வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை ஓட ஓட விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல் இந்த நான்கு தீபத்திற்கு உண்டு !!

வீட்டில் எப்போதுமே சண்டை சச்சரவு, இரவில் நிம்மதியான தூக்கம் இன்மை, பணக்கஷ்டம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். முதலில் சுறுசுறுப்பற்ற நிலைமை ஏற்படும். அடுத்ததாக, கைகால், மூட்டு வலிகள் உண்டாகும். கண் எரிச்சல் ஏற்படும். சில பேருக்கு கண்கள் கூட சிவப்பாக மாறும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு சில சமயங்களில் மருத்துவரை அணுகினாலும் எந்த ஒரு பயனும் இருக்காது. இந்த பிரச்சினைகளுக்கு, நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள் கூட காரணமாக இருக்கலாம். சரி. இந்த துர் சக்திகளை நம்முடைய வீட்டில் இருந்து வெளியேற்ற, என்னதான் செய்வது? கெட்ட சக்திகளை, விரட்டி அடிக்கும் ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரமானது, இறைவனை மனதில் நினைத்து செய்யக்கூடிய பரிகாரம் தான்.

எந்தவிதமான மந்திர தந்திர முறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாகவே, வீட்டில் இருப்பவர்கள், தங்களை கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வீட்டை சுத்தம் செய்து கொள்ள இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். பயம் தேவையே கிடையாது.எப்பேர்ப்பட்ட கெட்ட சக்தியையும் அழிக்கக்கூடிய தன்மையானது, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு தான் உள்ளது. அதாவது, உக்கிரம் என்றாலே, அது உஷ்ணத்தை குறைக்கிறது. அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்த உக்கிர தெய்வங்கள் எல்லாமே, அக்னி தன்மை கொண்டவர்கள் தான். இவர்கள் எல்லோருமே அக்னி சொரூபம் என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவேதான், வாராகி வழிபாடு, நரசிம்ம வழிபாடு, காளிதேவியின் வழிபாடு, கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து நீக்கிவிடும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வழிபாட்டில், சூரிய நமஸ்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு ஒரு காரணமும் இதுவாக கூட இருக்கலாம். ‘

நம் உடம்பில் இருக்கும் தேவையில்லாத கெட்ட சக்தியானது, சூரிய ஒளியின் மூலம் பஸ்பம் ஆக்கப்படும்’ என்பதற்காகக் கூட சூரிய வழிபாட்டை செய்ய சொல்லி இருக்கலாம்!. நம்முடைய முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு சொல்லி வைக்கவில்லை என்பது இதிலிருந்து புரிகிறது. சரி. பரிகாரத்திற்கு செல்வோம். உங்களுடைய வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அந்த அறைகளின் ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு, அந்த அறைகளில் நான்கு மூலைகளிலும், நான்கு அகல் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, ஏதாவது ஒரு சிறிய பல்பை மட்டும் எரிய வைத்தால் போதும். எந்த ஒரு சலனமும் இல்லாமல், தீப ஒளியானது நேராக நின்று எரியும் பட்சத்தில், உங்கள் வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கமும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். ஜன்னல்கள் சாத்தப்பட்ட பின்பும், காற்றுப்புகாத அறைக்குள், இருக்கும் தீப ஒளியில் அசைவு ஏற்பட்டால், கட்டாயம் உங்கள் வீட்டில் பிரச்சனை உள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். (உங்களுடைய வீட்டில் இரண்டு அறைகள் இருந்தாலும் சரி.

மூன்று அறைகள் இருந்தாலும் சரி. சமையலறை யோடு சேர்த்து, எல்லா அறைகளிலும் நான்கு மூலைகளிலும், நான்கு தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.) அதாவது, தீப ஒளியின் தாக்கம், தாங்க முடியாமல் கெட்ட சக்திகள் அலைபாய்வதன் மூலம் ஏற்படக்கூடிய அதிர்வுகளை தான், தீபச்சுடர் வெளிப்படுத்துகிறது. அந்த அகல் தீபத்தில் இருக்கும் எண்ணெய், தீரும்வரை தீபம் முழுமையாக எரிந்து முடியட்டும். அதுவரை வீட்டின் ஜன்னல் கதவுகளை திறக்க வேண்டாம். வீட்டிற்குள் இப்படியாக தீபம் ஒளிரும் சமயத்தில், வராகியம்மன் மந்திரங்களையோ அல்லது சிவபெருமானின் மந்திரங்களையோ ஒலிக்க செய்வது மிகவும் நல்லது. அதாவது உக்கிர தெய்வங்களின் மந்திரத்தை ஒலிக்க செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி. எப்போதுமே ஒருவருடைய வீட்டில் கெட்ட சக்தி ஆதிக்கம் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? மாதம் ஒருமுறை வரும் அமாவாசை தினத்தில் அல்லது பௌர்ணமி தினத்திலும் உங்களுடைய வீட்டில் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து வரலாம். எந்த கெட்ட சக்தியும், எந்த நேரத்திலும் உங்கள் வீட்டில் ஆதிக்கம் செய்யவே முடியாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.