விராத் கோஹ்லி மற்றும் ஹாசிம் அம்லா சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் !!!

வெள்ளிக்கிழமை தனது 78 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பாபர், 103 ரன்கள் எடுத்து தனது அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்தார்.பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் வெள்ளிக்கிழமை தனது 13 வது ஒருநாள் சர்வதேச சதத்தை அடித்ததைதால் தென்னாப்பிரிக்காவின் 274 என்ற இலக்கை இறுதி பந்தில் தனது அணி வெற்றிபெற உதவியது.பாபர் உலகளவில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்,

மேலும் அவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 13 வது சதம் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹாஷிம் அம்லா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோரை விஞ்சி இந்த சாதனையை நிகழ்த்தினார்.பாபர் 13 சதம் அடிக்க 76 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துள்ளார், இப்போது வரை அதிவேகமாக இருந்த அம்லா 83 இன்னிங்ஸ்களில் தனது 13 வது ஒருநாள் சதத்தை அடித்தார்.

13 ஒருநாள் சதங்களை அடித்த கோஹ்லி 86 இன்னிங்ஸ்களை எடுத்திருந்தார்.ஆஸ்திரேலியா மகளிர் கேப்டன் மெக் லானிங்கும் 76 இன்னிங்ஸ்களை எடுத்து தனது 13 வது ஒருநாள் சதத்தை அடித்துள்ளார் என்பது கறிப்பிடத்தக்கது.இந்த விறுவிறுப்பான வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும்.