வீட்டில் கெட்ட சக்தியின் ஆதிக்கம் உள்ளது என்பதை உணர்த்தும் செல்லப்பிராணிகள் !! நாய் பல்லி இப்படி இருந்தால் அதை அலட்சியப் படுத்தாதீர்கள்…

பொதுவாகவே, நடக்கப்போகும் கெட்டதை முன்கூட்டியே உணரும் சக்தி வாயில்லா ஜீவனுக்கு உள்ளது என்று சொல்லுவார்கள். இந்தக் கூற்று, நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் பொருந்தும். வீதிகளில் இருக்கும் நாய்கள் ஊலை இட்டாலும், அழுதுகொண்டு இருந்தாலும், அந்த ஊரில் ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்று நம், முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது மரணம் நிகழும் என்பதை அறிவுறுத்தும், அறிகுறிதான் நாயின் அழுகை என்ற ஒரு நம்பிக்கை நம் எல்லோரிடத்திலும் உள்ளது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இப்படியாக செல்லப்பிராணிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும், கட்டாயம் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. அந்த வரிசையில், நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வைத்தே, நம் வீட்டில், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை, முன்பே நம்மால் கண்டுபிடித்து விட முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் ஒரு நாய் இருக்கின்றது என்றால், அது குறைத்துக்கொண்டு, அங்குமிங்குமாக திரிந்து கொண்டு, துருதுருவென்று தான் இருக்கும். நம்முடைய வீட்டில் பல்லிகள் இருந்தால், அவ்வப்போது அது சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

பறவைகளை வளர்த்தால் அது சலசலவென்று சத்தம் போட்டுக்கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கும். பூனை என்று வளர்த்தால் அது கத்திக்கொண்டே இருக்கும். இவ்வாறு செல்லப் பிராணிகள் என்று சொன்னால் அது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவை. இதற்கு மாறாக உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள், காரணமே தெரியாமல் திடீரென்று அமைதியாக இருக்கின்றது. உடல்நிலை சரியில்லை என்றால் அது வேறு, எந்த காரணமும் இல்லை. ஆனால் அவை, திடீரென்று வீட்டில் சத்தம் போடுவதை நிறுத்தி விட்டது. உங்களுடைய வீடு வழக்கத்திற்கு மாறாக நிசப்தம் ஆகிவிட்டது. சில பேர், வீடுகளில் எல்லாம் காக்கை, குருவிகளுக்கு சாப்பாடு வைத்தால் கூட, அதை வந்து பறவைகள் சாப்பிடாது. அப்படியே பறவைகள் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தாலும், அது சத்தம் எழுப்பி ஆனந்தமாக விளையாடாதே. அப்போது இந்த மாதிரி சூழ்நிலையில், சில குடும்ப தலைவிகளுக்கு மனதில் ஒரு உறுத்தல் ஏற்படும். என்றைக்கும் இல்லாமல், இன்றைக்கு நம்முடைய வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறதே, என்பதை அவர்களுடைய ஆழ் மனது கட்டாயம் உணர்த்தும். இதை கட்டாயம் நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது.

இப்படி இருக்கும் பட்சத்தில், ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தியின் மூலம், உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடிகொண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது கண்திருஷ்டி ஆக இருக்கலாம். கண்ணுக்குத்தெரியாத துர்தேவதைகளின் அதிகமாக இருக்கலாம். எதிர்பாராத ஒரு நபர் உங்கள் வீட்டிற்குள், வந்து சென்றதும் தாக்கமாக கூட இருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத அந்த கெட்ட சக்திகளுக்கு பயந்த, செல்லப்பிராணிகள் சத்தம் போடாமல் இருப்பதற்குக் கூட வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலைமையை நம்முடைய வீட்டில் எப்படித்தான் சரி செய்வது? நம் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் துருதுருவென்று, பழைய நிலைமைக்கு வந்தால்தான் நம் வீட்டின் நிலைமையும் சரியானது, என்று அர்த்தமாகும். அதற்கான வழியும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் என்றால், தூசு தும்புகள் கொண்ட அழுக்கு ஒட்டடையும் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் கல்லுப்பு, மஞ்சள், வேப்பிலை சேர்த்த தண்ணீரை கொண்டு துடைக்க வேண்டும்.

கல் உப்பைப் போட்டு உங்கள் வீட்டை சுத்தம் செய்வதாக இருந்தால் அதை ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை அன்று செய்யாதீர்கள். மற்ற கிழமைகளில் செய்யுங்கள். உங்களுடைய வீட்டில், மந்திரங்களை, அம்மன் பாடல்களை சத்தமாக ஒலிக்க விடுங்கள். காலை மாலை இருவேளையும் தீபவழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும். அம்மன் கோவில்களில் இருந்தோ அல்லது சிவன் கோவில்களில் இருந்து தீர்த்தங்களைக் கொண்டு வந்து வீடு முழுக்க தெளித்து விட வேண்டும். வீடு முழுக்க கோமியம் தெளிக்கலாம். கட்டாயமாக, வெண்கடுகு சாம்பிராணி தூபம் வீட்டின் மூலை முடுக்குகளில் காண்பிக்க வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகள் வசிக்கும் இடம் என்று ஒன்று இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் இந்த வெண்கடுகு தூபத்தை போட்டு விடுங்கள். முடித்தால், நாட்டு மருந்து கடைகளில் சமித்து குச்சி, விரட்டி விற்கும் அல்லவா அதை வாங்கி கொளுத்தி, அதில் தூபம் போடுங்கள். இப்படியாக உங்களுடைய வீடு எப்போதும் வாசம் நிறைந்ததாக இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் அந்த கெட்ட சக்தியானது கட்டாயம் வெளியேறிவிடும். அப்படியும் உங்கள் வீட்டில் பிரச்சனை இருப்பது போல உணர்ந்தால், சிறிய அளவிலான கணபதி ஹோமம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.