வீட்டில் குடியிருக்கும் தரித்திரம் நீங்க வேண்டுமா !! துளசி வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள் !! ஒரு வாரத்தில் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வீட்டுக்கு வருவாள் ….

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம்? அதிகப்படியான பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பரிகாரங்களுக்கு இடமில்லை. மன உறுதியோடு, மகாலட்சுமி மனதில் நினைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு, துளசி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த துளசி வழிபாட்டை, ஆண்களும் மேற்கொள்ளலாம். பெண்களும் மேற்கொள்ளலாம். கைம்பெண்களும் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ‌ மன சுத்தத்தோடும், உடல் சுத்தத்தோடு இருப்பவர்கள் யாராக இருந்தாலும், துளசி தேவியை மனதார நினைத்து, வழிபடும் பட்சத்தில் உங்களுக்கான அருளாசி விரைவாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வீட்டில் துளசிச் செடியை வைத்து முறைப்படி எப்படி பூஜை செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் துளசி பூஜை செய்து, உங்களுடைய வீட்டை தரித்திர நிலையிலிருந்து, லட்சுமி கடாட்சம் நிறைந்த நிலைக்கு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பலனடையலாம். உங்களுடைய வீட்டில், தொட்டியில், தரைப்பகுதியில், துளசிச் செடியை அமைப்பதை விட, துளசிமாடம் வைத்து, அதன் மேல் துளசி செடியை வைப்பது தான் மிகவும் சிறந்தது. ஒருவருடைய வீட்டில் துளசி செடி வடகிழக்கு மூலையில் இருப்பது மிகவும் நல்லது.

அப்படி உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க முடியவில்லை என்றால், தாராளமாக வீட்டு மொட்டை மாடியில் துளசி மாடத்தை அமைக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. துளசிச் செடியை, வழிபடுபவர்கள் கட்டாயம் மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும். இந்த துளசி செடியோடு மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும் என்றால், சங்கு சக்கரம் இவை இரண்டையும் சேர்த்து வழிபடுவது அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சங்கு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். சக்கரம் என்பது சாளக்கிராமத்தை குறிக்கின்றது. உங்கள் வீட்டில் துளசி மாடத்தை பிரதிஷ்டை செய்யும்போது, முதலில் சங்கை வைத்து விட்டு, அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி, தண்ணீர் தெளித்து, மூன்று துளசிச் செடிகளை ஒன்றாக நட்டு, துளசி மாடத்தை அமைக்க வேண்டும். அதாவது நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி என்பதற்கான அர்த்தம் தான் இது. வீட்டில் துளசி மாடம் இருந்தால், தினம்தோறும் அதற்கு பூஜை செய்ய வேண்டியது அவசியம். அதாவது துளசி மாடத்தை சுற்றி சுத்தம் செய்துவிட்டு, அரிசி மாவால் கோலம் போட்டு, ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு பழமோ, அல்லது கற்கண்டையோ நெய்வேதியமாக வைத்து, பூஜை செய்ய வேண்டும்.

துளசி மாடம், காலை மாலை இரண்டு வேளையிலும் தீபமேற்ற படாமல் இருக்கவே கூடாது. இதேபோல் துளசி வழிபாட்டை காலை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது மிகவும் நல்லது. அதாவது காலை 6 மணிக்கு முன்பாக துளசி மாடத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ‌துளசிச் செடிக்கு இனிப்பு பண்டங்களை நிவேதனமாக வைத்தால், சுக்கிர யோகத்தையும் அடைய முடியும். சரி, துளசி செடியை பிரதிஷ்டை செய்யும்போது, மண்ணிற்கு அடியில் சங்கு வைத்துவிட்டோம். இப்போது சாளக்கிராமத்தை, துளசி செடியோடு சேர்த்து எப்படி வழிபாடு செய்வது. வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும், காலை சாளக்கிராமத்தை எடுத்துவந்து துளசிச் செடிக்கு முன்னால் ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து, பால் அபிஷேகம் செய்து, துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, துளசிச் செடிக்கு முன்பாக மணப்பலகையின் மீது அல்லது தாம்புல தட்டில் மேலோ வைக்க வேண்டும். சாளக்ராமத்தின் மேல், ஒரு பூவும் வைத்து விடுங்கள். துளசி மாடத்தில், தீபம் ஏற்றி, தீபாராதனை காட்டி, கற்பூர ஆரத்தி காட்டி, நைவேத்தியம் படைத்து உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

பூஜை நிறைவடைந்துவிட்டது. துளசி செடியை எத்தனை முறை வலம் வரவேண்டும்? துளசி செடியை கட்டாயம், தினம்தோறும் 9 முறை வலம் வர வேண்டியது அவசியமானது. உங்களால் முடியும் என்றால் 27 முறையும் வலம் வரலாம். பூஜை முடிந்தவுடன் சாளக்கிராமத்தை பத்திரமாக பூஜை அறையில் சேர்த்துவிடுங்கள். உங்கள் வீட்டு துளசி செடியில், உங்கள் வீட்டில் உள்ள நபர்கள் தவிர, வெளியாட்கள் பூஜை செய்யக்கூடாது. வெளியாட்கள் தொடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துளசிச் செடியை வைத்திருப்பவர்கள் வீட்டில் துர்மரணம் கட்டாயம் ஏற்படாது. தீராத நோய் உங்கள் வீட்டு பக்கம் கூட வராது. ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. எப்படிப்பட்ட தரித்திர நிறையை கொண்டுள்ள குடும்பமும், விரைவில் சுபிட்சம் அடைய வேண்டும் என்றால், உடனடியான பலனை கொடுக்க கூடிய ஒரே வழிபாடு ‘துளசி தேவி’ வழிபாடு மட்டும்தான். துளசி வழிபாடு செய்தால், உங்கள் வீட்டில் இருக்கும் நகை கூட, அடகு கடைக்கு செல்லாது. நகை வாங்கும் யோகம் உங்களை வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். பிறகு உங்கள் வீட்டில் சரித்திரத்திற்கு இடம் ஏது? இறுதியாக ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மாமிசம் சாப்பிடாமல் துளசி தேவியை வழிபடும் பட்சத்தில் தான், அதனுடைய பலனை நம்மால் முழுமையாகப் பெற முடியும். இவ்வாறு முறைப்படி உங்கள் வீட்டில் துளசி தேவியை வழிபாடு செய்து பாருங்கள்! 7 நாட்களில் உங்களுடைய தீராத கஷ்டம் எதுவாக இருந்தாலும் அதற்கான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.