வெட்டிவேரை உருவேற்றி அதன் சக்தியை இரண்டு மடங்காக மாற்ற மந்திரம் !! இப்படி செய்தால் வெட்டிவேரின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் !!

நம்மில் பல பேருக்கு வெட்டிவேரின் மகத்துவம் தெரிந்திருக்கும். பொதுவாகவே, வெட்டிவேரை நம் வீட்டில் வைத்திருந்தாலும், நம் வீட்டின் வாசற்படியில் கட்டி தொங்கவிட்டிருந்தாலும், மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். கெட்ட சக்திகளை விரட்ட கூடிய இந்த வெட்டி வேருக்கு, எந்த ஒரு மந்திரத்தையும் கிரஹித்துக் கொண்டு, அதன் உருவை தனக்குள் வாங்கிக் கொள்ளும் சக்தி அதிகமாகவே உள்ளது. அந்த வரிசையில், எந்த ஒரு கெட்ட சக்தியும், எந்த ஒரு தீவினையும் நம்மை அண்டாமல் இருக்க, இந்த வெட்டி வேருக்கு உருவேற்ற கூடிய மந்திரம் எது, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெட்டிவேரை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, அதன் பின், அந்த வெட்டிவேரை மஞ்சள் துணியால் கட்டி உங்கள் நில வாசப்படியில் தொங்க வைத்தீர்கள் என்றால், வீட்டிற்குள் இருக்கும் தீவினைகளும் வெளியே ஓடிவிடும். வெளியிலிருந்து ஒரு சிறு கெட்ட தூசி துரும்பு கூட, உங்கள் வீட்டிற்குள் வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், அதிகப்படியான மன பயம் உள்ளவர்கள், மந்திரத்தை உருவேற்றிய இந்த வெட்டிவேரிலிருந்து, ஒரு சிறிய குச்சியை உங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்ளலாம். அதாவது சின்ன வெட்டிவேர் குச்சியை உங்கள் பர்ஸிலோ, பாக்கெட்டிலோ வைத்துக் கொண்டால் மன தைரியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில், தூக்கம் இல்லாதவர்கள், தேவையில்லாத கெட்ட கனவு வந்து தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில், இந்த வெட்டிவேரை தலையணைக்கு அடியில் வைத்து படுத்து கொள்வது நல்ல பலனைத் தரும். சிலபேருக்கெல்லாம், வீதியில் இருக்கும் திருஷ்டி கழிவுகளை தாண்டினால் கூட, காய்ச்சல் வந்துவிடும். உடல்நிலை மனநிலை சரியில்லாமல் போய்விடும்.

அதாவது, அடுத்தவர்களின் திருஷ்டி, அடுத்தவர்களின் கழிப்பு, சட்டென்று தாக்கக்கூடிய தேகம் எத்தனையோ பேருக்கு உள்ளது. மன உறுதி இல்லாதவர்களுக்கு, இப்படிப்பட்ட பிரச்சனை அடிக்கடி ஏற்படும். அந்த தொந்தரவு உள்ளவர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து, இந்த வெட்டிவேரிலிருந்து, ஒரு குச்சியை கைகளில் வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு பாதுகாப்பு தான். கூடவே வேப்ப இலைகளையும் வைத்துக் கொண்டால், எந்த ஒரு தீவினைகள் நம்மை தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. சரி, இந்த வெட்டிவேரை உருவேற்ற கூடிய அந்த மந்திரம் எது என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான அந்த மந்திரம் இதோ! ‘ஓம் ஆம் வம் இம் இம் ஓம்’ இந்த மந்திரத்தை வெட்டிவேரை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, 108 முறை உச்சரிக்க வேண்டும். அந்தக் காலத்திலேயே சித்தர்கள் இந்த மந்திரத்தை, வெட்டிவேருக்கு உருவேற்றி, கெட்ட சக்திகள் தாக்காமல் இருக்க பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எந்த ஒரு துன்பமும் நம்மை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், வெற்றி நம் வசம் இருக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.