வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாது. காரிய தடைக்கு, தொடர் தோல்விக்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். காரிய தடைக்கு, தொடர் தோல்விக்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் !!

சில சமயங்களில் காலம் நேரம் நல்ல நாள் பார்த்து செய்யக் கூடிய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு விடும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து செய்யக்கூடிய காரியங்களில் ஒன்று தடைபடுகிறது என்றால், அது நம்முடைய தலையெழுத்து என்றும் சொல்லலாம். அல்லது நாம் அறியாமல் செய்த ஏதோ ஒரு தவறின் மூலம் அந்த காரியம் தடைபட்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தினம் தோறும் நாம் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது எதர்ச்சியாக எல்லோரும் செய்யும் ஒரு தவறு என்ன? அந்த தவறை செய்யாமல் வெளியே கிளம்பும் போது எந்த மந்திரத்தை சொல்லி கிளம்பினால் நல்ல காரியங்கள் தடைபடாமல் சுமுகமாக நடைபெறும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய வீட்டில் நல்ல தேவதைகள் வசிக்கும் இடமாக சொல்லப்படுவது, நம் வீட்டு நில வாசப்படி. ஒரு வீடு நன்றாக இருக்கவும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்கவும் நில வாசப்படியின் அம்சம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்‌. இதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். முடிந்தவரை கோவில்களுக்குச் செல்லும்போது இறைவனின் மீது சாத்திய மாலையில் ஒன்றை வாங்கி வந்து நம் வீட்டு நிலை வாசற் படியில் மாட்டி வைத்தால் அதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். நம்மில் நிறைய பேர் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவசரத்தில் நில வாசல் படியை மிதித்து வெளியே செல்வோம். நம்முடைய கால்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாசப்படியை மிதிக்கக் கூடாது. அப்படி மிதிக்கும் பட்சத்தில் நில வாசல் படியில் வசிக்கும் கிரக லட்சுமிகளும், அஷ்ட லட்சுமிகளும், குலதெய்வமும் நம்மை நிச்சயம் ஆசீர்வதிக்க மாட்டார்கள்.

முடிந்தவரை வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது இனி வாசல்படியை மிதிக்கும் அந்த தவறை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் செய்து விடாதீர்கள். வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, உங்களின் குலதெய்வ பெயரை சொல்லிவிட்டு, ‘ஓம் கிரகலட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி விட்டு, வாசல் படியை உங்கள் கால்கள் தாண்ட வேண்டும். நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று உங்கள் வீட்டு கிரகலட்சுமி நிச்சயம் உங்களை வாழ்த்துவாள். சில பேருக்கெல்லாம் வீட்டிற்குள் நுழைந்து உடன் பிரச்சனைகள் வீட்டில் தொடங்கிவிடும். நீங்கள் வெளியில் சென்று, பின்பு வீட்டிற்குள் நுழையும் போது ‘ஓம் அஷ்ட லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அதன் பின்பு வீட்டிற்கு உள்ளே வாருங்கள்.

அஷ்ட லக்ஷ்மியின் கடாட்சம் உங்களுக்கு கிடைத்து, வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷமான சூழ்நிலை நிலவ இது ஒரு நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. நாம் உச்சரிக்கும் மந்திரம் நேர்மறை ஆற்றலை கட்டாயம் அதிகரிக்கும். உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் குறைவதற்கும், இந்த மந்திரங்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். மறக்காமல் இன்றிலிருந்து இந்த பழக்கத்தை கொண்டு வந்துதான் பாருங்களேன்! வீட்டில் சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும், மனநிறைவும், மனநிம்மதியும் நிறைந்திருக்க இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.