வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வத்தை, தடையில்லாமல் வீட்டிற்குள் வரவைக்க இதை செய்தாலே போதும் !! நம் வீட்டிற்குள் குலதெய்வம் தங்கிவிடும் !!

சில வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக தலை விரித்தாடுவதற்கு, எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கும். எதிற்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் தெய்வங்கள் குடியேர தயங்க தான் செய்யும். எந்த ஒரு வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ளாமல், இருள் சூழ்ந்த நிலையில் இருக்கின்றதோ, கட்டாயம் அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரும். வீண் சண்டைகள், உடல்நல கோளாறுகள், பணப்பிரச்சனை இப்படியாக, எதனால் பிரச்சனை வந்தது என்றே தெரியாமல், மூச்சு விடக்கூட நேரமில்லாத அளவிற்கு கஷ்டங்கள் வந்து நம் கழுத்தை நெறிக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் நம் ஜாதகத்தை கொண்டுபோய், ஜோதிடரிடம் காட்டினாலோ அல்லது நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கின்றதா, என்பதை கண்டறிய நம் வீட்டிற்கு யாராவது ஒரு அனுபவம் மிக்க, அருள் நிறைந்த ஜோதிடர்களை அழைத்து கேட்டாலோ, அவர்கள் சொல்லுவார்கள். ‘உங்களுடைய வீட்டில், தெய்வம் குடி கொள்ள வில்லை. உங்களுடைய குல தெய்வமாமும், உங்களை காக்கும் தெய்வங்கள் அனைத்தும் வீட்டு வாசலிலேயே நிற்கின்றது, என்று’!இந்த சூழ்நிலையில் நம் வீட்டை எப்படி காப்பது?

நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய நல்ல சக்திகளை, சிலசமயங்களில் எதிர்மறை ஆற்றல்கள் தடுத்து நிறுத்தும். சில சமயங்களில் உங்களுக்கு கெடுதல் நினைக்கக்கூடிய, உங்களுடைய எதிரிகள் கூட தெய்வங்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல், உங்களுக்கு உதவாமல் இருப்பதற்கு, தடுத்து நிறுத்த ஏதாவது ஒரு கட்டுப் போட்டு வைத்திருக்கக் கூட வாய்ப்பு உள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, நம் வாசலில் நிற்கும் இறைவனை எவ்வாறு வீட்டிற்குள் அழைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் என்று சொல்லப்படவில்லை. சில பேருக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் உண்டு. இதனால் அவர்களுடைய வீடுகளில் பல இழப்புகளை சந்திக்கவும், நேரிடும். அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு பிரச்சனையின் வீரியம் என்னவென்று புரியும். சம்மந்தமே இல்லாமல் விபத்துக்கள் மூலம் கூட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழக்க நேரிடும். சரி, இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான சுலபமான ஒரு தீர்வு உள்ளது. நம்முடைய வீட்டில், இந்த பரிகாரத்தை நாமே செய்து கொள்ள முடியும். சிகப்பு நிற காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் போல பன்னீர், வாசனைப் பொருட்களான, ஜவ்வாது ஒரு சிட்டிகை, அக்தர் ஒரு சிட்டிகை, மல்லிகைப்பூ, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து தயாராக இருக்கும் சிவப்பு துணியை அந்த தண்ணீரில் நனைத்து முதலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தூணி வாசம் நிறைந்த துணியாக மாறிவிடும். முனை உடையாத 3 விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று மஞ்சளையும், வாசனை நிறைந்த அந்த சிகப்பு துணியில் வைத்து, சிகப்பு நூலால் ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு இந்த முடிச்சுக்கு சந்தன பொட்டு, குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை தீபத்தின் அருகில் வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, நில வாசப்படியில் ஒரு ஆணியில் இந்த முடிச்சை மாட்டிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு செய்யலாம். அல்லது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு செய்யலாம். வாசலில் மாட்டிய இந்த முடிச்சுக்கு தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றும்போது, தூபம் காட்ட வேண்டும். தூபம் காட்டி மனதார வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனை தீர வேண்டும். வீட்டு வாசலில் நிற்க கூடிய தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று பிரார்த்தனை இருக்க வேண்டும். 11 நாள் இந்த முடிச்சு அப்படியே, நில வாசப்படியில் இருக்கட்டும். 11 வது நாள் மாலை 6 மணிக்கு, வீட்டில் எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போல செய்து, வாசலில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து பூஜை அறைக்கு கொண்டு வந்து வைத்து, அந்த முடிச்சை பூஜை அறையிலேயே மீண்டும் ஒரு 5 நாட்கள் வைத்து பூஜை செய்து வர வேண்டும். உங்கள் வாசலில் 11 நாட்கள் வாசம் நிறைந்த இந்த மஞ்சளை வைத்து, மனநிறைவோடு வீட்டிற்குள் உங்களது தெய்வத்தை அழைக்கும் போதே, அந்த தெய்வமானது இந்த மஞ்சளில் குடியேறியிருக்கும். குலதெய்வம் குடியிருக்கும் அந்த மஞ்சள் முடிச்சை கொண்டு வந்து, உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் பட்சத்தில், நிச்சயம் அந்த குலதெய்வம் உங்கள் வீட்டிலும் குடியேறும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த பூஜையை செய்து முடித்த பின்பு, உங்களை அறியாமலேயே உங்களுடைய வீட்டில் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனநிம்மதி ஏற்படும். ஏதோ ஒரு விடிவுகாலம் பிறந்தது போல ஒரு உணர்வை நிச்சயம் உங்களால் உணரமுடியும். உங்களுக்கு வீட்டில் தீராத துயரம் இருந்து வரும் பட்சத்தில், நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். பூஜை நிறைவடைந்து உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்த பின்பு, அந்த மஞ்சளை எடுத்து மங்கல காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.