வீட்டில் தீராத வறுமை நீங்க எந்த நேரத்தில் எந்த தீபம் ஏற்றினால் நல்லது தெரியுமா ??

நம் வீட்டில் இருக்கும் இருளை நீக்குவதற்காக ஏற்றப்படுவது தான் தீபம். இந்த தீபமானது வீட்டில் இருக்கும் இருளை மட்டுமல்ல, நம் மனதில் இருக்கும் இருளையும் நிச்சயம் போக்கும். நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக மாற்றக்கூடிய இந்த தீபத்தை, நம்முடைய வீட்டில் எந்தெந்த நேரத்தில், எந்தெந்த திசை நோக்கி ஏற்றினால் என்னென்ன பலனை அடையமுடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி, செல்வ செழிப்போடு வாழ, பின்சொல்லக்கூடிய முறைப்படி வீட்டில் நம்பிக்கையோடு தீபம் ஏற்றினால் நிச்சயம் கைமேல் பலனை அடையலாம். கலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.30 க்குள் இருக்கக்கூடிய இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால், வீட்டிற்கு நல்லது என்று நிறைய பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இருப்பினும் எல்லோராலும் இந்த நேரத்தில் தீபம் ஏற்ற முடியாது. தியானத்தில் ஈடுபடுபவர்கள், இறைவனின் பாதங்களை சரண் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஞானிகள் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறை வழிபாடு செய்யலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் பளிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அது பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருக்கும் அமைதி தான். யாருடைய சத்தமும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கேட்பது கிடையாது. அமைதியான சூழலில் நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் முழு வெற்றியை தரும். இரண்டாவதாக, யாருடைய எதிர்மறை எண்ணங்களும் அந்த நேரத்தில் செயல்பட போவது கிடையாது. அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம், என்பதால் எதிர்மறை ஆற்றலும் அந்த சமயத்தில் கட்டாயம் இருக்காது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேண்டிய வேண்டுதல் பளிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் சுப காரிய தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அது கைகூடி வராது. தடைகள் அதிகமாக உள்ளது என்றால், காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டில் தீபம் ஏற்றலாம். வீட்டில் இருக்கக் கூடிய வறுமை நீங்க வேண்டும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டுமென்றால், மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும். வீட்டிற்குள் தீபம் ஏற்றும் போது எப்போதும் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுவது நல்லது. நிறைய பேர் வீட்டு வாசலில் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.

காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு, 6 மணி அளவில் வீட்டு வாசலில் தீபமேற்றும் பழக்கம் இருந்தாலும் சரி, அல்லது மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் தீபமேற்றும் பழக்கம் இருந்தாலும் சரி, எந்த திசை நோக்கி ஏற்றுவது? உங்களுடைய வீட்டிற்கு நவகிரகங்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், வீட்டில் உள்ளவர்களுக்கு நவக்கிரக தோஷம் நீங்க வேண்டும் என்றால், வீட்டு வாசலில் கிழக்கு திசை பார்த்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனும் பட்சத்தில் வடக்குப் பார்த்தவாறு, வீட்டு வாசலில் தீபமேற்றுவது நல்லது. இவ்வாறாக அவரவருடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள, மனதார தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் நிரந்தரமான, விரைவான தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.