வீட்டு வாசலில் இருக்கக்கூடாத மூன்று விஷயங்கள் என்னவென்று உங்களுக்கு தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் !!

ஒவ்வொருவரின் குடும்ப வாழ்க்கைக்கும் வாழும் அந்த வீட்டிற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். அதனால் தான் உயிரற்ற வீட்டிற்கும் நிறைய சாஸ்திர, சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டிற்கு என்று தனியாக வாஸ்து ஜோதிடம் என்கிற ஜோதிட சாஸ்திரமே படைக்கப்பட்டுள்ளது. முறையான வாஸ்து பார்த்து கட்டிய வீடு காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்பார்கள். அதில் வாழ்பவர்களும் மன நிம்மதியுடன், செல்வ செழிப்புடன் வம்சா வழியாக தொடர்ந்து வாழ முடியும் என்பார்கள். அத்தகைய வீட்டின் முன் வாசலில் இந்த 3 விஷயங்கள் இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். எந்த மூன்று விஷயங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயம். தண்ணீருக்கும் வாஸ்து பார்க்கணுமா? என்றால் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று தான் கூற வேண்டும். வாஸ்து குறிப்புகளில் தண்ணீருக்கு நிறைய சாஸ்திரங்கள் உண்டு. குடிக்கும் தண்ணீரை எந்தத்திசையில் வைக்க வேண்டும். எந்த திசையில் நின்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தனியே ஒரு பதிவு போடும் அளவிற்கு சாஸ்திரங்கள் தண்ணீருக்கு வாஸ்துவில் உண்டு. ஆனால் நாம் பார்க்க இருப்பது அது அல்ல.வீட்டின் முன் கதவை திறந்த உடன் தண்ணீர் இருப்பது செல்வ செழிப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது. தண்ணீரை எந்த அளவிற்கு செலவழிக்கிறோமோ அந்த அளவிற்கு உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டமும் தடைபடும். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சொட்டு சொட்டாக தண்ணீரைச் சிந்த விடுவது, சமையலறை தரையில் எப்போதும் தண்ணீருடன் வைத்திருப்பது போன்ற விஷயங்கள் நிச்சயம் செல்வ செழிப்பை குறைக்கும்.

அதுபோல வீட்டு வாசலுக்கு நேர் எதிரே சரியாக அடிபம்பு, கிணறு, அடி தொட்டி, குழாய் போன்றவை இருப்பது அந்த வீட்டின் லட்சுமி கடாட்சத்தை குறைக்கும் என்கிறது சாஸ்திரம். தெரியாமல் அப்படி அமைத்து கொண்டவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அடியில் புதைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஓரளவிற்கு அதன் பாதிப்புகள் தடுக்கப்படும்.வீட்டிற்கு தரையில் ஒட்ட பயன்படும் கிரானைட் கல்லை பெயர் பலகையாக நிச்சயம் பொறுத்தி வைக்கக்கூடாது. கிரானைட் கல் காலப்போக்கில் மங்கும் தன்மையுடையது. அதனால் வீட்டின் பெயர் பலகை கிரானைட் கல்லால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. ஆடம்பரத்துக்காக நாம் பயன்படுத்தும் கிரானைட் கல் வாஸ்துவை பொருத்தவரை அவசியமற்றது. அதில் உயிரோட்டம் என்பது குறைவாக இருக்கும் என்கிறது சாஸ்திரம்.

அடுத்ததாக வீட்டின் வாசல் முன்னால் தற்போது வீடு கட்டுபவர்கள், அல்லது கட்டி முடித்தவர்கள் பெரும்பாலும் சாமி படங்கள் பதித்த டைல்ஸ்களை ஒட்டி வைக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. முந்தைய காலத்தில் விநாயகர் விக்ரஹத்தை வீட்டின் வாசலில் சிறிய அளவில் வைப்பார்கள். அதற்கு பதிலாக இதுபோன்ற விஷயங்கள் இப்போது செய்யப்படுகிறது. அதில் இருக்கும் சாமி படம் முருகன் மற்றும் விநாயகரை தவிர வேறு எந்த படமாகவும் இருக்கக் கூடாது. குறிப்பாக மகாலட்சுமி, குபேரர், பெருமாள் போன்ற செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் தெய்வ படங்கள் நிச்சயம் வீட்டிற்கு முன்னால் ஒட்டி வைக்கக் கூடாது. செல்வ வளத்தை தரும் இந்த தெய்வ படங்களை நம் வீட்டிற்குள் வருகின்ற மாதிரி வைக்கலாமே தவிர எதிர்ப்புறமாக வீட்டை விட்டு செல்லும்படி வைக்கக்கூடாது என்பார்கள். இதனால் எதிர் வீட்டில் இருப்பவர்களுக்கு தான் செல்வ வளம் பெருகும், உங்களுக்கு அல்ல. இந்த மூன்று விஷயங்களும் வீட்டின் முன் கட்டாயம் இருக்கக் கூடாது என்பதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.