வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருளை எப்போதுமே சேர்த்து வையுங்கள் !! வீட்டுப் பெண்கள் கையில், கடகடன்னு பணம் சேரும் !!

மகாலட்சுமி கடாட்சம் நம் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும் என்றால், அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தேடிப்பார்த்து, செய்து வருகின்றோம். சில பேருக்கு அந்த பரிகாரங்கள் உடனடியாக பலன் அளிக்கும். சில பேருக்கு பரிகாரங்கள் பலன் அளிப்பதற்கு, சில நாட்கள் எடுக்கும். எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கை இல்லாமல், எந்த ஒரு பரிகாரத்தையும் செய்வதில் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. அந்த வரிசையில் நம்பிக்கையோடு, மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யவேண்டும் என்று, நினைத்துக் கொண்டு, இந்த சின்ன பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்! அதன் பின்பு பணத்தை சேமித்து வையுங்கள், உங்களுக்கு இந்த பரிகாரம் ராசியை தந்து, பணம் மேலும் மேலும் சேர்ந்தால், பரிகாரத்தை விடாமல் அப்படியே பிடித்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய சர்க்கரை, பட்டை இந்த இரண்டு பொருளை வைத்து தான் இந்த பரிகாரம்.

அதாவது, ஒரு சிறிய கண்ணாடி டம்ளரோ அல்லது பவுலோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரையை போட்டு, அந்த சர்க்கரையில் ஒரு துண்டு பட்டை வைத்துவிடுங்கள். சர்க்கரையும் பட்டையும் இருக்கும் பௌலை, உங்கள் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு பகுதியில் பத்திரமாக எடுத்து வைத்து விட்டால், உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வால் என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை செய்து விட்டு, சமையல் அறையில் பணத்தை சேர்த்தால் அதிகமாக பெண்கள் கையில் பணம் சேரும் உங்களுக்கு இப்படி எல்லாம் பரிகாரம் செய்வதில் இஷ்டம் இல்லையா? உங்க வீட்டு சமையலறையில் சர்க்கரை டப்பாவை வச்சுருப்பீங்க! அதுக்கு பக்கத்துல, பட்டை டப்பாவை தூக்கி வச்சு பாருங்க! இரண்டு, மூன்று நாட்களிலேயே உங்கள் வீட்டு நிதி பிரச்சினையில் நல்ல வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். அடுத்ததாக, மகாலட்சுமி அம்சம் பொருந்திய உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டியில், அவரவர்க்கு இஷ்டமான பொருட்களை போட்டு வைத்திருப்பீர்கள்.

அதாவது கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, மஞ்சள்தூள், வெந்தயம், வர மிளகாய், மிளகு, சீரகம் இப்படி சமையலுக்குப் பயன்படுத்த கூடிய எந்த பொருளை வேண்டும் என்றாலும், அதில் போட்டு வைக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.கட்டாயம் அந்த அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய ஒரு பொருள் ‘சோம்பு’. சோம்புக்கு, பணத்தை ஈர்க்கக்கூடிய வசீகர சக்தி அதிகமாகவே உள்ளது. ஆகவே, இந்த சோம்பை உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு அஞ்சறைப்பெட்டியில் காசு சேர்க்கும் பழக்கம் இருந்தாலும், சரி, பழக்கம் இல்லை என்றாலும் சரி, ஒரு பதினோரு ரூபாயை மட்டும் அஞ்சறைப் பெட்டியில், சிறிய சிறிய கிண்ணங்கள் இருக்கும் அல்லவா? அதற்கு அடியில் வைத்து விடுங்கள். உங்களுக்கான நிரந்தரமான அதிர்ஷ்டத்தை தரக்கூடிய சக்தி அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பணத்திற்கு உள்ளது.

இதேபோல், உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் மசாலா பொருட்கள் வைத்திருந்தாலும், வாசனை பொருட்களான ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பேப்பரில் மடித்து, அந்த அஞ்சரை பெட்டியில் வைப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. (அதாவது சில பேர் வீடுகளில் மசாலா பொருட்களுக்கான அஞ்சறைப்பெட்டி என்பது தனியாக இருக்கும். வாசனை பொருட்களான, பிரியாணிக்காக பயன்படுத்தும் பொருட்களுக்காக, அஞ்சரை பெட்டி தனியாக இருக்கும். உங்கள் வீட்டில் இரண்டு அஞ்சரைப்பெட்டி இருந்தாலும்கூட, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு வைத்திருக்கும் அஞ்சறைப்பெட்டி டப்பாவிலும் பட்டை, லவங்கம், ஏலக்காய் கட்டாயம் இருக்க வேண்டியது குறிப்பிடத்தக்க ஒன்று.) மகாலட்சுமி வாசம் செய்யும் அஞ்சறைப்பெட்டி டப்பாவில், கட்டாயம் ஏலக்காய், பட்டை, லவங்கம் வாசம் வீசுவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். அவ்வளவு தான். முயற்சி செய்து தான் பாருங்களேன்? அங்க இருக்குற பொருளை தூக்கி, இங்க வைக்க போறீங்க! இங்க இருக்குற பொருளை தூக்கி, அங்க வைக்கப் போறீங்க! அவ்வளவு தான், எப்படி செய்தாலும் கைக்கு காசு வந்தால் சரிதான்.