வீட்டில் நிம்மதியே இல்லை !! என்று நினைப்பவர்கள் உங்கள் பிரச்சனை தீர வருகின்ற அமாவாசை அன்று இதை செய்து பாருங்கள் !!

வீட்டில் நிம்மதியே இல்லை, எப்போதும் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் நிலவுகின்றன என்றால் உங்கள் வீட்டின் மேல் திருஷ்டிகள் இருக்கின்றன என்பது அர்த்தம். வீடு என்றாலே சண்டை, சச்சரவுகள் இருக்கத் தானே செய்யும்? அதில் என்ன இருக்கு? என்று அலட்சியமாக நினைக்காதீர்கள்! எவ்வளவோ பேர் வீட்டில் நிம்மதியாக இருந்து கொண்டிருப்பார்கள். திடீரென அடிக்கடி பிரச்சினைகள் வரும். சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது. தொழில், வியாபாரம் கூட மந்தமாக செல்லும். எவ்வளவு பணத்தை முதலீடு போட்டு செலவு செய்தாலும், லாபம் அவ்வளவு பெரிதாக இருக்காது. பொருளாதாரமும் மிக மோசமாகி கொண்டே செல்லும். வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

இரவில் நன்றாகத் தூங்க முடியாது போய் தூக்கம் கெடும். இவையெல்லாம் மோசமான திருஷ்டியின் அறிகுறிகள். உங்கள் வீட்டில் திருஷ்டி இருந்தால் தான் இது போல ஏதாவது ஒரு பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கண் திருஷ்டி மிகவும் மோசமானது என்பார்கள். பெரியவர்கள் பலர் இவ்வாறு புலம்புவதை கேட்டிருப்போம். யாரு பட்ட கண்ணோ! இப்படி எல்லாம் ஆகுதே! என்று புலம்புவார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவது வழக்கம். இப்படியான பிரச்சனைகளுக்கு அமாவாசை தோறும் திருஷ்டி சுத்தி போடுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு விஷயம். அப்படி திருஷ்டி சுத்தி போடும் பொழுது, சூரியன் உதிக்கும் முன்னர் அல்லது சூரியன் மறைந்த பின்னர் இப்படி தூபம் போடுங்கள்.

இதை வீடு, கடை, தொழில் செய்யும் இடம் என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் குடும்ப நிம்மதிக்காக அமாவாசை அன்று இதை கட்டாயம் செய்யுங்கள். இப்படி செய்வதால் எந்த ஒரு கண் திருஷ்டியாக இருந்தாலும் அது உடனே நீங்கி விடும். உங்கள் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து மீண்டும் பழைய படி சந்தோஷமான, நிம்மதியான மனநிலைக்கு மாறுவீர்கள். நாட்டு மருந்து கடைகளில் இந்த பொருட்கள் எல்லாம் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. என்னென்ன பொருட்கள் என்பதை பார்ப்போம். துளசியிலை பொடி, வில்வயிலை பொடி, மருதாணியிலை பொடி, வேப்பிலை பொடி, சாம்பிராணி கட்டி, வலம்புரிக்காய், மஞ்சள் தூள். இந்த எல்லாப் பொருட்களையும் சம அளவில் எடுத்துக் கொண்டு காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் சூரியன் உதிக்கும் முன்னர் அல்லது மாலையில் சூரியன் மறைந்த பின்னர் தூபம் காட்டும் வேளையில், தூபத்தில் இதை சேர்க்க வேண்டும். இதன் தெய்வீக மணம், வீடு முழுவதும் பரவ செய்ய வேண்டும். இதனால் வீட்டின் மேல் இருக்கும் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், பொறாமைகள், துஷ்ட சக்திகள், துர்தேவதைகள் என்று எல்லாவிதமான கெட்ட சக்திகளிடமிருந்து உங்கள் வீட்டை பாதுகாத்து கொள்ள முடியும். எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தும் நீங்க செய்து, இந்த தூபம் உங்களை முன்னுக்கு கொண்டு வந்து விடும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட்டு, நிம்மதியாக தூங்க முடியும். தொழில், வியாபார பிரச்சனைகள் வெகு விரைவாக தீர்ந்து பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு விரைவாக உண்டாகும். சாம்பிராணி போடும் பழக்கம் இல்லாதவர்கள் அதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பெரிய மாற்றங்கள் நிகழும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.