வீட்டில் தீராத பண கஷ்டமும் தீரும். பெண்கள், இந்த சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால் !! அது என்ன மாற்றம் ?? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா !!

ஒரு வீட்டை லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ளக்கூடிய பொறுப்பு பெண்களிடத்தில்தான் உள்ளது. வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டியது பெண்களின் கடமை. எந்த காலம் வந்தாலும், இதை மாற்றிவிட முடியாது. சில ஆண்கள் தங்களுடைய வீட்டை பொறுப்பாக பார்த்துக் கொள்வார்கள். அது தவறு என்று சொல்லவில்லை. இருப்பினும் பெண்களுக்கு இருக்கக்கூடிய கடமைகளிலிருந்து, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தவற கூடாது. சில வீட்டில் பெண்கள் தங்களுடைய கடமைகளிலிருந்து தவறாமல் இறந்தால் கூட, அந்த வீட்டில் இருப்பவர்களும் கஷ்டப்படுவதற்க்கு என்ன காரணம்? அந்த வீட்டு உறுப்பினர்கள் செய்த பாவ புண்ணியக் கணக்கும் இதில் அடங்கும் அல்லவா? நாம் செய்த பாவ கணக்கிற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.

சரி, கஷ்டப் படக் கூடிய குடும்பத்தை, கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற, நம்முடைய வீட்டு பூஜை அறையை எப்படி பராமரிப்பது? தெரிந்து கொள்ளலாமா?பொதுவாகவே, நம் வீடாக இருந்தாலும் சரி அல்லது பூஜை அறையாக இருந்தாலும் சரி, நாம் பயன்படுத்தும் பாத்ரூமாக இருந்தாலும் சரி, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இது நாம் எல்லோரும் அறிந்ததே. நம் வீட்டில் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொண்டாலும், முடிந்தவரை உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அலமாரிகளில் விரிக்கும் துணியாக இருந்தாலும், பேப்பராக இருந்தாலும் அதை பச்சை வண்ணத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பூஜை அலமாரிக்கு போடப்படும் ஸ்கிரீன் துணியாக இருந்தாலும், அது பச்சை வண்ணத்தில் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய வீட்டில் இருக்கக் கூடிய தெய்வத்தின் பழைய திருவுருவப்படங்கள் எப்படியாக இருந்தாலும் அது அப்படியே இருக்கட்டும்.

அதை மாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. இருப்பினும், இனி புதியதாக தெய்வங்களின் திரு உருவப் படங்களை வாங்குவதாக இருந்தால், அந்த படங்கள் ஆடை ஆபரண அலங்காரத்தோடு, முடிந்தால் பச்சைநிற ஆடை ஆபரண அலங்காரத்தோடு இருக்கும்படி வாங்குவது, நம் வீட்டிற்கு மேலும் அதிர்ஷ்டத்தை தேடி தரும். அதாவது பெருமாள் படமாக இருந்தால் அவர் அப்படியே ஜொலிக்க வேண்டும். மகா லட்சுமியின் திருவுருவம் படமாக இருந்தால், அவரை சுற்றி தங்க நாணயங்கள் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட படங்களை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது, அந்த விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நாம் எதைப் பார்க்கிறோமோ, நம் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அதைத்தான் இந்தப் பிரபஞ்சம் நமக்கு தரும். இறைவனின் திருவுருவப் படத்தை யாருக்காவது பரிசாக கொடுக்க வேண்டும் என்றாலும், மேற்குறிப்பிட்ட விஷயங்களை கவனித்து வாங்கிக் கொடுங்கள். கொடுப்பவருக்கும் நன்மை வந்து சேரும். வரிசை பெறுபவருக்கு நன்மையே நடக்கும். இந்த பச்சை நிறத்திலும் ஒரு ரகசிய சூட்சமும் ஒளிந்து தான் உள்ளது.

பச்சை நிறம் என்பது புதனுக்குரிய நிறமாக சொல்லப்பட்டுள்ளது. புதன் பகவானின் அருளாசியை நாம் பெற்று விட்டோமேயானால், நம் வீட்டில் உள்ளவர்களின் புத்தி, கூர்மையாகும். வீட்டில் உள்ள குழந்தைகள் நன்றாக படிக்க தொடங்கி விடுவார்கள். வீட்டில் பண கஷ்டம் வராது. குறிப்பாக இந்த பச்சை நிறத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருப்பவர்களுடைய மனக்குழப்பம் நீக்கும். மனநிம்மதியை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மன நிம்மதி கிடைத்து விட்டால் நம் தானாக பணம் வரப்போகிறது. புதன் பகவானின் அருளாசி கிடைக்க வேண்டுமென்றால், பெருமால் வழிபாடு மிகவும் சிறந்தது. நீங்கள் பெருமாள், வழிபாட்டில் கவனித்தீர்களா என்பது தெரியவில்லை. ‘பெருமாளுக்கு ஆடை அலங்காரம் அணிகலன்கள் சூட்டும்போது, பச்சை நிற மரகதக் கல்லுக்கு முதலிடம் கொடுக்கப்படும். தங்கம் அல்லாத கவரிங் நகைகளை வைத்து அலங்காரம் செய்யும்போது கூட, பச்சை நிற கல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதேபோல் தான், பச்சை நிற குங்குமத்திற்கும், பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்று சொல்லுவார்கள். உங்கள் வீட்டிலும் சரி, உங்கள் வீட்டு பூஜை அறையிலும் சரி, தெய்வத்தின் திரு உருவத்தை படங்களிலும் சரி, பச்சை நிறம் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொண்டால், வீட்டில் வரக்கூடிய கஷ்டங்களை கட்டாயம் நம்மால் தவிர்க்க முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.