர் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்து, கஷ்டப்பட்டு தொழிலை முன்னேற்ற நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த பெருமாள் நிச்சயம் உதவி செய்வார். எம்பெருமானுக்கு வட்டி கட்டுவதில் உள்ள சிரமம் தெரியும் என்ற காரணத்தினால், நம்முடைய கஷ்டத்தை அறிந்து, நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை கட்டாயம் தீர்த்து வைப்பார் என்ற காரணத்தால்தான், பெருமாளை எல்லோரும் பார்ட்னராக வைத்துள்ளார்கள். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். தவறொன்றும் கிடையாது. வியாபாரத்துக்கு உரிய கிரகம் என்றால் புதன் பகவான். தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால், புதன் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்.

புதனுக்கு உரிய நிறம் பச்சை. பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிந்து இருப்பது போல மகாலஷ்மியின் திருவுருவப்படத்தை, ஆடம்பரமாக நம்முடைய வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும், மாட்டி வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தேடி தரும். அடுத்தபடியாக மகாலட்சுமியும் பெரும்பாலும் அலங்காரப் பிரியர்கள். கஷ்டத்தோடு கஷ்டப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் கொஞ்சம் பசும் பாலை வாங்கி, அதை சுண்டக்காய்ச்சி அதில் ஏலக்காய், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, கல்கண்டு சேர்த்து மகாலட்சுமிகு நைவேத்தியமாகப் படைத்து, அந்தப் பாலை உங்களுடைய தொழிலாளர்களுக்கு தானமாக கொடுத்து வாருங்கள். இந்தப் பூஜையை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் செய்யலாம் காலை 6 மணிக்கும் செய்யலாம். பெருமாளையும் உங்களுடைய தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு, இரண்டாவதாக சொன்ன இந்த பரிகாரத்தையும் தொடங்கும் நாளையும் சேர்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடம், இதே நாள், இதே தேதியில் உங்களுடைய தொழிலிலில் நீங்கள் நிச்சயம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமே கிடையாது.