வீட்டில் இருக்கும் தங்கம் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும் அடகு கடையில் இருக்கும் தங்கம் வீட்டிற்கு சீக்கிரம் திரும்பவும் என்ன செய்தால் வரும் தெரியுமா ??

பொதுவாகவே நம் வீட்டு தங்கம், அடகு கடைக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். ஆனால் சில தவிர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு, பணப்பற்றாக்குறை ஏற்படும் போது, வேறு வழியில்லாமல் தங்கத்தை அடகு வைத்து விடுவோம். வீட்டிலிருக்கும் லட்சுமியை இப்படி அடகு வைப்பது என்பது மிகவும் தவறான ஒன்று. முடிந்தவரை தங்கத்தை அடமானம் வைப்பது தவிர்த்து கொள்ளுங்கள். வேறுவழியில்லாமல் தங்கத்தை அடமானம் வைத்து விட்டோம். பலவகையான வருமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை. அடகு கடையில் இருந்து தங்கத்தை மீட்கும் நேரமே வரவில்லை! என்ற பிரச்சினை நம்மில் பலருக்கு உள்ளது. இது ஒருவகையான பிரச்சினை என்றால், வீட்டில் இருக்கும் தங்கம் எப்போது அடகு கடைக்கு சென்று விடுமோ என்ற சந்தேகத்தில் பலபேர் பயந்து கொண்டே இருப்பார்கள். அதாவது பிரச்சினைகள் பல வந்தாலும், பணத்தேவைகள் பல இருந்தாலும், சில பேர் தங்கத்தை அடமானம் வைக்க கூடாது என்ற தீர்மானத்தில் இருப்பார்கள்.

ஆகவே தங்கத்தின் மூலம் இரண்டு பிரச்சனைகள். அடமானத்தில் இருக்கும் தங்கத்தை எப்படி மீட்டுக் கொண்டு வந்து வீட்டில் வைப்பது? வீட்டில் இருக்கும் தங்கத்தை எப்படி அடமானம் போகாமல் பார்த்துக் கொள்வது? இரண்டு பிரச்சனைக்குமே பரிகாரம் உள்ளது. அது என்ன பரிகாரம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மங்களகரமான மஞ்சள் நிற பொருளுக்கும், தங்கத்திற்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. இதன்படி சிவன் கோவில்களில் மஞ்சளை அபிஷேகத்திற்காக தானமாக 3வாரம் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் மஞ்சளானது அம்பாளுக்கும், சிவனுக்கும் அபிஷேகத்திற்காக பயன்படுத்த வேண்டும். அதுவும் வியாழக்கிழமைகளில் மஞ்சளை தானம் கொடுப்பது மிகவும் சிறப்பான ஒன்று. கோவிலுக்கு சென்று மஞ்சளை வாங்கி கொடுத்து, வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் உங்களால் முடிந்தால், மஞ்சள் வாழைப் பழங்களை வாங்கி பசுமாட்டுக்கு கொடுக்கலாம். இப்படி மூன்று வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தொடர்ந்து செய்து வந்தால் மிகவும் நல்லது. அடமானத்தில் நீங்கள் எவ்வளவு அதிகமான நகையை வைத்திருந்தாலும், அந்த நகைகள் திரும்பவும்வீட்டிற்கு வர நல்ல தீர்வு கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கோவில்களில் அபிஷேகம் காண செல்லும்போது, சுவர்ண அபிஷேகம் நடைபெறும்.

அப்போது உங்கள் கையில் இருக்கும் சிறு மோதிரமாக இருந்தாலும், அதை சுவர்ண அபிஷேகத்துக்கு கொடுங்கள். இப்படி செய்யும்போது தங்கத்தால் உங்களுக்கு ஏதாவது தோஷங்கள் இருந்தால் கூட அது விலகும் என்று சொல்கிறது சாஸ்திரம். பொதுவாகவே நம் வீடு வாசனை நிறைந்த வீடாக இருந்தால் மங்களகரம் நிறைந்து இருக்கும் என்று சொல்லுவார்கள். இதன்படி மகாலட்சுமிக்கு பிடித்தமான சிகப்பு பன்னீர் ரோஜாவை வைத்து ஒரு திரவம் தயாரித்து அதில் ஒரு குண்டுமணி தங்கத்தை போட்டு வைப்பதால் நம் வீட்டில் தங்கம் நிலைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம். பன்னீர் ரோஜா சிலவற்றை எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைத்து, வடிகட்டி விட்டால், சுத்தமான பன்னீர் நமக்கு கிடைத்துவிடும். அந்த பன்னீரில், சிறிதளவு துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் தோடு உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குண்டுமணி தங்கம், அது மூக்குத்தியாக இருந்தாலும் பரவாயில்லை. நன்றாக கழுவிவிட்டு அந்த நீரில் அதை போட்டு வைத்து விடுங்கள்.

அனைத்தையும் ஒரு செம்பு சொம்பில் போட வேண்டும். நீங்களே தயாரித்த பன்னீரை செம்பு செம்பு நிரம்ப எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு துளசி, 4 ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குண்டுமணி தங்கம் சேர்த்த இந்த திரவத்தை அப்படியே, நீங்கள் தங்கம் வைக்கும் இடத்தில் மூடாமல் வைத்துவிடுங்கள். இந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று செய்யவேண்டும். அடுத்த பௌர்ணமி வரை இந்த திரவம் அப்படியே இருக்கலாம். மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அடுத்த பௌர்ணமிக்கு புதிதாக பன்னீர் தயாரித்து, மீண்டும் எல்லா பொருட்களையும் புதியதாக சேர்க்கவேண்டும். தங்கத்தை மட்டும் எடுத்து கழுவிவிட்டு மீண்டும் அந்த தங்கத்தை சேர்த்துக்கொள்ளலாம். இப்படி தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்கமானது எப்போதும் அடமான கடைக்கு செல்லாமலும் இருக்கும். மேலும் மேலும் தங்கம் சேர வழி வகுக்கும். பத்திரமாக உங்கள் வீட்டிலேயே தங்கம் இருக்கும் என்பதும் உண்மை. நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு.