வியாழக்கிழமை தோறும் இனிக்கும் இந்த விளக்கை ஏற்றினால், உங்களுடைய வாழ்க்கையும் இனிப்பாக மாறிவிடும் தெரியுமா ??

நம்முடைய வீட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், இந்த இனிப்பான தீபத்தை ஏற்றி வைத்தால், நம்முடைய வாழ்க்கையும் அது போல் இனிப்பாக மாறிவிடுமாம். செவ்வாய், வெள்ளி அன்று மட்டும் தீபம் ஏற்றுவது ஒரு சிலருடைய வழக்கமாக இருந்து வருகிறது. குபேரனுக்கு உகந்த நாள் வியாழக்கிழமையாக இருக்கிறது. அதனால் வியாழக்கிழமை அன்று தீபமேற்றி வழிபடுபவர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பார்கள். செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் வியாழக்கிழமை அன்று நீங்கள் வைக்கும் வேண்டுதல்கள் வருமான ரீதியான முன்னேற்றத்தை உங்களுக்கு தரும். ஒவ்வொரு வியாழக்கிழமையும், குபேரனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். அவரை பலரும் நாணயங்களை அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

அது மிகவும் சிறப்பான பலன்களை தரும். அது போல் நாணயங்களை அர்ச்சனை செய்து, இந்த இனிப்பான தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய வருமானம் பெருக மனதார வேண்டிக் கொண்டு வாருங்கள். கூடிய விரைவில் நிச்சயம் உங்களுடைய வருமானம் பெருகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி நாம் ஏற்ற வேண்டிய தீபம் என்ன தீபம்? அதை எப்படி ஏற்ற வேண்டும்? என்ற கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் விடையை அறிந்து கொள்வோம் வாருங்கள். இனிப்பான தீபம் எனும் பொழுதே பலருக்கும் இதற்கான விடை தெரிந்து இருக்கலாம். ஆமாங்க வேற ஒன்றுமே இல்லை கல்கண்டு தீபம் தான் அது. கல்கண்டு தீபம் ஏற்றுவது மிக சிறப்பான பலன்களை நமக்கு வாழ்க்கையில் தரவல்லது. இதைப்பற்றி தெரிந்தவர்கள் நிச்சயம் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு வந்து கொண்டிருப்பார்கள். தெரியாதவர்கள் இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வியாழக்கிழமை அன்று குபேரனுக்கு உரிய வடக்கு திசையை நோக்கி அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குபேரன் படம் அல்லது விக்கிரகம் எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி எப்படி செல்வத்திற்கு அதிபதியாக இருக்கின்றாரோ? அதே போல் தான் குபேரனும் நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு, செல்வத்தை நமக்கு வாரி வழங்கக் கூடியவர். வடக்கு என்பது குபேர திசை. அந்த திசையை நோக்கி அவருடைய படம் வைத்து, அகல் விளக்கு அல்லது குபேர விளக்கு என்று பிரத்தியேகமாக குபேரனுக்கு விளக்கு ஏற்றும் வகையில் விற்கப்படுகின்ற அந்த தீபத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.அந்த விளக்கில் சிறிய சிறிய அளவில் இருக்கும் கல்கண்டுகளை எடுத்துக் கொண்டு அதை 5 என்ற எண்ணிக்கையில் விளக்கில் போடுங்கள். பின்னர் அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம். சதுரமாக இருக்கும் கல்கண்டாக இருந்தாலும் சரி, டைமன் வடிவில் இருக்கும் கல்கண்டாக இருந்தாலும் சரி, எது வேண்டுமானாலும் தாராளமாக பயன்படுத்தலாம். சிலர் டைமண்ட் கல்கண்டு போட்டு விளக்கேற்றினால் நல்லது என்பார்கள். அப்படி எல்லாம் இல்லை, எது போட்டாலும் நல்லது தான். பின்னர் பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வழிபடுங்கள். இந்த தீபம் ஏற்றும் பொழுது நாணய அர்ச்சனை செய்பவர்கள் செய்யலாம். அதாவது 51 அல்லது 108 என்கிற எண்ணிக்கையில் 5 ரூபாய் நாணயங்களை முன்கூட்டியே எடுத்து வைத்திருப்பார்கள். ஒரு தாம்பூல தட்டில் குபேரரை அமர்த்தி அவர் மீது ஒவ்வொன்றாக அர்ச்சனை செய்வார்கள். இது போல் செய்தால் பொருளாதார நிலை மேன்மை அடையும், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். இதை இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையினர் கடைபிடித்து வருகின்றனர். தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு நீங்களும் பயனடையுங்கள்.